துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரீகள்
இந்தப் பழக்கமும் பாபிலோனிலிருந்து வந்ததே.கி.பி.320ல் அந்தோணி என்பவர்
உலக பற்றுகளிலிருந்து விடுபட்டு தனித்து வாழ ஆரம்பித்தார்; இவர் பரிசுத்த
வாழ்க்கை வாழ்ந்தார்; இவரின் நல்வாழ்க்கை ஆயிரக்கணக்கானோரைக் கவர்ந்தது;
இவர் எகிப்திலுள்ள ஒரு குகையில் வாழ்ந்துவந்தார்; இவரைப் பின்பற்றி
அனேகர் துறவறத்தை விரும்ப ஆரம்பித்தனர். ஏராளமானவர்கள் இவரின் சீடராய்
மாறினர். இதன்மூலம் பல நன்மைகளும் ஏற்பட்டன; தீமைகளும்
ஏற்பட்டன.|துறவறத்தை வலியுறுத்திய சரித்திரத்தை இரண்டாகப்
பிரிக்கலாம்.கி.பி.385ல் சிரிகஸ்(Siricus) என்பவர் துறவறத்தை வலியுறுத்தி
ஓர் கட்டளை பிறப்பித்தார்; அது 7ம் கிரிகரி காலம் வரை ஓரளவு
கடைபிடிக்கப்பட்டது; ஆனால் கண்டிப்பாக கடைபிடிக்கப்படவில்லை.
போப் 7ம் கிரிகரிகி.பி.1073ல் பதவிக்கு வந்தார் ;இவருக்கு ஹில்டபிராண்ட்
என்ற பெயரும் உண்டு; இவர் ஆண்ட காலம்கி. பி.1073-1085. இவர் பதவிக்கு
வந்தவுடன் குருக்கள் கண்டிப்பாய் சந்நியாச வாழ்க்கை வாழ வேண்டும் என்று
சட்டம் இயற்றினார்; இதுவரை திருமணம்பண்ணி குடும்பம் நடத்திக் கொண்டிருந்த
பாதிரிமார்கள் கட்டாயமாக மனைவி, பிள்ளைகளைவிட்டு பிரிக்கப்பட்டனர்.
இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன; இதைத் தாங்கிக்கொள்ள
முடியாத பாதிரிமார்களின் மனைவிகளில் பலர் தற்கொலை செய்து கொண்டனர்;
ஏராளமான பேர் மனநிலையில் பாதிக்கப்பட்டு வியாதியுற்றனர்.
மனைவி, பிள்ளைகளைவிட்டு பிரியாத பாதிரிமார்களின் பூஜையில் சபையார்
கலந்து கொள்ளக்கூடாது என்று போப் கட்டளையிட்டார். சபையாரும் இதை
வரவேற்றனர். மனைவியைவிட்டுப் பிரியாத பாதிரிமார் நடத்திய திருமுழுக்கு
ஆராதனைகள், கர்த்தருடைய பந்தியை ஏராளமான சபை மக்கள் புறக்கணித்தனர்.
கி.பி.1073க்கு பின்புதான் திருமணமான
பாதிரிமாருக்குகுருப்பட்டம்(Ordination)மறுக்கப்பட்டது.
...>>(தொகுப்பு நூல்: "உபதேசங்கள் பலவிதம்";(முதல்
பாகம்),ஆசிரியர்:P.S.ராஜமணி;தொடர்புமுகவரி:100,நாவலர் நகர்,மதுரை-625
010.)
கி.பி.1517-நவம்பர் 1: மார்டின் லூத்தர் வேதாகம வசனங்களை ஆதாரமாக வைத்து
தனது 95 கோட்பாடுகளை'விட்டன்பரோ'ஆலயக்கதவில் பதித்தார்.
(வாடிகனில் அலங்காரமான புனித பீட்டர் தேவாலயம் கட்டுவதற்கு அதிகப்பணம்
தேவைப்பட்ட காரணத்தினால் போப் 2ம் ஜூலியஸ் கட்டளைப்படி'டெட்சல்'என்ற
கத்தோலிக்க மதகுரு மக்களிடம், பணம் கொடுத்து போப்பாண்டவர் அனுமதித்த இந்த
பாவமன்னிப்புச் சீட்டு வாங்கினால், நீங்கள் செய்த, செய்து கொண்டிருக்கிற,
எதிர்காலத்தில் செய்யப்போகிற எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு எரி நரக
தண்டனையிலிருந்து தப்பி மோட்சமடையலாம்; அதுமட்டுமல்ல செத்துப்போன உங்கள்
உறவினர்களும் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து (மோட்சத்திற்கும்,
நரகத்திற்கும் இடைப்பட்ட இடம்) மோட்சம் போவார்கள் என்று கூறி பாவ
மன்னிப்பு சீட்டு வியாபாரத்தை பெரிய அளவில் நடத்தி அதிகப் பணம்
திரட்டினார்.
டெட்சல் 1517-ல் சாக்ஸனிக்கு வந்தார். சாக்ஸன் பல்கலைக்கழக
பேராசிரியராயிருந்த மார்டீன் லூத்தர் விட்டன்பர்க் ஆலய பொருப்பையும்
சேர்த்து கவனித்துக்கொண்டுவந்தார். இவர் டெட்சலின் பாவமன்னிப்பு சீட்டு
வியாபாரத்தை வன்மையாக கண்டித்தார். மார்ட்டின் லூத்தர், மக்கள்
ஏமாற்றப்பட்டதை அறிந்துஇயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, பாவத்தை இயேசு
கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு வாழ்ந்தாலே மோட்சம்; வேதாகமமே இறைவனை அடைய
ஒரே வழிஎன்றார். போப்பின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட எண்ணினார். தனது
95 கோட்பாடுகளை விட்டன்பரோ ஆலயக் கதவில் ஒட்டி யாரோடு வேண்டுமானாலும்
வாதுக்கு தயார் என்றார். போப் அதிர்ச்சியுற்றார். லூத்தரை மத விலக்கம்
செய்தார். போப்பாண்டவர் ஆணையை லூத்தர் முச்சந்தியில் தீயிட்டுக்
கொளுத்தினார். ஜெர்மன் முழுவதும் போப் மார்க்கத்திற்கு எதிர்ப்பு
வழுத்தது.
லூத்தரை ஒழித்துக்கட்ட போப் பல முயற்சிகள் செய்தார். ஜெர்மன் அரசர்கள்,
பிரபுக்கள், குருமார்கள் சபை முன்னிலையில் 'வேர்ம்ஸ்' என்ன
இடத்தில்கி.பி.1552ல் தம் கொள்கைகளை கைவிட மறுத்தார். லூத்தரை பேரறிஞர்
ஃபிரடெரிக், மற்றும் பல இளவரசர்கள் ஆதரித்ததாலும், ஜெர்மனி முழுவதும்
இவருடைய கொள்கைகள் தீவிரமாய் பரவியதாலும், முகம்மதிய படையெடுப்பு
நிகழ்ந்ததாலும் போப்பாண்டவரால் லூத்தரை ஒன்றும் செய்ய முடியவில்லை. வட
ஜெர்மினி், டென்மார்க், நார்வே, சுவீடன் ஆகிய இடங்களிலும் தீவிரமாய்
பரவினது. ஜெர்மினி முழுமையிலும் இவ்வாறு எதிர்த்துப் போரிட்டதால்
இதற்கு'புரோட்டஸ்டண்டு'எனப்பெயர் வந்தது. லூத்தர்துறவியாய் இருந்து பிறகு
திருமணம் செய்து வாழ்ந்து கி.பி.1546ல் இறந்தார்.)
கி.பி.1528-வில்லியம் டிண்டேல் கிரேக்க மொழியிலுள்ள புதிய ஏற்பாட்டை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதற்காக இவர் கொல்லப்பட்டார்.
(அந்த காலத்தில் ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் மாத்திரமே வேதாகமத்தை படிக்க
முடியும்; மற்றவர்கள் யாரும் வேதாகமத்தை தொடவும் கூடாது, படிக்கவும்
கூடாது என்ற நிர்பந்தம் இருந்தது. பரிசுத்த வேதாகமத்தின் பரிசுத்தம்
தீட்டுப்பட்டுவிடும் என்று காரணம் கற்பித்தார்கள்)
கி.பி.1534-மேலாண்மைச் சட்டம் கொண்டு வந்ததின் மூலம் 8-ம் ஹென்றி மன்னர்,
இங்கிலாந்து திருச்சபையின் தலைவரானார்.
கி.பி.1551-இராபர்ட் ஸ்டீவன்ஸ் என்பவர் வேதாகமத்தின் ஒரு பகுதியான புதிய
ஏற்பாட்டை வசனங்களாக பிரித்தார்.
கி.பி.1554-டியூடர் வம்சத்து டியூடர் மேரி இங்கிலாந்தின் அரசியானார்.
(புரோட்டஸ்டாண்டார் இவரை'இரத்த வெறி பிடித்த மேரி'என்கின்றனர். இலண்டன்
பிஷப் ரிட்லி, காண்டர்பெரி பிஷப் கிராமர், இலார்ஸ்டர் பிஷப் இலாட்டிமர்
இம்மூன்று பேரும் உயிரோடு நெருப்பு வைத்து கொல்லப்பட்டனர்;
பல்லாயிரக்கணக்கான புரோட்டஸ்டாண்டு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக