செவ்வாய், 25 அக்டோபர், 2016

காலக்கிரமமாகத்தொகுக்கப் பட்ட நிகழ்ச்சிக் குறிப்புகள் | CHRONICLE (14)

சில வருடங்களுக்கு முன்பு மாலை மலர், மாலை முரசு பேப்பரில் 666 எண்
தலையில் காணப்பட்ட ஒரு குழந்தை அமெரிக்காவில் காணப்பட்டதாக மக்கள்
ஆச்சரியப்படும் வகையில் செய்திகளை வெளியிட்டது.

1)உலக வங்கியின் சங்கேத எண் 666.

2)அமெரிக்க ஐக்கிய நாட்டு ஊழியர் அட்டை எண் 666.

3)அமெரிக்க கடன் அட்டை எண் 666ல் தொடங்குகிறது.

4)இஸ்ரேல் நாட்டிலுள்ள அரேபியருக்குச் சொந்தமான எல்லா பதிவு எண்களும்
666-ல் தொடங்குகிறது.

5)இஸ்ரேல் நாட்டின் அயல்நாட்டு தொலேபேசி எண் 666.

6)எருசலேம் நகராட்சியின் தொலைப்பேசி எண் 666-666 என்று 1977ம் ஆண்டு மாற்றப்பட்டது.

7)இன்டர்நெட் மூலம் செய்தியனுப்புவோர் முதலில் மூன்று WWW-வை
உபயோகப்படுத்த வேண்டும். எபிரேய மொழியில் W என்பது 6 என்ற எண்ணுக்கு
குறியீடு. ஆகWWW(World Wide Web)என்றால்666என்று வருகிறது.

8)இஸ்லாமியரின் திருக்குரானின் மொத்த வசனங்கள்6666.

9)Computer எனபதை அதன் A,B,C வரிசைப்படி 6-ஆல் பெருக்கினால் கிடைக்கும்
கூட்டுத்தொகை 666 ஆகும்.

A=6; B=12; C=18; D=24; E=30; F=36; G=42; H=48; I=54;
J=60; K=66; L=72; M=78; N=84; O=90; P=96; Q=102; R=108
S=114; T=120; U=126; V=132; W138; X144;
Y=150;Z=156.COMPUTER=18+90+78+96+126+120+30+108=666

போப்பாண்டவருடைய தலையில் வைக்கப்படுகிற கிரீடத்தில் பதிக்கப்பட்டிருக்கிற
எழுத்துக்களை ரோம எண்களின்படி கூட்டிப்பார்த்தால் 666 என்ற எண் வருகிறது.

போப்பாண்டவருடைய கிரீடத்தில் பதிக்கப்பட்டிருக்கிற வாக்கியமாவது:VICARIUS
FILII DEIஎன்பதே; இது'தேவ குமாரனுக்குப் பதிலாள்'என்னும் இலத்தீன் சொல்
ஆகும்
V=5
I=1
C=100
A=0
R=0
I=1
U=5
S=0
F=0
I=1
L=50
I=1
I=1
D=500
E=0
I=1
மொத்தம்=666

இன்றைக்கு 666 என்ற எண் ராசியான எண்ணாக பலராலும் கருதப்படுகிறது.
அதனால்தான் 6666 என்ற எண்களை தங்கள் வாகனங்களுக்கு வைக்கிறார்கள்.
இவ்வாறாக 666 எண் என்பது இப்போது எல்லோராலும் சர்வ சாதாரணமாக
விரும்பப்படுகிறது. மேற்கண்ட 666 எண்கள் எல்லாம் அந்திகிறிஸ்து வர ஒரு
முன்னேற்பாடுகள் எனலாம்.

இப்பொழுது கிரெடிட் கார்டுகளும், பணமும் சேர்ந்து பயன்படுத்தக்கூடிய
காலத்தில் இருக்கிறோம். ஆனால் இனி வரும் காலத்தில் பணப்புழக்கம்
முற்றிலும் போய்விடும்; பணம் கொள்ளையடிக்கப் படுவது, கள்ள நோட்டு
அச்சடிப்பு, கருப்பு பணம் பதுக்கி வைக்கப்படுவது ஹவாலா மோசடி போன்ற
சிக்கல்களை தீர்ப்பதற்கு ஒரு பண ஒழுங்குமுறை அவசியம்|கரன்ஸி (ரூபாய்)
நோட்டுகளை கையில் எடுத்துச் செல்வதால் ஏற்படும் பிரச்சனைகளுக்குப்
பரிகாரமாக அறிமுகமானதுதான் கிரெடிட் கார்டு(Credit Card) இந்த
எலக்ட்ரானிக் அட்டைகளை பயன்படுத்துவதிலும் பல இடையூறுகள் உருவாகின:

1)தொலைந்துவிடக்கூடியது
2)திருடப்பட வழியுண்டு
3)உடையக்கூடியது
4)தவறானவர்கள் பயன்படுத்தும் ஆபத்து
5)அவ்வப்போது புதுப்பிக்க வேண்டியுள்ளது
இதற்கு மாற்றுவழி Bio Chips:
மைக்ரோ சிப்ஸ்(Micro Chips) என்ற மிகச்சிறிய கருவியில் ஒருவருடைய சகல
விபரங்களையும் பதிவு செய்துவிடுதல்; டிரான்ஸ்பாண்டர் என்ற நுண்ணிய
கருவியின் மூலம் இதில் பதிவு செய்யப்பட்டதை வாசிக்கலாம். இதை
இயக்குவதற்கு மிகச்சிறிய லித்தியம் பேட்டரியையும் இணைத்து Bio Chips என்ற
உலோக மாத்திரைக்குள் அடக்கி வைத்து விடுகிறார்கள். இந்த பேட்டரி மனித
உடலிலுள்ள வெப்பத்தின் மூலம் ரீசார்ஜ் ஆகிக்கொண்டே இருக்கும். இந்த Bio
Chips அளவு ஒரு அரிசியின் அளவுதான் இருக்கும். இதை உடலில்
பதித்துவிட்டால் மேலே கூறப்பட்ட எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதாவது இது
தொலைந்துவிடாது; யாரும் திருட முடியாது; தவறானவர்கள் பயன்படுத்த வழி
இல்லை.

உடலில் எந்த இடத்தில் இதை பதிப்பது?

இந்த Bio-Chipஐ உடலில் எந்த இடத்தில் பதிய வைப்பது பொருத்தமாக இருக்கும்
என ஆராய நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.இதை ஆராய்ச்சி செய்து அறிக்கை
தாக்கல் செய்ய சுமார் 1.5 மில்லியன் டாலர் செலவானது(சுமார் 7கோடி ரூபாய்)
ஆய்வின் கண்டுபிடித்தது என்ன? உடலில் இரண்டு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே
இதை வைக்க பொருத்தமானது என்று முடிவு செய்யப்பட்டது:

1)நெற்றி
2)வலது கையின் வெளிப்புறம்

இது வேதாகமத்தின் தீர்க்கதரிசனத்தை மெய்ப்பிக்கிறது. அரிசி அளவுள்ள அந்த
சிறு கருவியியை நெற்றியிலோ, வலது கையிலோ பதித்துவிட்டால் இதை யாரும்
எடுக்க முடியாது; அப்படியே யாரும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற
முயன்றால் Bio-Chips(உலோக மாத்திரை) உலோக மாத்திரை உடைந்துவிடும்;
அதிலிருந்து வெளியேறும் ரசாயனப் பொருள் சம்பந்தப்பட்டவர்களின் உடலில்
பாதிப்பை உண்டுபண்ணும். அதிலிருந்து வெளியேறும் மைக்ரோ அலை மூலம்மத்திய
அலுவலகத்திற்கு (GPS-Global Positioning System)தானாய் செய்தி
சென்றடையும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை
கண்டறிந்து விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.

அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர்,
அடிமைகள் இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது, நெற்றிகளிலாவது
ஒரு முத்திரையை பெரும்படிக்கும்,
அந்த முத்திரையையாவது, அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின்
இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும்
விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.-(வெளி 13:16,17)
இதிலே ஞானம் விளங்கும். அந்த மிருகத்தின் இலக்கத்தை புத்தியுடையவன்
கணக்குப் பார்க்கக் கடவன்: அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது.அதினுடைய
இலக்கம் அறுநூற்றறுபத்தாறு(வெளி 13:16-18)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக