கான்ஸ்டன்டைன் என்ற ரோமப் பேரரசன் கிறிஸ்தவனாக மாறியபின் சபையில் பெரிய
மாற்றங்கள் ஏற்பட்டன. பேரரசன் திருச்சபையின் தலைவனாகவும் செயல்பட
ஆரம்பித்தான். சபைக்கு பல சட்டதிட்டங்களை இயற்றினான். சபைகளுக்குள் பல
சபைகளுக்குள் ஒரு அமைப்பு உண்டாக ஆரம்பித்தது.இந்த சபை அமைப்புகள்
தங்களை'கத்தோலிக்க சபை'என்று அழைத்தனர்.'கத்தோலிக்'ஏன்றால்'அகில
உலகம்'என்று பொருள். அதாவது'பல நாடுகளிலும் பரவியுள்ள சபை'என்று
பொருள்.இந்த அமைப்பில் இணையாத பல சபைகளும் சுயாதீனமாய் இயங்கி வந்தன.
சபையில் அங்கத்தினராக வேணடுமானால் சபை ஏற்படுத்தியுள்ள விசுவாசப்
பிரமானங்களுக்கு உட்பட வேண்டும் என்ற விதி உருவானது. குருமார்களுக்கும்
சபை அங்கத்தினர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி
உண்டாக்கப்பட்டது.குருமார்கள், ஆசாரியர்கள்(PRIESTS)என்று
அழக்கப்படலாயினர்.சபையின் மேற்பார்வையாளர்களாயிருந்த பிஷப்மார் சபைகளை
ஆளுகை செய்ய ஆரம்பித்தனர். பிஷப்களை கட்டுப்படுத்துவது யார் என்ற கேள்வி
எழுந்தது. பெரிய பட்டனங்களிலிருந்த, பிஷப்கள்,மெட்ரோபாலிடன்ஸ்(கூட்டு
தலைமைக்குழு தலைவர் அல்லது மேட்டிரானியர்)என்று அழைக்கப்பட்டனர்.
பின்புபேட்ரியார்க்ஸ்(கோத்திரப்பிதா அல்லது குடி முதல்வன்)என்று
அழைக்கப்பட்டனர்.
இப்படிப்பட்ட தலைவர்கள்எருசலேம்,அந்தியோகியா,அலெக்ஸாண்டிரியா,கான்ஸ்டாண்டிநோபிள்,ரோம்,
ஆகிய பட்டணங்களிலிருந்தனர். இந்த ஐந்து தலைவர்களுக்குள்ளும் தங்களில்
யார் அதிக அதிகாரமுடையவர் என்ற போட்டி எழுந்தது. கான்ஸ்டாண்டிநோபிள்,
ரோம் ஆகிய இரு பட்டண பிஷப்களுக்குள் அதிக போட்டி ஏற்பட்டது.
உலகை ஆண்டுவந்த ரோமின் அதிகாரம் உயர்ந்ததாயிருந்தது. ரோமாபுரி சபையை
உருவாக்கியவர்கள் அப்போஸ்தலராகிய பேதுரு, பவுல் என மதிப்பாக கூறப்பட்டது.
ரோமின் முதல் பிஷப் அப்போஸ்தலனாகிய பேதுரு. எனவே அவர்வழிவந்த ரோம் சபைத்
தலைவரே எல்லா சபைகளுக்கும் தலைவர் என உறுதி செய்யப்பட்டது. நீ
பேதுருவாயிருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்
(மத்.16:18,19). நீ என் ஆடுகளை மேய்ப்பாயாக (யோ.21:15-17). இந்த இரண்டு
வசனங்களும் பேதுருவின் உயர்ந்த அதிகாரத்திற்கு ஆதாரமாக
எடுத்துக்கொள்ளப்பட்டன.4ம் 5ம் நூற்றாண்டுகளில் போப் என்ற பதம் எந்த
பிஷப்பிற்கும் உரியதாயிருந்தது. பின்பு ரோமாபுரியிலிருந்த சபையின்
தலைவருக்கு மட்டுமே உரியதாயிற்று.'போப்'என்ற வார்த்தையின் பொருள்'அப்பா'.
ஒன்றாம் லியோ (கி.பி.444-461) என்ற ரோமாபுரி சபைத் தலைவர் தனக்கு உயரிய
அதிகாரம் உண்டு என்று கூறி மற்ற பிஷப்களுக்கு கட்டளை கொடுக்க
ஆரம்பித்தார். இவர் பல இடங்களில்'முதல் போப்'என்று
அழைக்கப்பட்டதுண்டு.சுமார் கி.பி.600ல் முதலாம் கிரிகரி(GREGORY 1.'The
GREAT') என்பவர்முதல் அகில உலக பிஷப்பாகவும் , போப்பாகவும்
முடிசூட்டப்பட்டார். இவர் சிலை வணக்கம், உத்தரிக்கும் ஸ்தலம்,
கர்த்தருடைய பயன்படுத்தப்படும் அப்பமும், இரசமும் ஜெபித்தவுடன் இயேசுவின்
சரீரமாகவும் இரத்தமாகவும் மாறிவிடுகிறது என்ற கொள்கை
(TRANSUBSTANTIATION) ஆகிய உபதேசங்களைக் கொண்டுவந்தார். இவர் ஒரு துறவி;
துறவறத்தை அதிகம் வலியுறுத்தினார்.
போப்பின் அதிகாரம் படிப்படியாக உயர்ந்தது. போப்பின் அதிகாரத்திற்கு
கீழ்படிந்து நடந்த அரசர்களும் உண்டு. எதிர்த்தவர்களும் உண்டு.
கி.பி.1073-1216 வரை ஐரோப்பிய நாடுகளில் போப்கள் சர்வ
அதிகாரமுடையவர்களாய் உயர்ந்து நின்றனர்.
ஹில்டபிராண்ட்என்ற போப்பைப்போல் அதிகாரத்துடனிருந்த போப் வேறு
யாருமில்லை. இவர் அரசர்கள் போப்பை நியமிப்பதை நிறுத்தி,தலைமை பிஷப்புகள்
சங்கம் (College of Cardinals)போப்பை தெரிந்துகொள்ளும் முறையை கொண்டு
வந்தார்.குருமார் துறவறம் மேற்கொள்ளவேண்டும் என்பதை கட்டாயமாக்கினார்.
போப்பே உலகத்தையும் சபையையும் ஆளவேண்டும் என்று கூறினார்.போப்
ஹில்டபிராண்ட் 20 ஆண்டுகள் ஆட்சி செய்தபின் கி.பி.1085ல் மரித்தார்.
இவருக்குப்பின் குறிப்பிடத்தக்க போப் மூன்றாம் இன்னசென்ட் (INNOCENT
III). இவர் ஆட்சி செய்த காலம் கி.பி.1198-1216. 37வயதில் போப்
பட்டத்திற்கு வந்து முழு உலகையும் ஆளுகை செய்வது போப்பின் அதிகாரம் என்று
பிரகடனப்படுத்தினார்.
கி.பி.1303ல் 8ம் போனிபேஸ் (BONIFACE VIII) என்ற போப் பிரெஞ்சு தேச
அரசனாயிருந்த பிலிப்பை சபையைவிட்டுத் தள்ளும் கட்டளையைப் பிறப்பித்தார்.
பிலிப் தன் படையைஅனுப்பிபோப்பை சிறைபிடித்து, மூன்று நாள்
சிறையிலடைத்ததிலிருந்து போப்பின் அதிகாரம் குறைய
ஆரம்பித்தது.இதைத்தொடர்ந்து 70 ஆண்டுகள் பிரெஞ்சு தேச அரசர்களால்
போப்மார்கள நியமிக்கப்பட்டனர். இந்தக் காலக் கட்டத்தில் போப்பின்
இருப்பிடம் ரோமிலிருந்து பிரெஞ்சு தேச பட்டணமான அவிக்னனுக்கு(AVIGNON)
மாற்றப்பட்டது.
கி.பி.1378ல்மறுபடியும் போப்பின் இருப்பிடம் ரோமுக்கு மாற்றப்பட்டது.
ஆனால் பிரெஞ்சு தேச தலைமை பிஷப்கள் இன்னொரு போப்பை தேர்ந்தெடுத்தனர். 30
ஆண்டுகள் இரண்டு இடங்களில் இரண்டு போப்கள் ஆட்சி செய்தனர். இந்தப்
பிரச்சனையை தவிர்க்க இந்த இரண்டு போப்கள் அல்லாமல் பொதுவான ஒரு போப்பை
தெரிந்து கொண்டனர். ஆனால் முந்திய இரண்டு போப்புகளும் தங்கள் பதவியை
ராஜினாமா செய்ய மறுத்தனர். எனவே சிறிதுகாலம் மூனறு போப்புகள் ஒன்றுபோல்
பதவியிலிருந்தனர்.
கி.பி.1414ல்கான்ஸ்டன்ஸ் என்ற பட்டணத்தில் சபையின் ஆலோசனை சங்கம்
கூடியது. பதவியிலிருந்த அத்தனை போப்புகளையும் புறம்பாக்கி '5ம் மார்டின்'
என்ற புது போப்பை தெரிந்தெடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக