மீட்பை புறக்கணித்த சிலுவை
இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட ஒரு குற்றவாளி மீட்பைப்
புறக்கணிக்கணித்தான். லூக் 23:39 அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த
குற்றவாளிகளில் ஒருவன் நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும்
இரட்சித்துக் கொள் என்று அவரை இகழ்ந்தான்.
இயேசு அனைவரையும் இரட்சிக்கும்படி சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.
துன்மார்க்கனையும் இரட்சிக்கும்படியாகவே அவர் தொங்கிக்கொண்டிருக்கிறார்.
ஆனால் இந்த குற்றவாளி அதை அறியாதவனாக இயேசுவை இகழ்கிறான்.
சிலுவையில் அவன் வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். இந்த வேதனையின்
மத்தியில் தான் செய்த பாவங்களை அவன் நினைத்துப் பார்த்து அதற்காக
மனஸ்தாபப்படவில்லை. மாறாக இயேசுவை குறை கூறுகிறான். நீ கிறிஸ்துவானால்
உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று பரிகாசம் செய்கிறார்.
இதனால் இவன் இரட்சிப்பை இழந்துபோனான். எனவே இவன் தொங்கிய சிலுவை மீட்பை
புறக்கணித்த சிலுவையாயிற்று.
மீட்பைப் புறக்கணித்த சிலுவை இன்றும் உலகில் செயல்படுகிறது. சிலுவை
என்பது பாடு, துன்பம் ஆகியவற்றைக் குறிக்கும். உலகத்தில் பாடுகளை
அனுபவிக்கிற மக்களில் சிலர் தாங்கள் பாடுகள் மத்தியில் தங்கள் பாவ வழிகளை
உணர்ந்து மனம் திரும்பமாட்டார்கள். ஆண்டவருடைய உதவியையும்
தேடமாட்டார்கள். தேவனை இகழ்வார்கள். காலமெல்லாம் தேவனுக்கு விரோதமாக
வாழ்ந்து நித்திய நரகத்துக்குப் போகிறார்கள்.
யோபுவின் மனைவி இதற்கு சிறந்த உதாரணம். யோபுவின் வாழ்வில் பாடுகள்
வந்தபோது அவனுடைய மனைவி யோபுவிடன், நீர் இன்னமும் உம்முடைய உத்தமத்தில்
நிலைத்திருப்பீரோ, தேவனை தூஷித்து ஜீவனை விடும் என்றாள். மீட்பைப்
புறக்கணித்த சிலுவை நம்மை நித்திய நரகத்துக்கு கொண்டு செல்லும்.
மீட்பை ஏற்றுக்கொண்ட சிலுவை
இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த ஒரு குற்றவாளி இயேசு சிலுவையில்
சம்பாதித்த மீட்பை ஏற்றுக்கொண்டான். லூக் 23:40-42.
இவன், இயேசுவை மறுதலித்த குற்றவாளியை கடிந்து கொண்டான். நீ தேவனுக்கு
பயப்படுகிறதில்லையா, என்று கண்டித்தான். நாம் நியாயப்படி
தண்டிக்கப்படுகிறோம் என்றான். இயேசுவோ நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்
போது அடியேனை நினைத்தருளும் என்று மன்றாடினான். இயேசுவும் அவனுக்கு
மீட்பை அருளினார். லூக் 23:43 இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீசிலிப்பாய்
என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இந்த குற்றவாளியும் சிலுவையில் வேதனையோடு தொங்குகிறான். இவன் தன் பாடுகள்
மத்தியில் இயேசுவை இகழவில்லை. பதிலாக தன் வாழ்க்கையை ஆராய்ந்துப்
பார்த்தான். தன் உண்மையான நிலையை உணர்ந்தான். தன் பாவங்களை அறிக்கை
செய்தான். இயேசுவுடைய இரத்தத்துக்காக மன்றாடினான். மீட்பையும் பெற்றுக்
கொண்டான். இவனது செயல் மூலம் இவன் தொங்கிய சிலுவை மீட்பை ஏற்றுக்கொண்ட
சிலுவையாயிற்று
சில மக்களுடைய வாழ்க்கையில் பாடுகள் வந்ததும் தங்களை தற்பரிசோதனை செய்து
பார்க்கிறீர்கள். தங்கள் பாவங்களை அறிக்கை செய்கிறார்கள். ஆண்டவரைத் தேடி
பாவமன்னிப்பையும் இரட்சிப்பையும் பெறுகிறார்கள். வியாதியின் மூலமாக, கடன்
பாரங்கள் மூலமாக இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் ஏராளம். மீட்பை ஏற்றுக்கொண்ட
சிலுவை நமக்கு மீட்பையும் நித்திய ஜீவனைத் தேடிவந்த வாலிபனிடம் இயேசு
உனக்குண்டானவைகளை விற்று தரித்திருக்குக் கொடு. பின்பு சிலுவையை
எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார். மாற்.10:21. இந்த
உலகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் சிலுவை உண்டு. அதாவது பாடுகள்,
துன்பங்கள், உண்டு. இந்த சிலுவையை சுமக்கிறோமோ அல்லது மீட்பை
ஏற்றுக்கொண்ட சிலுவையை சுமக்கிறோமா.
உலகத்தில் இந்த மூன்று சிலுவைகளையும் செயல்படுகின்றன. நடுசிலுவை மீட்பைத்
தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கிறது. மீட்பைப் புறக்கணித்த சிலுவை
தொடர்ந்து மக்களைப் பாதாளத்துக்கு கொண்டு செல்கிறது. மீட்பை ஏற்றுக்கொண்ட
சிலுவை தொடர்ந்து மக்களை நித்திய ஜீவனுக்குக் கொண்டுசெல்கிறது. நாம் நம்
பாடுகள் மத்தியில் இயேசுவை தூஷியாமல் அவரை நோக்கிப் பார்த்து
இரட்சிப்பைப் பெற்றுக் கொள்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக