செவ்வாய், 25 அக்டோபர், 2016

காலக்கிரமமாகத்தொகுக்கப் பட்ட நிகழ்ச்சிக் குறிப்புகள் | CHRONICLE (17)

"அன்றியும், அது மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின் மேல்
அக்கினியை இறங்கப்பண்ணத் தக்கதாக பெரிய அற்புதங்களைச் செய்யும்படி தனக்கு
கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்
போக்கி....வெளி.13:13,14. பொதுவாகவே ஏதாவது அற்புதம் செய்தால்தான் மக்கள்
ஒருவனை

நம்பக்கூடியவர்களாய் இருக்கிறார்கள். எனவே இந்தக் கள்ளத் தீர்க்கதரிசி
வானத்திலிருந்து அக்கினியை இறங்கப் பண்ணி பெரிய அற்புதங்களை செய்வான்;
அப்பொழுது பெருவாரியான உலக மக்கள் பிரமிப்படைந்து அவனை நம்புவார்கள்
என்று வேதத்தின் மூலம் நாம் அறிகிறோம்.

உலக சர்வாதிகரியாகிய அந்தி கிறிஸ்துவுக்கு வலது-கை போல் செயல்படும்
இவன், அந்தி கிறிஸ்துவை மக்கள் கடவுள் என்று நம்பும்படியாகச் செய்வான்;
சர்வாதிகாரியாகிய மிருகத்தின் தோற்றம்போல் உயிருள்ள சிலை போன்றதொன்றை
(ரோபோட்) ஏற்படுத்தி அதை பூமியின் குடிகள் வணங்கும்படி செய்லான். அந்தி
கிறிஸ்துவின் சிலை பேசத்தக்கதாகவும் தன்னை வணங்காத யாவரையும் கொலை
செய்யத்தக்கதாகவும் அந்த அந்தி கிறிஸ்துவின் சிலை உயிருள்ள சிலையாக
இருக்கும் என்றும் வேதம் கூறுகிறது.

"மேலும், அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின்
சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும் மிருகத்தின்
சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்
கொடுக்கப்பட்டது(வெளிப்படுத்தின விசேஷம் 13:15)
** போப் பெனடிக்ட் XVI ஏன் தனது பதவிக்காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்தார்?
வெளிப்படுத்தின விசேஷம் 17:11ல் கூறப்பட்டிருக்கும் ஏழிலிருந்து தோன்றிய
எட்டாவதவன்:

தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்ட இறுதிக்கால தீர்க்க தரிசனம்:

இதோ, கோபத்தின் முடிவுகாலத்திலே சம்பவிப்பதை உனக்குத் தெரிவிப்பேன்; இது
குறிக்கப்பட்ட முடிவுகாலத்துக்கு அடுத்தது. நீ கண்ட இரண்டு கொம்புள்ள
ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்; ரோமமுள்ள அந்த
வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த
பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா; அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக
நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள்
எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது. அவர்களுடைய
ராஜ்யபாரத்தின் கடைசிக்காலத்திலோவென்றால், பாதகருடைய பாதகம்
நிறைவேறும்போது, மூர்க்க முகமும் சூதான பேச்சுமுள்ள சாமர்த்தியமான ஒரு
ராஜா எழும்புவான். அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய
சுயபலத்தினாலல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம்
பெற்றுக்கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான்.
அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கைகூடிவரப்பண்ணி, தன் இருதயத்தில்
பெருமைகொண்டு, நிர்விசாரத்தோடிருக்கிற அநேகரை அழித்து, அதிபதிகளுக்கு
அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புவான், ஆனாலும் அவன்
கையினாலல்ல வேறுவிதமாய் முறித்துப்போடப்படுவான். சொல்லப்பட்ட
இராப்பகல்களின்தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ
மறைத்துவை; அதற்கு இன்னும் அநேகநாள் செல்லும் என்றான்.

தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு
நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால்
திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை.

யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட வெளிப்பாடு:
வெளி 17:1-18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக