புதன், 26 அக்டோபர், 2016

சபையில் விசுவாசிகளுடன் பிணக்குகளின்றி வாழ வேதம் தரும் படிப்பினைகள் (2)

16.மற்றவர்களை கடித்துப் பட்சிக்கிறவர்களாயிருக்க வேண்டாம் சாந்தமாக இருங்கள்

கலா-5:15 நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள்.

17.மற்றவர்கள் கோபப்படக்கூடிய வகையில் நடந்து கொள்ள வேண்டாம். கிண்டலான
பேச்சுக்கள் மற்றும் நகைச்சுவைக்காக கூட மற்றவர்களை கோபப்படுத்த கூடாது.

கலா-5:26 ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர்
பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.

18.மற்றவர்களை மட்டம் தட்ட வேண்டாம், உயர்வாக எண்ணுங்கள்.

பிலி-2:3 ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.

19.மற்றவர்களை குத்தி காட்டுவதை விட தேற்றுங்கள்

1தெச-4:18 ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

1தெச-5:11 ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி,
ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.

20.மற்றவர்கள் சுக துக்கத்தில் அக்கறை காட்டி அவர்களை கவனித்து கொள்ளுங்கள்

எபி-10:24 ஒருவரையொருவர் கவனித்து..

21.விருப்பத்துடன் மற்றவர்களை உபசரியுங்கள்

1பேது-4:9 முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.

22.மற்றவர்களோடு சமாதானமாய் இருங்கள்

மாற்-9:50 ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்.

23.மற்றவர்கள் செய்யும் அநியாயத்தை சகித்துக் கொள்ளுங்கள்,
எல்லாவற்றுக்கும் நீதியை சரிக்கட்ட முயல வேண்டாம்

1கொரி-6:7 நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும்
குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச்
சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?

24.மற்றவர்களை நேசியுங்கள், அன்பாயிருங்கள்

யோவா-13:34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில்
அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற
புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

யோவா-13:35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால்
நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

நன்றி....!!!
சகோ.தினேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக