வேதாகமமானது சிலுவை சின்னத்தை வணங்கவோ அடையாளமாக வைத்துக்கொள்ளவோ
கட்டாயப்படுத்தி கூறவே இல்லை.TAMUSஎன்கிற வார்த்தையின் முதல் எழுத்தான T
என்ற எழுத்தை கல்தேயரும், எகிப்தியரும் மந்திர எழுத்தாய் வைத்திருந்தனர்.
T-யில் ஏதோ மந்திரசக்தி இருப்பதாக பாபிலோனியர் எண்ணிக்கொண்டு அந்த T
வடிவத்தில் சிலுவையை செய்துகொண்டு வணங்கவும் உற்சாகப்படுத்தப்பட்டார்கள்;
இதுவும் பாபிலோனிய மார்க்கமேயாகும். R.C சாமியார்கள் திருமணம் செய்யாமல்
தனியராக, பிரம்மச்சரிய விரதம் ஏற்றுக்கொண்டு பூஜைகள் நடத்த ஆரம்பித்தனர்;
சாமியார் மடங்கள், கன்னிமாட வாசம் ஏற்படுத்தப்பட்டன. இந்த விரதம் பூண்ட
சாமியார்களையும், கன்னியர்களையும் தேவதா கன்னிகைக்கு ஒப்பாக்கப்பட்ட
கன்னியாஸ்திரிகள் என்று சொல்லி அவர்களை கனம் பண்ணத்தொடங்கினார்கள்.
இதற்கு வேதத்தில் எந்தவித ஆதாரமும் கிடையாது;இரகசியம் மகா பாபிலோன்.
போப் மார்க்கம் ஒரு கண்ணோட்டம்
போப்என்றால்தந்தைஎன்று பொருள். திருச்சபையின் தொடக்கக் காலத்தில் போப் என
எவரும் அழைக்கப்படவில்லை. கி. பி.4ம் நூற்றாண்டுக்கப்பால் போப் என்றால்
ரோம் நகரத்து பிஷப்பிற்கு உரிய பதவி பெயராகிவிட்டது. போப் 7ம் கிரகோரி
(கி.பி.1073-85) போப் என்ற சொல் திருச்சபையின் தலைவரான ரோம் நகர்
பிஷப்பைக் குறிக்கும் என்ற திட்டவட்டமான அறிவிப்பை வெளியிட்டார்.
கி.பி.8ம் நூற்றாண்டில் போப்பிற்கு அச்சுறுத்தலை கொடுத்த லம்பாடியர்கள்
என்ற முரட்டு இனத்தவரை பிரான்ஸ் மன்னன் 3ம் பெப் தோற்கடித்து விரட்டி,
ரோம் நகரிலும் அதை சுற்றியுள்ள அம்ரியா, மார்ச்சஸ், ரோமக்னா ஆகிய
பகுதிகளை போப்பிற்கு தானமாக கொடுத்தான். போப் அப்பகுதிகளின் மன்னன் என
அழைக்கப்பட்டார்.
பத்தொம்பதாம் நூற்றாண்டில் கரிபால்டி தலைமையில் இத்தாலியை ஒரே நாடாக
ஒருங்கிணைக்கும் முயற்சி நடைபெற்றபோது போப்பின் நாடுகள் பிடுங்கப்பட்டு
ஐக்கிய இத்தாலி உருவானது. எனவே இத்தாலி தேசிய அரசிற்கும் போப்பிற்கும்
இடையில் 50 ஆண்டுகாலம் நல்லுறவு நிலவவில்லை. 1929ல் இத்தாலி சர்வாதிகாரி
முசோலினி போப்புடன்லாட்ரன் உடன்படிக்கைசெய்துகொண்டார் அதன்படி போப் ரோம்
நகரின் மையத்திலுள்ளவாடிகன்என்ற பகுதியின்சுதந்திர
மன்னர்என்றழைக்கப்பட்டார். இதன்மூலம் போப் எந்தவொரு நாட்டிற்கும்
கட்டுப்படாமல் சுதந்திரமாக செயல்பட வழி ஏற்பட்டது.
சுதந்திர நாடு என்ற நிலையில் இந்தியா உட்பட பல நாடுகளோடு தூதரக உறவு
கொண்டுள்ளது. போப்பின் தூதர்அப்போஸ்தலிக் புரோனொன்சியோஎனப்படுகிறார்.
கான்ஸ்டான்டிநோபிளை தலைநகரமாகக் கொண்ட பைசாண்டிய பேரரசின் கிறிஸ்தவம்
கி.பி.8-ம் நூற்றாண்டில் போப்பின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து
தனித்திருச்சபையானது. அதுவைதீகத் திருச்சபைஎனப்பட்டது. இன்று ரஷ்யா,
கிரேக்கம், பல்கேரியா, யுகோஸ்லாவியா, ஆகிய நாடுகளில் வைதீகத்
திருச்சபைதான் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கி.பி.726-ல் கான்ஸ்டாண்டிநோபிள் பேரரசரான 3வது லியோபுனிதர்களின்
சொரூபங்களை வணங்குவது விக்கிரக ஆராதனை. எனவே சொரூபங்களை ஆலயங்களிலிருந்து
அகற்றப்பட வேண்டும் என கட்டளையிட்டார். கி.பி.1378ல் இரண்டு
போப்பாண்டவர்கள் இருந்தனர். பிரான்ஸ், காஸ்டைல், ஆரகான்(ஸ்பெயின்)
ஸ்காட்லாந்து, பிளாண்டிஸ் நாடுகள் போப் 7ம் சாந்தப்பரை ஆதரித்தன.
இங்கிலாந்து ஜெர்மினி, ஹங்கேரி நாடுகள் போப் அர்பனை ஆதரித்தன.
இப்படிப்பட்ட பல குழப்பங்களும், பதவிப் போட்டிகளும்,ஆடம்பரங்களும் போப்
மார்க்க சரித்திரத்தில் அநேகம் உண்டு.வாடிகனின் மொத்த பரப்பளவு 109
ஏக்கர்; மக்கள் தொகை 1000 ஆண்கள் மட்டுமே. பெரும்பாலானோர் குருக்கள்
மற்றும் சமயம் சார்ந்த அதிகாரிகள் ஆவார்.
கரோல் வோஜ்டிலா என்ற இயற்பெயர் கொண்ட போப் இரண்டாம் ஜான்பால்
கி.பி.1978ல் அக்டோபர் 22ல் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; போப்பாக
பதவி ஏற்கும் முதல் ஸ்லாவ் இனத்தவர், முதல் போலந்து நாட்டுக்காரர் என்ற
பெருமை இவருக்கு உண்டு; 20 ஆண்டுகளில் 117 நாடுகளுக்கு விஜயம்
செய்துள்ளார். 1986லும், 2001லும் இரண்டுமுறை இந்தியாவிற்கு வருகை
புரிந்துள்ளார்.
இவரது மறைமுக முயற்சியால் போலந்தில் கம்யூனிச ஆட்சி வீழ்ந்தது. அதேபோல்
பாராகுவேவில் ஆல்பிரட் ஸ்ட்ரோஸ்னர், சிலியில் அகஸ்டோ பினோசெ,
பிலிப்பைன்சில் பெர்டினன்ட் மார்கோஸ், போன்ற சர்வாதிகாரிகளுக்கு
எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அதனால் உற்சாகமடைந்த எதிர்ப்பாளர்கள்
அவர்களது ஆட்சிகளை வீழ்த்தினர் என்பது வரலாறு. 1981ல் மெஹ்மத் அலி என்ற
துருக்கியனால் சுடப்பட்டார் எனினும், தப்பி பிழைத்தார். இவர்
காலத்தில்தான் வாடிகன் இஸ்ரேல் நாட்டோடு ராஜீயத் தொடர்பு கொண்டது.
வாடிகன் இன்றைய நிலையிலும் உலகின் முக்கிய அரசியல்சக்தியாக விளங்குகிறது
என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
...>>(தொகுப்பு நூல்:"உலக தோற்றம் முதல் உலக அழிவுவரை"; எழுதியவர்:S.
செல்வராஜ்_Grace House, கள்ளக்குறிச்சி)
இஸ்ரவேல் தேசம்
aஆபிரகாம் காலத்தில்
b.யோசுவா கலத்தில்
c.ராஜாக்கள் காலத்தில்
d.இயேசுவின் காலத்தில்
e.தற்போதைய காலத்தில்
a.ஆபிரகாம் காலத்தில் இஸ்ரவேல் தேசம்
ஆபிரகாம் காலத்தில் இஸ்ரவேல் தேசம் கானான் என்று அழைக்கப்பட்டது.
கானானியரும், பெலிஸ்தியரும் அங்கு குடியிருந்தார்கள்.
கானான்,காமின் 4வது மகன்; இவருடைய பெயர் அந்த தேசத்திற்கு வழங்கப்பட்டது.
கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்குப்பண்ணின தேசம் கானான். அதற்கு முன்
ஆபிரகாம் மொசப்பொத்தோமியாவிலுள்ளஊர்என்ற கல்தேயருடைய பட்டணத்தில்
இருந்தார். தற்போது இந்த இடம்ஈராக்என்று அழைக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக