வெள்ளி, 28 அக்டோபர், 2016

இயேசு கிறிஸ்து இஸ்ரவேலுக்கு மட்டும் வந்தவரா? (2)

அடுத்து இயேசு கிறிஸ்துவும் தான் உலக இரட்சகர் என்பதை தெளிவாக வேஹத்தில்
சொல்லி உள்ளார்.

யோவான் 3:15. தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய
ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.

16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்
கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி,
இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை
உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை
அனுப்பினார்.

மேலே உள்ள வசனங்கள் தெளிவாக நமக்கு இயேசு கிறிஸ்து உலக இரட்சகராக
இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து, அவருடைய சீடர்களில்
ஒருவர் இஸ்ரவேலரிடம் பின்வருமாறு பேசினார்:

நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன்
சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று
தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின
உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள். அவர் உங்களெல்லாரையும்
உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன்
தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை
அனுப்பினார் என்றான். அப்போஸ்தலர் 3:25-26

இயேசுவின் ஊழியத்தின் இரண்டாவது பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது
என்பதை உணர்வது மிக முக்கியமானது ஆகும். இந்த ஊழியமானது எல்லா மனிதரின்
பாவங்களுக்கான பரிகார பலியாக அவர் தம் ஜீவனைக் கொடுப்பதாக இருந்தது. (1
தீமோத்தேயு 2:4-6). இது எல்லா தேசத்தவருக்குமான ஆசீர்வாதமாக இருந்தது.
இயேசு சிலுவையில் பாடுபட்டு சிந்திய இரத்தத்தினாலே எல்லா மனிதரின்
பாவங்களுக்கான தண்டனையைச் செலுத்தித் தீர்த்தார் என்ற நற்செய்தியே அந்த
ஆசீர்வாதம் ஆகும். இந்த இரட்சிப்பின் ஆசீர்வாதத்தை ஏற்றுக் கொள்கிற
எவருகுக்கும் தேவனுடன் நித்தியமான வாழ்வு உறுதியாக உண்டு எனச்
சொல்லப்பட்டிருக்கிறது.

எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து (அல்-மஸீஹ்) பாடுபடவும், மூன்றாம்நாளில்
மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும்
மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும்
அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. லூக்கா 24:46-47
மேசியாவாகிய இயேசுவில் இந்த இரட்சிப்பு அனைவருக்கும், யூதருக்கும் மற்ற
நாடுகளைச் சேர்ந்த அனைவருக்கும் இருக்கிறது என்பதை வேதவசனங்கள் தெளிவாகக்
கூறுகின்றன. இயேசு பூமியில் ஊழியம் செய்த நாட்களில், தம் சீடர்களை
இஸ்ரவேலரிடம் மட்டுமே போகும்படி சொன்னார் என்பதை நினைவில் கொள்க. ஆனால்
அவருடைய ஊழியத்தின் இரண்டாவது பகுதியை செய்து முடித்த பின்
(ஒப்புரவாக்குதலின் தியாக சிலுவை மரணத்திற்குப் பின்), அப்பொழுது அவர்
சீடர்களிடத்தில் என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்:

நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும்,சமாரியாவிலும்,
பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
அப்போஸ்தலர் 1:8 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும்
சீஷராக்கி, ….. மத்தேயு.28:19

இந்த வார்த்தைகளை இயேசு அறிவித்தபோது, அவர்தாமே தம் உலகலாவிய தன்மையை
உறுதிப்படுத்தினார்:

நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே
நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான். யோவான் 8:12

மீண்டுமாக இயேசு தன்னை அனைத்து மக்களுக்குமான இரக்கத்தில் சிறப்பான
ஆசீர்வாதம் அல்லது வெளிப்பாடு என குறிப்பிடுகிறார்.
இதிலிருந்து மாம்சத்தின் படி இயேசு கிறிஸ்து யூதர்களுக்கு மட்டும்
வந்தவராக இருந்தாலும் முழு உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்ப்பவர்
என்பதையும்,உலக இரட்சகர் என்பதையும் வேதாகம வசனங்கள் அடிப்படையில் நாம்
தேலிவாக அறிந்துகொள்ளலாம்.

"இஸ்ரவேலருக்கு மட்டுமேயான அடையாளம்" என்று சில இஸ்லாமிய அறிஞர்கள்ர்கள்
வாதிடுவது போல வேதாகமம் சொல்லுவது இல்லை. இயேசு கிறிஸ்துவை பற்றிய பல
தீர்க்கதரிசன வெளிப்பாடுகளின் நிறைவேறுதலில் அவர் இஸ்ரவேலுக்குள்
மேசியாவாக வருவார் என்பது ஒரு தீர்க்கதரிசனமாக உள்ளது.இதுமட்டுமே
இல்லாமல் பல தீர்க்கதரிசனங்கள் வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவை பற்றி
உண்டு.எனவே ஏதோ ஒரு வசனத்தை பிடித்து தங்கள் கருத்துக்களுக்கு ஆதரவாக
வேதாகம சத்தியங்களை புரட்ட நினைக்கும் இப்படிப்பட்ட நண்பர்கள் சத்தியத்தை
அறிந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுகொள்ளுகிறோம்….

ஈசா குரான்இணையத்தில் வெளியான இந்த கட்டுரையானது சில அதிகப்படியான
விவரங்களுடனும் ,மாற்றங்களுடனும் உங்களுக்கு தருவதில் மகிழ்ச்சி
அடைகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக