செவ்வாய், 25 அக்டோபர், 2016

காலக்கிரமமாகத்தொகுக்கப் பட்ட நிகழ்ச்சிக் குறிப்புகள் | CHRONICLE (16)

ஹிட்லர் ஆட்சிக்கு வரும்முன் உலகப் பெரும் பொருளாதார நெருக்கடி
காணப்பட்டது அந்திக் கிறிஸ்துவின் ஆதிக்கத்திற்கு தொடக்க காலத்திற்கு
முன்னும் உலகலாவிய பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் தீவிரவாதம்
இவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மாபெரும் தலைவனாக ஒருவனுடைய வருகைக்காக
காத்துக்கொண்டு இருப்பார்கள். இவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திச்
செய்யக்கூடிய ஒரு மாயத் தோற்றத்தை உண்டுபண்ணி (அதாவது இன்றைய
அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகள் போல) உலக சமுதாயத்திற்கு அந்தி
கிறிஸ்து தன்னை உலக மாபெரும் தலைவனாக காண்பிப்பான். அந்தி கிறிஸ்து
இப்படி மக்கள் தலைவனாக இருந்து பிறகு கொடுரமான உலக சர்வாதிகாரியாய்
மாறுவான்.
இவனது ஆரம்பம் செழிப்பாகவும், சமாதானமாகவும் இருக்கும். பிறகு போகப்போக
பஞ்சம், யுத்தம், நாசம் ஏற்பட்டு கொடூரமானதாய் முடிவடையும். வேத வசனங்களை
ஆராய்ந்து வேத பண்டிதர்கள் இவனது ஆட்சியின் முதல் 3 1/2 வருடங்கள்
உபத்திரவக் காலம் என்றும், பிந்தைய 3 1/2 வருடங்கள் மகா உபத்திரவக் காலம்
என்றும் பிரிக்கிறார்கள். அந்தி கிறிஸ்து பிசாசின் ஒட்டுமொத்த
குணலட்சணங்களையும் உடையவனாய் இருப்பான். பழங்கால ரோம சீஸர்களை மக்கள்
தெய்வமாக வணங்கினர்; தெய்வங்கள் என்று ஏற்றும் கொண்டனர்(கிறிஸ்தவர்கள்
தவிர). இதனால் கிறிஸ்தவர்கள் கொடூரமாய் கொலை செய்யப்பட்டனர்.
ரோமப் பேரரசர்களின் புதுப்பித்தலாக விளங்கும் அந்திக்கிறிஸ்துவும் தன்னை
தெய்வம் என்ற உன்னத நிலையை ஜனங்கள் மத்தியில் நிலைநிறுத்துவான்.
....பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தை பின்பற்றி.....
என்று வெளி 13:3ல் வாசிக்கிறோம். அந்தி கிறிஸ்துவின் ஆரம்பம் மிகவும்
பரிதாபகரமானவனாய் தோன்றி பிறகு எல்லோரும் ஆச்சரியப்படத்தக்க வகையில்
இருந்து கொடூரமானவனாய் முடிவடைவான்.

*****கள்ளத்தீர்க்கதரிசி உலகில் எழும்புதல்:-

பின்பு வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன். அது ஒரு
ஆட்டுக்குட்டிக் கொப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலு
சர்ப்பத்தைப் போல் பேசினது.(வெளிப்படுத்தின விசேஷம் 13:11)

1995ல் கிறிஸ்தவரும், யூதரும், புத்தமதத்தவர்களும், இந்துக்களும்,
கன்பூஷியஸ் மதத்தவரும் சேர்ந்து ஒரு கூட்டம் நடத்தினர். அதில் மாறி, மாறி
வாசிப்பதற்காக சகல மத கிரந்தங்களிலிருந்தும் பகுதிகள்
சேர்க்கப்பட்டிருந்தன; அக்கூட்டம் ஒரு பெரும் வெற்றியாக கருதப்பட்டது.

1986ல் இத்தாலியிலுள்ளஅசிசிஎன்ற இடத்தில்போப் இரண்டாம் ஜான்பால்தலைமையில்
தலாய் லாமா, இந்து மத துறவிகள், புத்தமத பிட்சுகள் உட்பட எல்லா மதத்
தலைவர்களும் ஒன்று கூடினர்.போப் 2ம் ஜான்பால் பேசியபோது தேவனிடத்தில்
சேருவதற்கு அநேக பாதைகள் உண்டு என்று பேசினார்.

சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரிந்திருக்கிற சபைகளான ரோமன்
கத்தோலிக்கச் சபையும் ஆங்கிலிக்கன் சபையும் இணைந்தால் போப்பு"உலகலாவிய
தலைவராக"இருப்பார் என்று இரு சபைகளின் உயர்மட்டக் குழு1982 மார்ச் 30ல்
இலண்டனில் அறிக்கை வெளியிட்டது. எனவே பிரட்டஸ்டாண்டு பிரிவினை சபைகளும்,
ரோமன் கத்தோலிக்க சபையும் சீக்கிரத்தில் இணைய இருப்பதாக நாம் அறிந்து
கொள்ளலாம்.ஜெப்ரி ஷேடன்என்ற சமூக சேவகர் 10,000 புரட்டஸ்டாண்டு கிறிஸ்தவ
போதகர்களை அவர்களுடைய கிறிஸ்தவ விசுவாசத்தைக் குறித்து இரகசிய பேட்டிக்
கண்டார். இதில்45% பேர் இயேசு கிறிஸ்து தேவன் இல்லை என்று கூறினர்; 80%
பேர் பைபிள் தேவனால் கொடுக்கப்படவில்லை என்றனர்; 36% பேர் இயேசு கிறிஸ்து
உயிர்த்தெழவில்லை என்றனர்.

1960முதல் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கிறிஸ்தவ விசுவாசம்
குன்றி வருகிறது. ஏராளமானோர் ஆராதனைக்குச் செல்வதில்லை. அனேக கிறிஸ்தவ
சபைகள் உண்மை விசுவாச நெறியினின்று வழுவிவிட்டன.இது எதை
காண்பிக்கிறதென்றால் கிறிஸ்துவின் வருகை விரைவில் இருக்கிறது என்பதை
மட்டும் காட்டாமல் வேதாகம விசுவாசத்தை தவிர்த்துவிட்டு, ஒரே ஐக்கியமுள்ள
பக்தியற்ற கிறிஸ்தவ உலகம் ஒரே தலைமையின் கீழ் ஏற்படும் என்பதையும்
காட்டுகிறது.

1948-ல் கிறிஸ்தவ சபைகளின் பொது சபை என்று உருவாகி1970ல் உலகச் சபைகளின்
பொதுச்சபை என்று மாறிய ஸ்தாபனம் இன்று எல்லா விசுவாசங்களையும்
இணைக்கின்றது. மதங்கள் ஒன்றுபட வேண்டுமென்றால் முதலாவது கிறிஸ்தவ உலகம்
ஒன்றுபட வேண்டும். அதற்குப் பிறகுதான் உலகின் பல மதங்கள் ஒன்றுபட
முடியும். கிறிஸதவ உலகம் போப்பின் தலைமையின்கீழ் ஒன்றுபட இருக்கிறது என
அறிந்தோம்; அதற்குப் பிறகு உலகப் பொது மதம் உண்டாகும் என்று
தெரிகிறது.எப்படி ஹிட்லருக்கு கோயபல்ஸ் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு
ஜெர்மன் மக்களை நாஜிக்கொள்கைகளை ஏற்க வைத்தானோ அதுபோல கள்ளத்தீர்க்கதரிசி
மத உலகில் எழும்பி பிரகாசித்து, அந்திக் கிறிஸ்துவை கடவுளாக மக்கள்
மத்தியில் உயர்த்தி காட்டுவான்.

இந்த கள்ளத் தீர்க்கதரிசி ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் சாத்தானின்
அதிகாரம் பெற்ற மனிதனாக காணப்படுவான். உலகில் அநேக கள்ளத்
தீர்க்கதரிசிகள் எழும்பியிருக்கிறார்கள்; இன்னும் எழும்பக் கூடும்; இவனே
கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எல்லாம் தலைமை கள்ளத்தீர்க்கதரிசியாய்
இருப்பான். அந்தி கிறிஸ்துவும் சரி, கள்ளத் தீர்க்கதரிசியும் சரி மிகச்
சிறந்த பேச்சாளர்களாக இருப்பார்கள்; இந்த கள்ளத் தீர்க்கதரிசி பேசினால்
போதுமா? மக்கள் நம்பிவிடுவார்களா? இல்லை, நம்பமாட்டார்கள்; இவன் பல
அற்புதங்களை செய்துகாட்ட வேண்டும்; அப்பொழுதுதான் மக்கள் நம்புவார்கள்;
எனவே இவன் அற்புதங்களை செய்பவன் என்று வேதம் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக