திங்கள், 31 அக்டோபர், 2016

கடவுள் மற்றும் அவருடைய குமாரன் (1) - Rex Samyael

1Co 8:6பிதாவாகிய ஒரே தேவன்(God, θεός ) நமக்குண்டு,அவராலேசகலமும்
உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்.இயேசு கிறிஸ்து
என்னும் ஒரே கர்த்தரும்நமக்குண்டு;அவர் மூலமாய்ச்சகலமும்
உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

1Co 8:7 ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.

Exo 3:2 Andthe Messenger of YAHWEHappearedto him in a flame of fire
from the middle of a thorn bush. And he looked, and behold, the thorn
bush was burning with fire, and the thorn bush was not burned up!

3:3 And Moses said, I will turn aside now and see this great sight,
why the thorn bush is not burned up.

3:4 AndYAHWEHsawthat he turned aside to see, andElohimcalledto him
from the midst of the thorn bush, and said, Moses! Moses! And he said,
I am here.

இதில் கடவுளின் நாமம் யாவே "YAHWEH" (יהוה)
ஆனால் இங்கு முட்புதர் நடுவில் அக்கினி போன்ற காட்சியளிதலில்
காணப்படுவதுகடவுளின் தூதன்(Messenger of YAHWEH ). ஆனால் மோசே அருகில்
நெருங்கியபோது கடவுள் (YAHWEH) பார்க்கிறார். அப்பொழுது முட்செடியின்
நடுவில் இருந்து கடவுளின் தூதர் அல்லது அவருடைய பிரதிநிதியாக நிற்கும்
ஒருவர் பேசுகிறார் (Elohim). ஆகவே இவர் பேசினாலும் அது கடவுள்
பேசுவதாகவே அர்த்தம் இங்கு LOARD பேசினார் என்றே சொல்லலாம்.

ஆகவே பழைய ஏற்பாடு காலங்களில் கடவுள் பேசுவது தூதர்கள் மூலமாகவே. ஆனால்
புதிய ஏற்பாட்டு காலங்களில் கிறிஸ்து யேசு நமக்கும் கடவுளுக்கும் இடையில்
பரிந்து பேசுபவராக நமது ஆக வந்துவிட்டார். ஆகவேதான் கடவுளிடம் எப்படி
ஜெபிப்பது என சீஷர்களுக்கு சொல்லிக் கொடுத்த " பரலோகத்தில் இருக்கிற
பிதாவே ,..." என்ற ஜெபத்தை சொல்லி யேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்
கொள்கிறோம்" என்று சொல்கிறோம்.

யேசு கிறிஸ்து கடவுளின் ஒரே பேறான குமாரன் , அதாவது கடவுளால் நேரடியாக
படைக்கப்பட்ட ஒரே நபர்.

மற்றவை எல்லாம் யேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளால் படைக்கப்பட்டவை.
ஆகவே உண்மையான ஒரே கடவுளும், அவருடைய குமாரன் கிறிஸ்து ஏசுவும் ஆக இருவர்
நமக்கு உண்டு.

இந்த ஒருவரும் ஒன்று என்பது இருண்ட காலங்களில் வந்த பொய், தவறான உபதேசம்.
இருவரும் ஒருவராய் இருந்தால் எப்படி உமது விருப்பம் என் விருப்பம் என்று
யேசு கடவுளிடம் சொல்ல முடியும்.?

Mat 26:39சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்
பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும்
என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று
ஜெபம்பண்ணினார்.

யேசு பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலை கற்றுக் கொண்டார் என்று வேதம்
சொல்கிறதே. அப்படி என்றால் இரண்டு பேர் வேண்டுமே. ஒருவர் தன்னை விட
உயர்ந்த இன்னொருவர் சொல் கேட்டு நடப்பதுதானே கீழ்ப்படிதல். ஆக இருவரும்
ஒன்று என்று சொன்னால் யேசு பொய் சொல்கிறார், நாடகமாடுகிறார் என்றாகிறதே.
ஆகவே இருவரும் ஒன்று என்பது தேவ நாமத்திற்கு தூஷணமாய் இருக்கிறது.

Heb 1:1பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும்,தீர்க்கதரிசிகள்
மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,

Heb 1:2இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய்நமக்குத்
திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார்,
இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.

Heb 1:3 இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின்
சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே
தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை
உண்டுபண்ணி,உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடையவலது பாரிசத்திலே
உட்கார்ந்தார்.

Heb 1:4 இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச்
சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும்
மேன்மையுள்ளவரானார்.

Heb 1:5 எப்படியெனில்,நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை
ஜெநிப்பித்தேன்என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக்
குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும்
சொன்னதுண்டா?

1Co 8:6பிதாவாகிய ஒரே தேவன் (God, θεός )நமக்குண்டு, அவராலே சகலமும்
உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்.இயேசு கிறிஸ்து
என்னும் ஒரே கர்த்தரும்நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும்
உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

1Co 8:7 ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.

முதற்பலனானவர்கிறிஸ்து; பின்பு ..,தேவனும் (God, θεός )
பிதாவுமாயிருக்கிறவருக்குராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.I கொரிந்தியர் 15:
23, 24
1Co 15:27 சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே;
ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று
சொல்லியிருக்கும்போது,சகலத்தையும் அவருக்குக்
கீழ்ப்படுத்தினவர்கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக