இயேசு கற்பித்தபடி,நம்முடைய தேவைக்காகவும், பிறருடைய தேவைக்காகவும்வாழும்
வாழ்க்கையை விட்டு விலகி, பண ஆசையில் சிக்குபவர்களுக்கு நிச்சயம் ஏராளமான
பிரச்சனைகளும் கவலைகளும் தோன்றத்தான் செய்யும்! "பண ஆசை எல்லாத்
தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு
வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்" என
பவுல் மிக அருமையாய் சத்தியத்தை எடுத்துரைத்தார் (1தீமோ
6:10).þஇவ்வாறெல்லாம் பண ஆசையும், உலகப்பொருட்களின் மோகமும் ஜனங்களை
கேட்டுக்குள் நடத்தும் என்பதை இயேசு அறிந்தே "உலகப்பொருட்களுக்கு ஊழியஞ்
செய்யக்கூடாது" என எச்சரித்து, அதன் தொடர்ச்சியாய் "ஆகையால்.....
கவலைப்படாதிருங்கள்" என தொடர்புபடுத்திப் பேசினார் (மத்தேயு 6:24,25).
எப்போதெல்லாம் உங்களுக்கு கவலை வருகிறதோ, அப்போதெல்லாம் உங்கள் இருதயம்
பூமிக்குரிய 'ஏதோ ஒன்றின்மேல்' நாட்டம் கொள்ள முயல்கின்றது என்பதைச்
சுட்டிக்காட்டும் தெளிவான அறிகுறியாகும்!
நாம் இப்போது என்ன செய்யவேண்டும்? உங்கள் எல்லாப்
பொக்கிஷங்களையும்பரலோகத்திற்கு மாற்றுதல் செய்து விடுங்கள்!இது ஒன்றே
நீங்கள் கவலையிலிருந்து விடுதலையாவதற்குரிய மாறாத நித்திய வழியாகும்.
அதாவது, கவலையின் வேரை அகற்றுவதற்கு ஒப்பாகும்! நீங்கள் மிகவும் அதிகமாய்
நேசிக்கும் உங்கள் பிள்ளையைக் கூட, தேவனுக்கே திருப்பிக்
கொடுத்துவிடுங்கள்! உங்களுக்கு மிகவும் பிரியமாய் தோன்றும் அனைத்து
இவ்வுலக உடைமைகளையும் தேவனிடமே கையளித்து விடுங்கள்!! அவர் அதை என்ன
செய்ய வேண்டுமென்று விரும்புகிறாரோ அதை அவர் செய்வதற்கு, அவருக்கே முழு
சுதந்திரம் கொடுத்துவிடுங்கள்.
அவர் விரும்பினால், உங்களின் உலகப் பொருட்கள் 'திருடப்படுவதற்குக்கூட'
அவர் அனுமதிக்கலாம்! அல்லது, அவைகள் உடைந்து நாசமாவதற்கும்
அனுமதிக்கலாம்!
இவ்வாறு நம்முடைய எல்லா விருப்பங்களையும் இப்பூமிக்குரியவைகளிலிருந்து
விலக்கி பரலோகத்தில் மாற்றிவிட்டால், நாம் கவலை கொள்வதென்பது,
ஒருக்காலத்தும் சம்பவித்திடாது!
நாம் எப்போதும் 'இயேசு எதை வலியுறுத்தினாரோ' அதை கைக்கொள்ளவே கவனம்
கொண்டிருக்க வேண்டும்! ஆகாரத்திற்காக கவலைகொள்ள வேண்டாம்
என்றும்,"ஆகாரத்தைப்பார்க்கிலும் "ஜீவன்"விசேஷித்தவை அல்லவா?" (மத்தேயு
6:25)என்றே இயேசு இங்கு வலியுறுத்தினார். ஜீவன் என்பது, இயேசுவின்
ஜீவியமே ஆகும். உங்களுக்கு இயேசுவிடமிருந்த தாழ்மையின் "ஜீவியம்"
வேண்டுமா? அல்லது கொழுத்த உணவுப் பதார்த்தங்கள் þவேண்டுமா? இன்று ஜனங்கள்
தங்கள் ஜீவியத்தில் கிறி°துவைப் போலவே மறுரூபமாக வேண்டும் என்ற "ஜீவிய"
ஆர்வத்தைக்காட்டிலும், உணவின்மீதே அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள்.
கிறி°துவைப்போன்று வாழும் ஜீவியத்தைக்காட்டிலும் உணவா விசேஷித்த வைகள்?
நிச்சயமாய் இல்லை! இவ்வாறு இயேசு காண்பித்த வழியில் சென்ற யாவரும்,
கவலையின் வேரை அகற்றி வாழ்ந்திருக்கிறார்கள்.... நீங்களும் வாழ்ந்திட
முடியும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக