ஞாயிறு, 23 அக்டோபர், 2016

காலக்கிரமமாகத்தொகுக்கப் பட்ட நிகழ்ச்சிக் குறிப்புகள் | CHRONICLE (3)

பாபேல் கோபுரம் கட்ட முயற்சித்து தோற்றுப்போன நிம்ரோத், பின்பு
கொல்லப்பட்டு அகால மரணமடைந்ததாகபாபிலோனிய சரித்திரம்கூறுகிறது.
நிம்ரோத்தினுடைய மரணத்தால் வேதனைப்பட்ட மக்கள் அவனுக்காக துக்கம் கொண்டாட
ஆரம்பித்தனர். நிம்ரோத்தின் மற்றொரு பெயர்'தம்மூஸ்'; தம்மூஸுக்காக
அழுதார்கள் என்று எசேக்கியேல் 8:14ல் வருகிறது.

தங்களுக்குப் பெயர் உண்டாக்க பாபேல் கோபுரம் கட்ட முயன்றவர்களுடைய
மொழியை கர்த்தர் தாறுமாறாக்கினபடியால் அவர்கள் அவ்விடம் விட்டு பூமியின்
பல பாகங்களுக்கும் சிதறிப்போக ஆரம்பித்தனர்; அவர்களோடு அவர்கள்
பாபிலோனிய கலாச்சாரமும், மதச்சடங்குகளும், மத நம்பிக்கைகளும் கூடவே சென்றன.

செமிராமிஸ் என்ற தேவதை, அவள் மகன் நிம்ரோத், இவர்கள் இருவரையும்
பாபிலோனியர் வணங்கினர்; செமிராமிஸ் தேவதை நிம்ரோத்தை அற்புதமாக
பெற்றெடுத்தாள்; இவனேஆதி.3:15ல் சொல்லப்பட்டுள்ளஸ்திரீயின் வித்துஎன்றும்
நம்பினர்; செமிராமிஸ்'அல்மாமேட்டர்'என்று அழைக்கப்பட்டாள்; இதன்
பொருள்'கன்னித்தாய்'.
இவள்'வானத்தின் ராணி'(QUEEN OF HEAVEN)என்றும் அழைக்கப்பட்டாள். எரேமியா
44:15-19, 24-27 வசனங்களில்'வானராக்கினி'என்று அழைக்கப்படுகிறவள் இவளே.
யூதர்களும் இவளுக்கு தூபங்காட்டி, பலிகளைச்செலுத்தினர். அப்படி
செய்ததினால் தங்களுக்கு ஆசீர்வாதம் கிடைத்தது என வாதாடினர்.

திருச்சபையில் திரளான மக்கள் வந்து சேர்ந்தபோது, தாங்கள் முன்பு
பின்பற்றிய பழக்கவழக்கங்களையும் சபைக்குள் கொண்டு வந்தனர். புறஜாதி
மக்களை சபைக்குள் கொண்டுவர அவர்கள் பழக்கவழக்கங்களை கிறிஸ்தவ சடங்குகளாய்
மாற்ற சபைத் தலைவர்களும் ஆர்வம் காட்டினர்.

மரியாள் வணக்கம்

பாபிலோனியரும், எகிப்தியரும் வணங்கிவந்த வானராக்கினியின் ஸ்தானத்தை
புனிதத்தாயாகிய மரியாளுக்குக் கொடுக்க ஆரம்பித்தனர்.இயேசுவின் தாய்என்ற
தலைப்பு மங்கி,"கடவுளின் தாய்"என்ற பட்டம் உயர்ந்தது. இதுவரையிலும்
மரியாளைப்பற்றி எதுவும் சொல்லாதிருந்த சபையார் மரியாளுக்கு
முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்.

கி.பி 431இல் எபேசு பட்டணத்தில் நடந்த திருச்சபை ஆலோசனைக் கூட்டத்தில்
மரியாளைகடவுளின் தாய்(MOTHER OF GOD)என்று அழைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இதுவரையிலும் இயேசுவை மட்டும் வணங்கிவந்தவர்கள், இதிலிருந்து மரியாளையும்
வணங்க ஆரம்பித்தனர்.

வசனத்திற்கு முரண்பட்ட பழக்கவழக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

*கி.பி300

மரித்தவர்களுக்காக ஜெபம்

*கி.பி300

சிலுவை அடையாளத்தை முக்கியப்படுத்துதல்; தம்மூஸ் என்ற வார்த்தையின் முதல்
எழுத்தாகிய'T'என்ற எழுத்து பாபிலோனிய மந்திரங்களின் அடையாள குறியாக
பயன்படுத்தப்பட்டு வந்தது. அதையே சற்று மாற்றி சிலுவை வடிவமாக்கி, சிலுவை
அடையாளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்.

*கி.பி.375

மரித்த பரிசுத்தவான்களையும், தேவதூதர்களையும் வணங்க ஆரம்பித்தல்.

*கி.பி.394

தூப ஆராதனையோடு கூடிய பூஜைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.

*கி.பி.431

மரியாள் வணக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

*கி.பி.500

சபை அங்கத்தினரின் ஆடையைவிட சபைக் குருவானவரின் உடை மாற்றியமைக்கப்பட்டது.

*கி்.பி.593

உத்தரிக்கும் ஸ்தலம் பற்றிய உபதேசம் அறிமுகப்படுத்தப்பட்டது.

*கி.பி.600

ஆராதனைகள் லத்தீன் மொழிகளில் நடத்தப்பட ஒழுங்கு செய்யப்பட்கது.
மரியாளிடம் வேண்டிக்கொள்ளுதல் அறிமுகப்படுத்தப்பட்டது; மரித்த
பரிசுத்தவான்களிடம் வேண்டிக்கொள்ளுதல் ஆரம்பிக்கப்பட்டது.

வெளி.2:1-7 வசனங்களில் எபேசு சபைக்குக் கொடுக்கப்பட்ட செய்தி: எபேசு சபை
ஆதி அன்பை இழந்த சபையாக கூறப்பட்டுள்ளது. வெளி.2:8-11 சிமிர்னா
சபைக்குறிய செய்தி: இது உபத்திரவ கால சபைக்கு அடையாளம்.

வெளி.2:12-17 வசனங்களில் பெர்கமு சபைக்குறிய
செய்தி:'பெர்கமு'என்றால்'திருமணம்'என்று பொருள். திருச்சபை உலகத்துடன்
தன்னை இணைத்துக்கொண்ட உறவுக்கு அடையாளமான சபை. இந்த சபையில்நிக்கோலாய்
மதப் போதனைகளும்,பிலேயாமின் போதனைகளும் ஊடுருவி இருந்தன. இதே
நிலையில்தான் கி.பி.மூன்றாம் நூற்றண்டிற்குப்பின் சபைக்குள் பாபிலோனிய
பழக்கவழக்கங்கள், ஆராதனை முறைகள் நுழைந்தன.

*கி.பி.650

மரியாளைக் கனப்படுத்த பல பண்டிகைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த CHRONICLE'ஜ வாசிக்கும் கத்தோலிக்க நண்பர்களுக்கு எழுத
விரும்புவது, நீங்கள் மரியாளை மதிப்பது போலவே நாங்களும் மரியாளை புனிதமான
தாயாக மதிக்கின்றோம். உலகில் பிறந்த எந்தப்பெண்ணையும்விட மரியாள் இயேசுவை
பெற்றெடுத்ததின்மூலம் சிறப்பான சிலாக்கியமுடையவள் என நம்புகிறோம். ஆனால்,
இயேசு கிறிஸ்து ஒருவரே மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன். அவர் ஒருவரே
ஆராதனைக்குரியவர் என்பதுசத்தியம்.

சபைத்தலைவர் ஆண்டவராக உயர்த்தப்படல்
பாபிலோனிய போப்புகளின் உணமையான மகா சபை(GRAND ORIGINAL COUNCIL OF
PONTIFFS)என்ற அமைப்பு ஒன்று இருந்தது. இதன் தலைவர்"The SOVEREIGN
PONTIFF OF BABYLON"என்று மதிக்கப்பட்டார். அதாவது"கடவுளின் தெய்வீகத்
தன்மை வாய்ந்த போப் என்றும் இவர் தவறு செய்ய இயலாதவர்" (INCAPABLE OF
ERROR)என்றும் மதிக்கப்பட்டார். உயர்வட்டார குருக்கள்முதல் இவரை தொழுது
கொண்டார்கள்
இந்த பாபிலோனிய பழக்கவழக்கங்களே திருச்சபைக்குள்ளும் நுழைந்தது. ஆரம்ப
நாட்களில் ஆதி சபையினர் வீடுகளில் கூடி ஆராதித்தனர்; பாடல்கள் பாடி,
ஜெபித்து, சாட்சிகூறி, சங்கீதம் வாசித்து ஆராதனை செய்தனர். ஒவ்வொரு
வீட்டுக் குழுக்களும் தங்கள் காரியங்களை தாங்களே பார்த்துக் கொண்டனர்.
இந்த வீட்டு சபைகளிலே மூப்பர்கள் பொருப்பாளர்களாக இருந்தனர். இப்படி பல
வீட்டு சபைகளை மேற்பார்வை செய்தவர்களை பிஷப் என்று அழைத்தனர்.

'பிஷப்'என்பதன் பொருள்'மேற்பார்வையாளர்'. பல நாடுகளிலும் சபை வேகமாய்
பரவினது. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் ரோம சாம்ராஜ்யத்திலிருந்த
120மில்லியன் (12 கோடி) மக்களில் பாதிப்பேர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டனர்
என ஒரு குறிப்பு கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக