வியாழன், 8 செப்டம்பர், 2016

மாற்கு புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள் (பாகம் - 2)

நமக்குப் பாடம்:
2:18; 7:11; 12:18; 13:3.

யூதரல்லாத
வாசகர்களுக்குப்
பரிச்சயமற்ற
பழக்கவழக்கங்கள்,
வார்த்தைகள், நம்பிக்கைகள்,
இடங்கள் ஆகியவற்றை
மாற்கு விளக்குகிறார்.

பரிசேயர் "உபவாசம்
பண்ணிவந்தார்கள்,"
கொர்பான் என்பது
கடவுளுக்குக்
கொடுக்கும்
"காணிக்கை," சதுசேயர்
'உயிர்த்தெழுதல்
இல்லையென்று
சொல்கிறார்கள்,'
தேவாலயத்திற்கு
'எதிராக ஒலிவமலை'
இருக்கிறது, அதாவது
ஒலிவமலையிலிருந்து
பார்த்தால் தேவாலயத்தைக்
காணமுடிகிறது
என்பதையெல்லாம் அவர்
விளக்கி எழுதுகிறார்.

மேசியாவைப் பற்றிய
வம்சாவளிப் பட்டியல்
முக்கியமாக
யூதர்களுக்கு மட்டுமே
ஆர்வத்திற்குரியதாய்
இருந்ததால், அதை அவர்
குறிப்பிடவில்லை.
இதன்மூலம் மாற்கு ஒரு
சிறந்த முன்மாதிரியை
நமக்கு வைக்கிறார்.

ஊழியத்தில்
ஈடுபடும்போதோ சபை
கூட்டங்களில் பேச்சுகள்
கொடுக்கும்போதோ
கேட்போரின்
பின்னணியை நாம்
மனதில் கொள்வது
அவசியம்.

3:21. இயேசுவின்
உறவினர்கள்
அவிசுவாசிகளாய்
இருந்தார்கள். ஆகவே,
சத்தியத்தில் இல்லாத
குடும்ப
அங்கத்தினர்களிடமிருந்து
விசுவாசத்தின்
நிமித்தம் எதிர்ப்பையோ
கேலியையோ
சந்திப்பவர்களின்
உணர்ச்சிகளை அவர் நன்கு
புரிந்துகொள்கிறார்.

3:31-35. இயேசு தம்முடைய
முழுக்காட்டுதலின்போது கடவுளுடைய
ஆவிக்குரிய குமாரனாக
ஆனார், "மேலான
எருசலேமோ" அவருடைய
தாயாக ஆனது. ( கலா. 4:26)
அது முதற்கொண்டு,
சொந்தபந்தங்களைவிட
அவருடைய சீஷர்களே
அவருக்கு மிகவும்
நெருக்கமானவர்களாயும்
பாசத்துக்குரியவர்களாய
ும் இருந்தார்கள். இது
உண்மை வணக்கத்தோடு
சம்பந்தப்பட்ட
காரியங்களுக்கு
வாழ்க்கையில் முதலிடம்
கொடுக்கும்படி நமக்குக்
கற்பிக்கிறது.—மத். 12:46-50;
லூக். 8:19-21.

8:32-34. 'சுயதியாக
வாழ்க்கை எல்லாம்
வேண்டாம்,
எல்லாரையும்போல
இயல்பாக வாழுங்கள்'
என்பதுபோல் நம்மிடம்
தயவு காட்டும்
தோரணையில் யாரேனும்
சொன்னால் அதை நாம்
சட்டென இனங்கண்டு
மறுத்துவிட வேண்டும்.

கிறிஸ்துவைப்
பின்பற்றுகிற ஒருவர்
'தன்னைத்தான்
வெறுப்பதற்குத்'தயாராய்
இருக்க வேண்டும்;
அதாவது, தன்னலம்
துறப்பதற்கும் தன்னல
ஆசைகளையும்
இலட்சியங்களையும்
ஒதுக்கித்தள்ளுவதற்கும்
தயாராய் இருக்க
வேண்டும். அவர் 'தன்
சிலுவையை
எடுத்துக்கொள்வதற்கு,'
அதாவது தேவைப்பட்டால்,
கிறிஸ்தவராக இருப்பதால்
வருகிற அவமானத்தைச்
சகிப்பதற்கு, துன்பத்தை
அனுபவிப்பதற்கு,
அல்லது மரணத்தைச்
சந்திப்பதற்குக்கூட
தயாராய் இருக்க
வேண்டும். அதோடு,
வாழ்க்கையில் இயேசு
வைத்த மாதிரியைத்
'தொடர்ந்து பின்பற்றி' வர
வேண்டும். கிறிஸ்து
இயேசுவின் சீஷராக
வாழ்வதற்கு, அவரைப்
போலவே சுயதியாக
மனப்பான்மையை வளர்த்து
அதைக் காத்துவர
வேண்டும்.—மத். 16:21-25;
லூக். 9:22, 23.

9:24. நம்முடைய
விசுவாசத்தைப்பற்றி
மற்றவர்களுக்குச்
சொல்வதற்கோ அந்த
விசுவாசத்தை
வளர்த்துக்கொள்ள
உதவும்படி
ஜெபிப்பதற்கோ நாம்
வெட்கப்படக்கூடாது.—
லூக். 17:5
கடைசி மாதம்
(மாற்கு 10:1–16:8)

பொ.ச. 32-ன் இறுதியில்,
'யோர்தானுக்கு
அக்கரையிலுள்ள
தேசத்தின் வழியாய்
யூதேயாவின்
எல்லைகளுக்கு' இயேசு
வருகிறார்; ஜனங்கள்
மறுபடியும்
அவரிடத்தில்
கூடிவருகிறார்கள்.

( மாற். 10:1) அங்கே
அவர்களுக்குப் பிரசங்கித்த
பிறகு, அவர்
எருசலேமுக்குப்
புறப்பட்டுச் செல்கிறார்.
நிசான் 8 அன்று, இயேசு
பெத்தானியாவில்
இருக்கிறார். அவர்
பந்தியிருக்கையில், ஒரு
பெண்மணி வந்து,
அவருடைய தலையில்
பரிமள தைலத்தை
ஊற்றுகிறாள். இயேசு
எருசலேமுக்கு வெற்றி
பவனி வருவதுமுதல்
அவருடைய
உயிர்த்தெழுதல்
வரையான சம்பவங்கள்
காலவரிசைக் கிரமத்தில்
விவரிக்கப்பட்டுள்ளன.

வேதப்பூர்வ
கேள்விகளுக்குப்
பதில்கள்:

10:17, 18—"நல்ல போதகரே"
என அழைத்த மனிதனை
இயேசு ஏன் கண்டித்தார்?

அந்த மனிதன்
முகஸ்துதிக்காக அந்தப்
பட்டப்பெயரில் அழைத்ததை
ஏற்றுக்கொள்ள
மறுத்ததன்மூலம்
யெகோவாவுக்கே அவர்
மகிமை சேர்த்தார்;
அத்துடன், உண்மைக்
கடவுளே எல்லா நல்ல
காரியங்களுக்கும்
ஊற்றுமூலர் என்பதையும்
காட்டினார்.

அதுமட்டுமல்ல, எது
நல்லது எது கெட்டது
என்பதற்கான நியதிகளை
வகுப்பதற்கு
எல்லாவற்றையும்
படைத்தவரான யெகோவா
தேவனுக்கு மட்டுமே
உரிமை இருக்கிறது என்ற
அடிப்படை உண்மையை
வலியுறுத்தினார்.— மத்.
19:16, 17; லூக். 18:18, 19.

14:25—"நான்
தேவனுடைய
ராஜ்யத்தில் நவமான
ரசத்தைப் பானம்பண்ணும்
நாள் வரைக்கும்
திராட்சப்பழரசத்தை இனி
நான்
பானம்பண்ணுவதில்லை"
என்று உண்மையுள்ள தம்
அப்போஸ்தலரிடம்
இயேசு சொன்னதன்
அர்த்தம் என்ன?

பரலோகத்தில் நிஜமாகவே
திராட்சரசம்
இருக்கிறதென இயேசு
அர்த்தப்படுத்தவில்லை. சில
சமயங்களில், திராட்சரசம்
மனமகிழ்ச்சிக்கு
அடையாளமாகக்
குறிப்பிடப்படுவதால்,
பரலோக ராஜ்யத்தில்
உயிர்த்தெழுப்பப்பட்ட
தமது அபிஷேகம்
செய்யப்பட்ட சீஷர்களோடு
ஒன்றுசேரும்
சந்தோஷத்தையே இயேசு
இங்கு அர்த்தப்படுத்தினார்.
— சங். 104:15; மத். 26:29.

14:51, 52—'நிர்வாணமாய்
ஓடிப்போன' இளைஞன்
யார்? இந்தச் சம்பவத்தை
மாற்கு மட்டுமே
குறிப்பிடுவதால், அவர்
தன்னைப் பற்றியே
பேசியிருக்கிறார் என்ற
முடிவுக்கு வருவது
நியாயமானது.

15:34—"என் தேவனே! என்
தேவனே! ஏன் என்னைக்
கைவிட்டீர்" என்று
இயேசு சொன்னது
அவருடைய விசுவாசம்
குறைந்துபோனதைக்
காட்டியதா? இல்லவே
இல்லை. அவர் எதற்காக
அப்படிச் சொன்னாரென்று
நமக்குச் சரியாகத்
தெரியாது.

இருந்தாலும், தம்முடைய
உத்தமத்தன்மை
முழுமையாகச்
சோதிக்கப்படுவதற்காக
அதுவரை தமக்குத்
தந்திருந்த பாதுகாப்பை
யெகோவா தேவன்
விலக்கிக் கொண்டார்
என்பதாக இயேசு
ஒருவேளை
உணர்ந்திருக்கலாம்.
அதோடு, தம்மைப்பற்றி
சங்கீதம் 22:1-ல்
முன்னறிவிக்கப்பட்டுள்ளதை
நிறைவேற்றுவதற்காகவு
ம் இயேசு அப்படிச்
சொல்லியிருக்கலாம்.—
மத். 27:46.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக