வியாழன், 1 செப்டம்பர், 2016

தன் தன் சிலுவையை எடுக்காமல், ஐக்கியம் இல்லை! - சகரியா பூணன்

நம் "சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக
ஒப்புக்கொடுக்க வேண்டு மென்று" புத்தி சொல்லப்பட்டிருக்கிறோம் (ரோமர்
12:1). இப்படிச் செய்வதால் அடையும் ஒப்பற்ற விளைவுதான் "அநேகராகிய நாம்
கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாய்" மாறுகின்றோம் (வசனம் 5).
அப்படியில்லாமல், அதாவது... நம் சரீரங்களை தேவனுக்கு ஜீவபலியாய்
ஒப்புக்கொடாமலே, கிறிஸ்து வுக்குள் ஒரே சரீரமாய் மாறிவிடுவோம் என்று
எண்ணுவது சுத்த அபத்தம்! நாம் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி 'அவர்
பிதாவின் சித்தம் மட்டுமே செய்வதற்கு, தன் சரீரத்தை எவ்வாறு பலியாய்
ஒப்புக்கொடுத்தாரோ' அதுபோலவே நாமும் ஒப்புக் கொடுக்கும்போது மாத்திரமே,
நாம் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாய் ஒன்றாயிருக்க முடியும். இவ்விதமாய்
இயேசுவின் மரணத்தை நம் சரீரத்தில் ஏற்று சுமக்கும் போதுதான், இயேசுவின்
ஜீவியமும் நம்மில் வெளிப்படும்! (2கொரி 4:10).

மெய்யாகவே, தீவிரமாய் இயேசுவின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் சீஷர்களிடையே
வெளிப்படும் "இந்த ஜீவியமே" அவர்களை ஒன்றாக்குகிறது! மாறாக, ஆதாமின்
'சுயம் கொழுத்த' ஜீவியத்தை வைத்துக் கொண்டு, எண்ணற்ற பிரசங்கங்கள்
செய்தாலும், அல்லது ஐக்கியம் ஏற்படுத்த பல கருத்தரங்குகள் நடத்தினாலும்
அல்லது "உபதேச ஒற்றுமை" வாக்குமூலமே செய்தாலும், இவைகளெல்லாம் நம்மை
ஒருபோதும், ஒருக்காலும் ஒன்றாக்கவே முடியாது!
இயேசுவின் சரீரத்தில் 'சுயசித்தம் வெட்டுண்டு' அழிக்கப்பட்டதால் நிகழ்ந்த
"இயேசுவின் மரணத்தைக்" குறித்த வெளிப்பாடே இன்று நம் யாவருக்கும்
அவசியமாயிருக்கிறது! (ஏசா 63:1-6).அவ்வாறு வெளிப்பாடு பெற்றுவிட்டால்,
நாமும் நம் சரீரத்தை, அவரில் நடந்ததுபோலவே, நம்மில் அனுதினமும்
நடப்பதற்கு நம்மை பலியாய் ஒப்புக் கொடுத்துவிடுவோம்! இப்போது நம்
வாழ்வில் என்ன சம்பவிக்கும்? ஒவ்வொரு சூழ்நிலைகளில், நமக்குள்ளிருந்து
எழும்பும் சுய கௌரவம், சுய அந்தஸ்து, சுய அனுதாபம் போன்ற சுயசித்தங்கள்
வெட்டுண்டு போகும் சம்பவமே நாள்தோறும் நடைபெறும்! இந்த மகிமையான
வாழ்விற்குள் பிரவேசித்த இருவர், நிச்சயமாய் ஒன்றான ஐக்கியம் பெறுவர்.
ஏனெனில், அவர்கள் இருவரின் சரீரத்திற்குள்ளும் கிறிஸ்துவின் சரீரத்தில்
நடந்தேறிய "இயேசுவின் மரணம்" நிகழத் தொடங்கி விட்டது!

எந்த ஸ்தலமானாலும், அவர்கள் எப்பேர்ப்பட்ட தேர்ந்த விசுவாசிகள் குழு
ஆனாலும், சிலுவையில்லா விட்டால் அவர்கள், பிதாவும் இயேசுவும்
ஒன்றாயிருந்ததுபோல ஒருக்காலும் ஒன்றாயிருக்க முடியாது! கூட்டங்கள் பல
நடத்தி கூடிவருவதாலோ அல்லது ஞானஸ்நானத்திலோ அல்லது ஆவியின் வரங்களினாலோ
அல்லது ஓர் சிறந்த ஆவிக்குரிய தலைவனுக்கு உண்மையாய் இருப்பதாலோ நாம்
ஒன்றாயிருக்கவே முடியாது, முடியவே முடியாது!! சிலுவையினால் மாத்திரமே,
பிரிவினையை கொண்டுவரும் சுயத்தை அழித்திட முடியும்!

இவ்வாறாக, அவரவர் தன் தன் சிலுவையை எடுத்து, அந்த சிலுவையில் சுயம்
அறையப்பட்ட ஜீவியத்தில்தான் கிறிஸ்துவின் சரீரமான ஐக்கியம் உருவாகும்.
இதுபோன்ற சரீரமான சபையில் உள்ள ஒவ்வொருவரும், இயேசுவின் ஜீவியத்தை
நிச்சயமாய் பெற்றிருப்பார்கள்! ஒளி ஒளியுடன் ஐக்கியமாய் இருப்பதைப்
போலவே, இயேசுவின் ஜீவியத்தை கண்டடைந்தவர்களும் கிறிஸ்துவின் சரீரமாய்
இணைந்திருப்பார்கள். அதுபோன்ற சபையை பாதாளத்தின் வாசல்களும்
மேற்கொள்வதில்லை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக