மெய்யான காரணமோ தள்ளப்பட்டு பரிகாசத்திற்கு உள்ளாகும். காரணமென்னவெனில்
எல்லா கிறிஸ்தவர்களும் எடுத்துக் கொள்ளப்படமாட்டார்கள்.மாய்மாலமற்ற,
விசுவாசமுள்ள, சத்தியத்தை அறிகிற அறிவு இருக்கிற உத்தம கிறிஸ்தவ
விசுவாசிகளடங்கிய ஒரு கூட்டத்தார் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிற பெருங்கூட்டத்தார்
கைவிடப்படுவதினாலும், வீட்டுக்குத் தெரியாமல் இயேசு கிறிஸ்துவை
விசுவாசித்து ஞானஸ்நானம் எடுத்து இரகசியமாக ஆராதனைக்குச் செல்கிற மற்ற
மதத்திலுள்ள ஒருசில ஆரம்பகால விசுவாசிகளும் எடுத்துக் கொள்ளப்படுவதினால்
இது ஒரு மத ரீதியிலான எடுத்துக் கொள்ளப்படுதல் என்று சொல்ல முடியாது.
எனவே இந்த நிகழ்ச்சி அனேகரால் பரிகசிகசிக்கப்படும். மேலும் எடுத்துக்
கொள்ளப்பட்டவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று கூட இவ்வுலகத்தில்
கைவிடப்பட்டவர்கள் கூறலாம். ஏனெனில் ஆதியாகமம் 19ம் அதிகாரத்தில் சோதோம்,
கொமோரோ நகரங்கள் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் அழிக்கப்படும்
சம்பவத்தை நாம் வாசிக்கிறோம். 14வது வசனத்தில் லோத்து தன்
மருமகன்மார்களோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த இடத்தை விட்டு
பறப்படுங்கள்; கர்த்தர் இந்த பட்டணத்தை அழிக்கப் போகிறார் என்றான்.
அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன்(லோத்து) பரியாசம் பண்ணுகிறதாகக்
கண்டதுஎன்று வாசிக்கிறோம்.
இந்த நிகழ்ச்சிப் பற்றின முன்னறிவிப்பு விசுவாசியாதவர்களுக்கு
பரியாசமாகத்தான் தோன்றும் என்பதில் நாம் ஐயம் கொள்ள வேண்டிய தேவையில்லை.
இயேசுகிறிஸ்து சீக்கிரத்தில் வரப்போகிறார் என்று நாம் ஓங்கி, உரக்கச்
சத்தம் போட்டால் ரோட்டில் போவோர், வருவோர் நம்மை நமட்டுச் சிரிப்போடு
பார்த்துவிட்டு செல்கிறார்கள். சிலர் இயேசு கிறிஸ்து எப்பொழுது
வருகிறார், பஸ்ஸில் வருகிறாரா, காரில் வருகிறாரா, அல்லது ஏரோபிளேனில்
வருகிறாரா என்று நம்மை பரியாசம் செய்கின்றனர். ஒருசில
மேடைப்பேச்சாளர்கள்"இயேசு கிறிஸ்து வருகிறாராமே வந்தால் வரட்டுமே.
மறுபடியும் பிடித்து சிலுவையிலறைந்து விடுவோம்"என்று பேசுகிறார்கள்.
பெரம்பலூரில் அரசியல் கூட்டத்தில் ஒருவர் பேசும்போது"இயேசு கிறிஸ்து
வந்தால் என்ன ! 63 நாயன்மார்களோடு 64வது நாயன்மாராக வைத்துக்
கொள்வோம்"என்று பேசினார்.இப்படி பரிகாசம் பண்ணுவது இக்காலத்தில்
மிகுதியாயிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி நடைபெறும்போது ஆகாய விமானம், இரயில், கப்பல், லாரிகள்,
பேருந்துகள், கார்கள் போன்றவற்றில் ஓட்டுநர்கள் விசுவாசிகளாக இருந்தால்
அவர்கள் எடுத்துக் கொள்ளப் படுவார்கள்; இதனால் ஓட்டுநர்கள் இல்லாததால்
ஏராளமான விபத்துகள் உண்டாகும்; ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கலாம்;நீங்கள்
இந்த கர்த்தரின் வாக்குத்தத்தத்தை நம்பவில்லையென்றால் லட்சோப லட்சம்
மக்கள் மாயம் என்ற தலைப்புச் செய்தியுடன் தினமலர், தினத்தந்தி, THE HINDU
பேப்பரில் என்றாவது ஒருநாள் வந்தாகும். அந்த நாள் விரைந்து வந்து
கொண்டிருக்கிறது; காலம் கடந்தபின் செய்தித்தாளை படித்து கிறிஸ்துவை
விசுவாசிப்பதில் பிரயோஜனமாகுமா? ஆகவே இந்த அற்புதமான நிகழ்ச்சிக்கு
நீங்களும் கிறிஸ்துவை விசுவாசித்து தயாராகும்படி அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன்.
அந்தி கிறிஸ்துவின் ஆட்சிப்பீடம் | THE KINGDOM OF THE ANTICHRIST
ஐரோப்பிய யூனியனின் பாராளுமன்ற அவை(europian parliment) அக்காலத்தில்
கட்டிமுடிக்கப்படாத நிலையில் கடவுளால் அழிக்கப்பட்ட
பாபிலோன் கோபுரம் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதில் 751 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. முக்கிய தகவல் என்னவென்றால்
666ஆம் எண்ணுள்ள நாற்காலி மட்டும் காலியாக இருக்கிறது. அப்பணியிடம்
நிரப்பப்படவில்ல. 2005ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய ஐக்கிய மாநாட்டில்
அரியணை ஏறியவர்களின் பின்னால் அமைக்கப்பெற்ற தலைப்புப் பதாகையில் மூன்று
ஒரே மாதிரியான தலைப்புள்ள பதாகைகளை ஒட்டியுள்ளனர். இவைகள் அந்தி
கிறிஸ்துவின் வருகைக்கு முன் ஏற்பாடுகளாகவே சுட்டிக்காட்டலாம்.
ஐரோப்பிய குடியரசின் கமிட்டி வளாகத்தில் மிருகத்தின் மேல் ஏறியுள்ள
ஸ்திரீயின் உருவம் நிறுவப்பட்டுள்ளது.
வெளி.17:7,9ம்வசனங்களில் சொல்லப்பட்டுள்ள ஏழு தலைகலுள்ள மிருகத்தின்மேல்
ஸ்திரீ உட்கார்ந்திருக்கிறதாக வசனம் விளக்குகிறது. ஏழு மலைகலுள்ள நகரம்
யாதெனில் அது ரோம் நகரமாகும்; பாபிலோன் என்ற வார்த்தையின் பொருள்
ரோம்(ரோம சாம்ராஜ்யம்)மற்றும் இவ்வுலகத்தைக் குறிக்கும்.
****உலகில் அந்தி கிறிஸ்துவின் ஏழு ஆண்டு ஆட்சி
உலக நாடுகள் அனைத்தும் இன்று மேற்கத்திய நாடுகளையும் அவற்றின்
அமைப்புகளையும் எதிர்பார்த்து ஏங்கி நிற்கின்றன. உலக வங்கி, அனைத்துலக
நிதியம் இவற்றை எதிர்பார்த்தே தம் செயல்திட்டங்களை வகுக்கும் அவல
நிலையிலுள்ளன. உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை இவற்றின் பொருளாதாரக்
கொள்கைகளை முடி முதல் அடிவரை பாதிக்கிறது. இதனால் நாட்டின் பொருளாதாரக்
கொள்கை, நாட்டு அமைப்புகளால் நிர்ணயிக்கப்படாமல் வெளியிலிருந்து நாட்டு
மக்கள் மீது சுமத்தப்படுகின்றன. இப்பொருளாதாரச்சார்பு அரசியல் உலகத்தில்
முக்கியமாக சர்வதேச அரசியலில் வளரும் நாடுகளின் கைகளை கட்டிப்போடுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக