"பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம்;...
பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்" என இயேசு
கூறினார். பொக்கிஷம் என இயேசு எதைக் குறிப்பிட்டார்? 5,000 ரூபாய்கள்
பொக்கிஷமா? அல்லது 50,000 ரூபாய்கள் பொக்கிஷமா? அல்லது இவ்வசனத்திற்கு
நம்முடைய வங்கிக் கணக்கில் எவ்வித சேமிப்பும் இருக்கக்கூடாது என்பது
பொருளா? பாருங்கள், இதுபோன்ற காரியங்களில் புதியஏற்பாடு எவ்வித
வரையறையும் குறிப்பிடாமல் இருப்பது நமக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது! இந்த
வரையறையை அவரவர்கள்தான் கணக்கிட்டு தீர்மானிக்க வேண்டும். என்னுடைய தேவை
எவ்வளவு? தேவைக்கு மேலான என்னுடைய பொக்கிஷம் எவ்வளவு?
என்பதைஅவரவர்கள்தான்கண்டுபிடித்து தீர்மானிக்க வேண்டும். என்னுடைய அவசரத்
தேவைகளுக்கென என்னுடைய வங்கிக் கணக்கில் நான் சேமித்து வைப்பதும் எனக்கு
அவசியமாயிருக்கக்கூடும். எவ்வித வங்கி சேமிப்பும் இல்லாமலே தேவனை
சார்ந்திருக்கும் விசுவாசம் எல்லோருக்கும் நிச்சயமாய் இருக்காது!
இப்படிப்பட்டவர்கள் தங்கள் விசுவாச அளவின்படி தங்களின் திடீர் தேவைக்கென
வங்கிக் கணக்கில் சேமித்து வைப்பதில் எவ்வித தவறும் இல்லை. அவ்வாறு
சேமிப்பதில் எவ்வளவு சேமிக்க வேண்டும் என தீர்மானிக்கும் விஷயம்
அவரவர்களைச் சார்ந்ததேயாகும். இவ்விஷயத்தில் ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனை
நியாயந்தீர்ப்பதற்கு இடமே இல்லை!
இருப்பினும் எல்லா விசுவாசிகளுக்கும் சமமாக இயேசு அளித்த புத்திமதி
யாதெனில், "பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க
வேண்டாம்" என்பதேயாகும். ஏனெனில், நம் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
அங்கேதான் நம் இருதயமும் இருக்கும் என இயேசு எச்சரித்தார் (வசனம் 21).
உங்கள் இருதயம் எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியுமா?
"என்னுடைய சிந்தைகள் எங்கே அதிகமாய்ப் போகிறதோ" அதை வைத்து என் இருதயம்
எங்கே இருக்கிறது என்பதை நான் கண்டுகொள்ள முடியும். ஒரு காதலன் தான்
நேசிக்கும் காதலியை எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பது போல, நீங்கள்
பணத்தையும்-இன்னும் அதிகமாய் எவ்வளவு பணம் சேர்க்கலாம் என்பதையுமே
எப்போதும் சிந்திப்பவர் களாய் இருந்தால் உங்கள் இருதயம் பணத்தின்மீது
இருக்கிறது என்பதை தெள்ளத்தெளிவாகக் கண்டு கொள்ளலாம். இந்தப் பணமே,
உங்கள் தேவைக்கு அப்பாற்பட்டு நிற்கும் உங்கள் பொக்கிஷமாய் இருக்கிறது!
இவ்வாறு பூமியில் உங்கள் பொக்கிஷத்தை வைத்திருக்கும் நீங்கள்,
ஒருக்காலும் பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்த்து வைக்கவே முடியாது!
உண்மையான ஓர் இயேசுவின் சீஷனுக்கு பூமியில் பொக்கிஷம் இருக்கவே கூடாது.
நாம் இப்பூமியில் வாழ்வதற்கென உலகப்பொருட்களை வாங்கி உபயோகிக்கலாம்.
இருப்பினும் நம்முடைய இருதயமோ இவ்வுலகப்பொருட்களின் மீது நிச்சயமாய்
பற்றுதல் கொண்டிருக்கக் கூடாது.
நாம் எவைகளின்மீதுபற்றுதல்கொண்டிருக்கிறோமோ, அவைகளே நம்முடைய பொக்கிஷமாய்
மாறுகிறது! இதை எவ்வாறு சோதித் தறியலாம் என்றால், நமக்குச் சொந்தமான
உலகப் பொருட்கள் உடைந்தோ, தொலைந்தோ அல்லது அழிந்தோ போகும்போது.... நாம்
நம்முடைய மகிழ்ச்சியையெல்லாம் இழந்து துக்கத்தில் மூழ்கிவிட்டால்
"நம்முடைய பொக்கிஷம் இவ்வுலகத்தில் இருக்கிறது" என்பதையே
தெரியப்படுத்துகிறோம்!
நம்முடைய இருதயம் எப்போதுமே பரலோகத்தில் இருக்கவேண்டுமென்றே தேவன்
விரும்புகிறார்! நம்முடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே நம்முடைய
இருதயமும் இருக்கும். நாமோ நம்முடைய இருதயத்தை பூமியின்மீது வைத்திடக்
கூடாது என்பதிலேயே தேவன் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக