மேலும் பல வேத வசனங்கள்:
பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன்
நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். –1யோவான்
4:14,15
1Jn 4:15
Whoever confesses that Yahshua is the Son of YAHWEH, Elohim abides in
him, and he in Elohim. –Hebraic Roots Bible
Whosoever shall confess thatJesusis theSon of God,Godabideth in him,
and he inGod. - ASV
கடவுளாகிய பிதாவுக்கும் நமது இரட்சகர் யேசு கிறிஸ்துவுக்கும் உள்ள உறவு:
எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன்
என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக்
குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும்
சொன்னதுண்டா? எபிரெயர் 1:5
கிறிஸ்து தெளிவாக சொல்வது : ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர்
அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த
மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். -
யோவான் 17:3 ,5
ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும்
உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல
அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும்
பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். 1 கொரிந்தியர்
15:22 -24
Joh 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்
கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி,
இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
Joh 3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய
குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே
அவரை அனுப்பினார்.
இரண்டு பேர்
Joh 8:17 இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள்
நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.
Joh 8:18 நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன்,
என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறார் என்றார்.
1Co 11:3 ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும்,
ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன்
தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
Php 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக்
கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார்
பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன்
பிதாவையும் உடையவனாயிருக்கிறான். 1 யோவான் 2:22,23
1Ti 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது;
அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே
கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர்
மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 1 கொரிந்தியர் :86
முதற் பிறப்பு
G4416
πρωτοτόκος
prōtotokos
pro-tot-ok'-os
From G4413 and the alternate of G5088; first born (usually as noun,
literally or figuratively): - firstbegotten (-born).
Joh 8: 23, 58 அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான்
இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
என்றார். - 8: 23, 58
தேவ தன்மையில் இருந்த யேசு ஏன் மனிதராக வரவேண்டும்? கடவுள் ஏன் கடவுளின்
வார்த்தையாக கடவுளுடன் இருந்தவரை தேவ தன்மையிலிருந்து மனிதத்தன்மைக்கு
மாற்றி இந்த உலகில் மனிதனாக பிறக்க அனுப்ப வேண்டும்? வேதாகமம் என்ன
சொல்கிறது?
Heb 2:13 நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும்,
தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.
Heb 2:14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும்
உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும்
உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே
அழிக்கும்படிக்கும்,
Heb 2:15 ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள்
யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
Heb 10:5 ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும்
காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு
ஆயத்தம்பண்ணினீர்;
Heb 10:7 அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ,
வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று
சொன்னேன் என்றார்.
Rev 3:14 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்:
உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு
ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
Joh 3:13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான
மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக