செவ்வாய், 25 அக்டோபர், 2016

காலக்கிரமமாகத்தொகுக்கப் பட்ட நிகழ்ச்சிக் குறிப்புகள் | CHRONICLE (9)

b.யோசுவா காலத்தில் இஸ்ரவேல் தேசம்
யோசுவா 12, 13அதிகாரங்கள்
லேவி கோத்திரத்தார் ஆண்டவருக்கு என்று பிரித்தெடுக்கப்பட்டார்கள். எனவே
அவர்களுக்கு இஸ்ரவேலின் நடுவே சுதந்திரம் இல்லை. யோர்தானுக்குக் கிழக்கே
ரூபன், காத், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருக்கும், யோர்தானுக்கு மேற்கே
மற்ற 9.1/2 கோத்திரங்களுக்கும் சுதந்தரம் கிடைத்தது.
(சிமியோன், யூதா, செபுலோன், இசக்கார், தாண், ஆசேர், நப்தலி, எப்பிராயீம்,
பென்யமீன், மனாசேயின் பாதிக்கோத்திரம்)

கானான் தேசத்தை இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்தபின்இஸ்ரவேல்தேசமாக மாறிவிட்டது.

C.ராஜாக்கள் கலத்தில் இஸ்ரவேல் தேசம்.
யோசுவாவிற்குப் பிறகு தேசத்தில் இராஜாக்கள் இல்லை. நியாதிபதிகள் தேசத்தை
நியாயம் விசாரித்தார்கள். சாமுவேல் தீர்க்கதரிசி காலத்தில் தேவன்
சாமுவேல் மூலமாக சவுலை ராஜாவாக ஏற்படுத்தினார்
üஇஸ்ரவேலின் முதல் இராஜா=சவுல்.பென்யமீன் கோத்திரம்ம்; தகப்பன் பெயர்கீஸ்.

üஇரண்டாவது இராஜா=தாவீது;யூதா கோத்திம்; தகப்பன் பெயர் ஈசாய்.

üமூன்றாவது இராஜா=சாலொமோன்.யூதா கோத்திரம்; தகப்பன் பெயர் தாவீது. இந்த
3ராஜாக்களும் சமஸ்த இஸ்ரவேல் மேலும் இராஜாக்களாய் இருந்தனர். பின்பு
தேசம் பிரிக்கப்பட்டது. சவுலின் கீழ்ப்படியாமையினிமித்தம் தேவன்
இராஜ்யபாரத்தை தாவீதுக்குக் கொடுத்தார். தாவீது தேவனின்
இருதயத்திற்கு ஏற்றவனாய்க் காணப்பட்டான். தாவீதுக்குப் பிறகு அவன் மகன்
சாலொமோன் இராஜாவானான். அவன் கர்த்தரின் கட்டளைகளின்படி வாழாதபடியினால்
அவன் குமாரனாகிய ரெகொபெயாம் காலத்தில் யூதா, இஸ்ரவேல் என்று
பிரிக்கப்பட்டது. அதில் யூதா தேசத்திற்கு கர்த்தர் தாவீதின் நிமித்தம்
சாலொமோனின் மகன்(ரெகொபெயாம்) இராஜ்யபாரம்பண்ண அநுக்கிரகம் செய்தார்.

d.இயேசுவின் காலத்தில் இஸ்ரவேல் தேசம்.

இஸ்ரவேல் தேசம், கலிலேயா, சமாரியா, யூதேயா என 3 பிரிவாக இருந்தது.
ரோமர்கள் ஆட்சி செய்த காலத்தில் யூதா யூதேயாவாக மாற்றப்பட்டது; தலைநகர்
எருசலேம்
இஸ்ரவேல் ஏன் சமாரியாவாக மாறியது?

1இரா 16:23..... யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் 31ம் வருசம் இஸ்ரவேலின்மேல்
உம்ரி ராஜாவாகி 12வருசம் ராஜ்யபாரம் பண்ணினான். அந்த நாட்களில் உம்ரி
சமாரியா மலையை சேமேர் என்பவனிடமிருந்து 2தாலந்து வெள்ளிக்கு வாங்கி அதில்
கோட்டை கட்டினான். அதில் ஒரு நகரத்தையும் கட்டி அதை இஸ்ரவேலுக்குத் தலை
நகராக மாற்றினான். அந்தப் பட்டணத்துக்கு, அந்த மலையின் எஜமானாயிருந்த
சேமேரின் பெயரின்படியே சமாரியா என்று பெயரிட்டான். 2இரா 17:15.... ஓசெயா
ராஜாவின் ஒன்பதாம் வருசத்தில் அசீரியா ராஜா(அசீரியாவின் தலைநகரம் நினிவே
பட்டனம்) சமாரியாவைப்பிடித்து இஸ்ரவேலரை அசீரியாவுக்கு சிறையாகக்
கொண்டுபோனான். அப்பொழுது அங்கு புறஜாதிகள் வந்து இஸ்ரவேலில்
குடியேரி்னர். அவர்கள் யூதர்களோடு கலந்து வாழ்ந்தார்கள். அங்குள்ளவர்கள்
சமாரியர்கள் என அழைக்கப்பட்டனர். கலப்பின மக்களாகிய இவர்களை யூதர்கள்
வெறுத்தனர். எனவே இவர்கள் தேவாலயத்தில் தொழுதுகொள்ள முடியாத நிலை
ஏற்பட்டது. 2இரா 17:41....மனாசே என்ற ஆசாரியன் கெரிசிம் மலையில் ஒரு
தேவாலயத்தைக் கட்டி எருசலேம் தேவாலயத்தின் ஆராதனை முறைகளைக்
கொண்டுவந்தான். ஆனாலும் யூதர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. சமாரியர்
தேவனைக் கெரிசீம் மலையில் தொழுதுகொண்டு வந்தார்கள்(யோவா 4:20)
கலிலேயா:கலிலேயா என்பது இஸ்ரவேலின் ஒரு பகுதி. கலிலேயா கடலின் அருகில்
இருந்தபகுதி கலிலேயா என்று அழைக்கப்பட்டது. கலிலேயாவிலும் அநேக
புறஜாதிகள் இஸ்ரவேலருடன் கலந்து வாழ்ந்தனர். அங்கு வாழ்ந்த இஸ்ரவேலரை
கலிலேயர்கள் என்று அழைத்தனர். இவர்கள் படிப்பறிவு குறைந்தவர்கள்; எனவே
இவர்களையும் யூதர்கள் வெறுத்தனர். அநேகர் மீன் பிடிக்கும் தொழில்
செய்துவந்தனர்.

இயேசுவின் காலத்தில் இஸ்ரவேல் தேசம் ரோமர் ஆட்சியின் கீழ் இருந்தது.
üரோம பேரரசர்கள் தங்களுக்கு கீழ் தேசாதிபதிகளை ஏற்படுத்தி ஆட்சி செய்தார்கள்.

üரோம பேரரசர் எருசலேமை பிடித்தபின் யூதேயா ரோமர்கள் ஆட்சிக்குட்பட்டது.

üஇஸ்ரவேல் ரோமர்களின் ஆட்சியின்கீழ் வந்தது.

ரோம பேரரசர் அந்திப்பார்தோர் என்பவரை கி.மு.47ல் தேசாதிபதியாக இஸ்ரவேல்
தேசத்திற்கு ஏற்படுத்தினான்; இவன் இதுமேயா வம்சத்தைச் சேர்ந்தவன்; யூதன்
அல்ல.

அந்திப்பார்தோரின் பின்பு அவன் மகன் மகா ஏரோது என்பவன் தேசாதிபதியாக
வந்தான். இவன் கலிலேயா, சமாரியா, யூதேயா, பெரேயா என்ற இந்த 4
பகுதிகளையும் ஒன்றாக சேர்த்து யூதேயா என்று ஆட்சி செய்து வந்தான். யூதேயா
என்றால் யூதர்களின் சீமை என்று அர்த்தம். இவன் காலத்தில் அகஸ்து ராயன்
ரோம பேரரசனாக இருந்தான்.

மகா ஏரோது(கி.மு33-கி.பி 4)
Øஇயேசு பிறந்தபொழுது தேசாதிபதியாக இருந்தவன்.

Ø3 ஞானிகள்(சாஸ்திரிகள்) இயேசுவின் பிறப்பை இவனுக்கு அறிவித்தார்கள்.

Øஇவன் 2வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொன்றவன்.

Øயூதர்களுக்கு கி.மு.20-10ல் தேவாலயத்தைக் கட்டினான்.

இனுக்குப்பின் இவனின் பிள்ளைகள் தேசத்தை 4 பங்காக பிரித்து ஆட்சி செய்து
ஆட்சிசெய்து வந்தார்கள். ஆகவே இவர்கள் கால்பங்கு தேசாதிபதிகள் என்று
அழைக்கப்பட்டார்கள்.

இவர்கள் காலத்தில் திபேரியுராயன் ரோமபேரரசனாகவும், பிலாத்து
தேசாதிபதியாகவும் இருந்தார்கள்.

vஏரோதுஅர்கிலேயு

üயூதேயா, சமாரியாவின் கால்பங்கு தேசாதிபதி.

üஇவன் காலத்தில் யோசேப்பு(இயேசுவின் வளர்ப்புதகப்பன்) யூதேயாவிற்கு
வரபயந்து கலிலேயாவில் வந்து தங்கினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக