1995 ஜனவரியில் 117 நாடுகளால் கையெழுத்திடப்பட்டு
ஏற்றுக்கொள்ளப்பட்டுGATT ஒப்பந்தம்நிறைவேறியது. முதலில்முரண்டுபிடித்த
இந்தியா உலகம் போற போக்கு போனால்தான் கொஞ்சமாவது பிழைக்க முடியும்
என்றெண்ணி வேறு வழியின்றி GATT ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.GATT
ஒப்பந்தத்தைத் தொடர்ந்து WTO என்று சொல்லக் கூடியWorld Trade
Organisationஎன்ற அமைப்பு ஐ.நா.வால் உருவாக்கப்பட்டது. இன்று WTOதான் உலக
பொருளாதார மையமாக இருக்கிறது. மத, இன, தேசிய பேதங்கள் மறைந்து உலக உணர்வு
ஏற்படவேண்டுமென்று இன்று எங்கும் பிரச்சாரங்கள் செய்யப் படுகின்றன. இன்று
நாட்டரசுகள் இருப்பதுபோல, உலக அரசு ஒன்று உருவாகி நாமனைவரும் உலகமக்கள்
எனக் கருதும் போக்கு வருங்கால உலகில் வளர்ந்துவரும் என்றும்,
அப்படியிருந்தால்தான் இன்றைய பிரச்சனைகளுக்கும், பிற்போக்கு நிலைக்கும்
தீர்வாக விளங்கும் என்றும் இன்றைய பத்திரிக்கைகளின் செய்திகள்
கூறுகின்றன.
உலக வாணிபக் கழகம், உலக வங்கி, உலக வங்கி, உலக நீதிமன்றம், உலக
தொழிலாளர் நிறுவனம், உலக வானிலை அமைப்பு,உலக மதிநுட்ப சொத்து சார்ந்த
அமைப்பு(WIPO)இப்படி உலக அமைப்புகள் பல தோன்றியிருப்பதை'உலக அரசு'என்ற
பெயரால் இந்து நாளிதழ் வர்ணித்துள்ளது. -The Hindu 28.04.1994. இப்படி
உலக அரசு அமைந்தால் அதற்கு வித்திட்டவர் என்ற பெருமை மறைந்த
விஞ்ஞானிடாக்டர்.ஆல்பர்ட் ஐன்ஸ்டைனையேச் சாரும்.ஜனநாயக உலக அரசுஒன்றை
நிறுவ வேண்டும் என்பது அவர் கருத்தாகும்.1948ல் உலக சமாதான அறிஞர்
மாநாட்டின் அமைப்புக் குழுவுக்கு ஐன்ஸ்டைன் ஒரு செய்தியனுப்பினார்.
அந்தக் குழு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. போலந்தில்'ராக்லால்'என்னுமிடத்தில்
கூடிய மாநாடு அது.
அவர் அனுப்பிய செய்தியின் ஒரு பகுதி வருமாறு:
"நாடுகளுக்கு மேற்பட்ட அமைப்பு ஒன்றிற்கு மட்டும் ஆயுதங்களை உற்பத்தி
செய்யவும், வைத்திருக்கவும் அதிகாரம் இருந்தால் மக்கள் குலம்
அழிக்கப்படாமலும் ஒழிக்கப்படாமலும் இருக்க முடியும்".
தீவிரவாதத்தினால் பாதிக்கப்படுகிற இன்றைய உலக சமுதாயம் மேற்கண்ட
ஐன்ஸ்டைனின் கூற்றைக் குறித்து யோசிக்க தொடங்கிவிட்டது.'ஒரே உலக
இராணுவம்'என்று இப்போதே பல அரசியல் தலைவர்கள் சப்தம் போட
ஆரம்பித்துவிட்டனர்."உலக சமாதானம்"என்று கத்தோலிக்க போப்.ஜான்பால்
அடிக்கடி தன் சுற்றுப் பிரயாணங்களில் கூறிக் கொண்டு வந்தார். U.N.O.வின்
முன்னால் பொதுச்செயலாளர் யூதாண்ட் அணு ஆயுத அழிவினின்று உலகை காப்பாற்ற
வேண்டுமென்றால் ஒரே உலக தலைவன், உலக அரசு அமைய வேண்டுமென்று கூறினார்.
இப்படி உலக அரசு அமைந்தால் தன் அரசாங்கத்தின் முழு பொருப்பையும்
ஒப்படைக்கத்தயார் என்று இங்கிலாந்து பாராளுமன்றம்16.05.1960ல்
அறிவித்தது. மற்ற 9 நாடுகளும் இதை ஆதரித்தன. ஐரோப்பிய யூனியனின் முன்னால்
தலைவர்'ஹென்றி ஸ்பார்க்'பொருளாதாரத்தில் செழிப்பையும், சமுதாயத்தில்
சமாதானத்தையும் கொண்டுவரக்கூடிய ஒரு தலைவன், ஒரே தலைவன் எங்களுக்கு
வேண்டும்; அந்தத் தலைவன் தேவனாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப் போகிறோம்;
அல்லது சாத்தானாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அப்படிப்பட்ட
தலைவன் எழும்பி வரட்டும், அவனுக்காக காத்திருக்கிறோம் என்று கூறினார்.
ஒரே உலக அரசு, ஒரே பண ஒழுங்குமுறை, ஒரே உலக இராணுவம், ஒரே பொருளாதாரக்
கொள்கை, ஒரே உலகச்சட்டங்கள் இவ்வாறாக உலக அரசு அமையும் காலம்
வெகுதொலைவில் இல்லை என்பதை இன்றைக்கு நடக்கும் சம்பவங்களைக் கொண்டு நாம்
அறிந்துகொள்ளலாம். ஏற்கனவே ஒரு குட்டி உலக அரசாகஐரோப்பிய யூனியன்இயங்கிக்
கொண்டிருக்கிறது. அமெரிக்கா,கனடா, இரஷ்யா, ஜப்பான்,சீனா, ஆகிய நாடுகள்
ஐரோப்பிய யூனியனின் நெருங்கிய நட்பு நாடுகள் என்ற அந்தஸ்தில்
இருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைய உள்ளன. இந்த
ஐரோப்பிய யூனியனுடன் உலக நாடுகள் தஞ்சமடையும்போது தானாகவே உலக அரசு
அமைந்துவிடும். அப்படி அமைந்துவிட்டால் அதன் சர்வாதிகார தலைவன்அந்திக்
கிறிஸ்துஎன்பதில் ஆச்சரியப்படத் தேவையில்லை. இன்று அமெரிக்காவின்
டாலரைவிட யூரோவின் மதிப்பு 10ரூபாய் கூடுதலாக உள்ளது.
ஐரோப்பிய யூனியனின் அதாவது உலக அரசின் தலைவனாகிய அந்திக் கிறிஸ்து யூத
இனத்தைச் சார்ந்தவனாக இருக்கக் கூடும் என்று பலராலும் நம்பப்படுகிறது.
அந்திக் கிறிஸ்துவின் எண்666ஆகும். சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த
ஆங்கிலம் மற்றும் தமிழ் சினிமாப்படங்களில் 666 என்ற எண்ணை வைத்து
உருவாக்கி வசூலை அள்ளினார்கள். இன்றைய தமிழக பொதுமக்களுக்கு 666 என்றால்
பேய் என்ற விபரம் சினிமாப் படங்கள் மூலமாக தெளிவாக அறிந்து
வைத்திருக்கிறார்கள். பட்டிதொட்டியெல்லாம் இந்த 666 எண் இப்பொழுது
பிரபலமாகிவிட்டது. அமெரிக்காவில்LEFT BEHIND PART1, PART2என்ற சினிமா
படம் தயாரித்து வெளியிடப்பட்டு உள்ளது. அது இப்போது வெளிநாடுகளில் பல
சினிமா தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதில்வெளிப்படுத்தின
விசேஷத்திலும், சுவிசேஷங்களிலும், தானியேல், ஏசாயா தீர்க்கதரிசன
புஸ்தகங்களில் எழுதப்பட்டுள்ளதின்படி அந்தி கிறிஸ்துவின் வெளிப்படுதல்
எப்படியிருக்கும் என்பதை விளக்கியுள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக