நான்கு சுவிசேஷ
புத்தகங்களில் மிகச்
சிறியது மாற்குவின்
சுவிசேஷம். இயேசு
மரித்து,
உயிர்த்தெழுந்துசுமார்
30 வருடங்களுக்குப்
பிறகு இது
எழுதப்பட்டது. இதை
எழுதியவர் மாற்கு;
இவருக்கு யோவான் என்ற
பெயரும் உள்ளது.
இயேசுவின் மூன்றரை
வருட ஊழியக் காலத்தில்
நிகழ்ந்த
விறுவிறுப்பூட்டும்
சம்பவங்கள் இதில்
இடம்பெற்றுள்ளன.
இந்தச் சுவிசேஷம்
யூதரல்லாதவர்களுக்காக,
அதிலும் குறிப்பாய்
ரோமர்களுக்காக
எழுதப்பட்டதாய்த்
தெரிகிறது. இப்புத்தகம்,
இயேசுவை
கடவுளுடைய
குமாரனாகச்
சித்தரிப்பதோடு
அற்புதங்களைச்
செய்கிறவராகவும்
முழுமூச்சுடன் பிரசங்க
வேலையில்
ஈடுபடுகிறவராகவும்
விவரிக்கிறது. அவர்
கற்பித்த காரியங்களைக்
காட்டிலும், அவர் செய்த
காரியங்களுக்கே
இப்புத்தகம் அதிக
முக்கியத்துவம்
தருகிறது. மாற்குவின்
சுவிசேஷத்திற்குகவனம்
செலுத்துவது
மேசியாவின் மீதுள்ள நம்
விசுவாசத்தைப்
பலப்படுத்தும்; அத்துடன்,
ஊழியத்தில்
கடவுளுடைய
செய்தியை
பக்திவைராக்கியத்துடன்
அறிவிப்பதற்கும்நம்மைத்
தூண்டும்.— எபி. 4:12.
கலிலேயாவில்
தனிச்சிறப்பு வாய்ந்த
ஊழியம்
(மாற்கு 1:1–9:50)
முழுக்காட்டுபவரான
யோவான் செய்த
காரியங்களைப் பற்றியும்
40 நாட்கள் இயேசு
வனாந்தரத்தில் இருந்ததைப்
பற்றியும் வெறும் 14
வசனங்களிலேயே மாற்கு
விவரித்துவிடுகிறார்.
அதன் பிறகு,
கலிலேயாவில் இயேசு
செய்த ஊழியத்தைப்
பற்றிய
விறுவிறுப்பூட்டும்
தகவலை அளிக்கத்
தொடங்குகிறார். 'உடனே'
என்ற வார்த்தை இப்பதிவில்
அடிக்கடி
பயன்படுத்தப்பட்டிருப்பது,
இதை வாசிப்போரின்
மனதில் அவசர உணர்வை
ஏற்படுத்துகிறது.—
மாற்கு 1:10, 12.
மூன்று வருடத்திற்குள்,
இயேசு கலிலேயாவில்
மூன்று முறை பிரசங்க
வேலையைச் செய்து
முடிக்கிறார்.
பெரும்பாலும்,
காலவரிசைக்
கிரமத்திலேயே மாற்கு
தகவல்களைத் தருகிறார்.
இயேசுவின்
மலைப்பிரசங்கமும் அவர்
ஆற்றிய பல
சொற்பொழிவுகளும்
மாற்குவின்
சுவிசேஷத்தில் இல்லை.
வேதப்பூர்வ
கேள்விகளுக்குப்
பதில்கள்:
1:15—எதற்குரிய
"[குறிக்கப்பட்ட] காலம்"
நிறைவேறியிருந்தது? தம்முடைய
ஊழியத்தைத்
துவங்குவதற்குரிய
குறிக்கப்பட்ட காலம்
நிறைவேறியிருந்தது
என்றே இயேசு சொன்னார்.
ஏனெனில்,
யெகோவாவால்
தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசரான அவர் அங்கே
இருந்ததால் கடவுளுடைய
ராஜ்யம்
சமீபமாயிருந்தது.
ஆகவே, நல்மனமுள்ள ஆட்கள்
அவர் பிரசங்கிப்பதைக்
கேட்டு, கடவுளுடைய
ஆதரவைப் பெறுவதற்கேற்ற
நடவடிக்கைகளை
எடுப்பதற்கு இதனால்
தூண்டப்படலாம்.
1:43, 44; 3:12; 7:36—இயேசு
தாம் செய்த
அற்புதங்களை ஏன்
விளம்பரப்படுத்த
விரும்பவில்லை? மக்கள்
உணர்ச்சிவசப்பட்டோ
மிகைப்படுத்திக்
கூறப்பட்டதன்
அடிப்படையிலோ
முடிவெடுக்காமல்,
அவர்தான் கிறிஸ்து
என்பதற்கான அத்தாட்சியை
அவர்களே நேரில் பார்த்து
அதன் அடிப்படையில்
முடிவெடுக்க இயேசு
விரும்பினார். ( ஏசா.
42:1-4; மத். 8:4; 9:30; 12:15-21;
16:20 ; லூக். 5:14) ஆனால்,
கதரேனா ஊரில் பிசாசு
பிடித்திருந்த ஒருவனை
அற்புதமாய்ச்
சுகப்படுத்தியதுமட்டும்
இதற்கு விதிவிலக்கு.
அச்சமயத்தில், அவனைத் தன்
வீட்டிற்குத்
திரும்பிப்போய் நடந்ததை
தன் உறவினர்களுக்கு
அறிவிக்கும்படி
இயேசு சொன்னார். அந்த
இடத்தைவிட்டுப்
போகும்படி ஊர்மக்கள்
சொன்னதால், அங்குள்ள
வெகு சிலரையே
இயேசுவால் சந்திக்க
முடிந்திருக்கலாம்
அல்லது யாரையுமே
சந்திக்க முடியாமல்
போயிருந்திருக்கலாம்.
இயேசு யாருக்கு தயவு
காட்டினாரோ, அந்த
மனிதன் அங்கே அவர்கள்
மத்தியில் இருந்ததும்,
அவனே அதைப் பற்றிச்
சொன்னதும் பன்றிகளை
இழந்தவர்கள் பரப்பிய
அவதூறான பேச்சுகள்
எடுபடாமல் போக
உதவியிருக்கும்.— மாற்.
5:1-20; லூக். 8:26-39.
2:28—இயேசு 'ஓய்வு
நாளுக்கும் ஆண்டவர்' என
ஏன்
அழைக்கப்படுகிறார்?
'நியாயப்பிரமாணமானது வரப்போகிற
நன்மைகளின் நிழலாய்
இருக்கிறது' என
அப்போஸ்தலன் பவுல்
எழுதினார். ( எபி. 10:1)
நியாயப்பிரமாணத்தின்படி, இஸ்ரவேலர் ஆறு
வேலைநாட்களுக்குப்
பிறகு வந்த ஏழாம் நாளை
ஓய்வுநாளாகக்
கடைப்பிடித்தார்கள்; அந்த
ஓய்வுநாளிலே இயேசு
அநேகரைச்
சுகப்படுத்தினார். இது,
சாத்தானுடைய
கொடூரமான ஆட்சியின்
முடிவுக்குப் பிறகு
கிறிஸ்துவின் ஆயிர
வருட ஆட்சியில்
மனிதகுலம்
அனுபவிக்கப்போகும்
நிம்மதியான ஓய்வுக்கும்
மற்ற பல
ஆசீர்வாதங்களுக்கும்
முன்நிழலாக இருந்தது.
ஆகவேதான் அந்த
ராஜ்யத்தின் அரசர் 'ஓய்வு
நாளுக்கும் ஆண்டவர்' என
அழைக்கப்படுகிறார்.— மத்.
12:8; லூக். 6:5.
3:5; 7:34; 8:12—
இயேசுவின்
உணர்ச்சிகளை மாற்கு
எப்படி
அறிந்திருப்பார்?
மாற்கு, 12
அப்போஸ்தலரில்
ஒருவரும் அல்ல,
இயேசுவின் நெருங்கிய
தோழரும் அல்ல. அவரோடு
நெருங்கிப் பழகிய
அப்போஸ்தலன்
பேதுருவிடமிருந்தே
இயேசுவைப் பற்றிய
பெரும்பாலான தகவலை
அவர் பெற்றிருக்கலாம்என
பண்டைய பாரம்பரியம்
கூறுகிறது.—1 பே. 5:13.
6:51, 52—சீஷர்கள் என்ன
கருத்தில் 'அப்பங்களைக்
குறித்து
உணராமற்போனார்கள்'?
சில மணிநேரங்களுக்கு
முன்புதான், வெறும்
ஐந்து அப்பங்களையும்
இரண்டு மீன்களையும்
வைத்து பெண்களையும்
பிள்ளைகளையும்
சேர்க்காமல், ஆண்கள்
மட்டுமே 5,000 பேராக
இருந்த ஒரு கூட்டத்திற்கு
இயேசு
உணவளித்திருந்தார்.
ஆகவே, அற்புதங்களைச்
செய்வதற்கான வல்லமையை
யெகோவா
தேவனிடமிருந்து
இயேசு பெற்றிருந்தார்
என்பதுதான், 'அப்பங்களைக்
குறித்த' அந்தச்
சம்பவத்திலிருந்து
அவர்கள் புரிந்திருக்க
வேண்டிய விஷயமாக
இருந்தது. ( மாற். 6:41-44)
இயேசுவுக்குக்
கொடுக்கப்பட்டிருந்த
வல்லமையின்
மகத்துவத்தை அவர்கள்
உணர்ந்திருந்தால், அவர்
தண்ணீரில் அற்புதமாய்
நடந்ததைக் குறித்து
மிகவும் பிரமித்து
ஆச்சரியப்பட்டிருக்க
மாட்டார்கள்.
8:22-26—ஒரு குருடனை
இயேசு ஏன் இரண்டு
கட்டமாகச்
சுகப்படுத்தினார்? அந்த
மனிதனின் மீதிருந்த
இரக்கத்தால் இயேசு
அப்படிச்
செய்திருக்கலாம். வெகு
காலமாக இருளிலேயே
பழக்கப்பட்டிருந்த அந்த
மனிதனுக்கு திடீரென
சூரிய ஒளியைக்
காண்பது அசௌகரியமாக
இருக்கும் என்பதால்
இயேசு படிப்படியாக
அவனுக்குப் பார்வை
அளித்திருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக