சிந்து நதிக்கரைக்காரன் என்ற அடிப்படையிலேதான் நம்மை Zindoo என எழுதினான்
வெள்ளைக்காரன்.
முதலில் நம்மைப்பற்றிZindoo என்று எழுதி வைத்திருந்தவன், காலப் போக்கில்
இந்த உச்சரிப்பை மாற்றி Hinduஎன்று உச்சரித்தான். அவன்
உச்சரித்ததையெல்லாம் படிப்படியாக அவனது டாக்குமென்ட்களில் பதிவும் செய்து
வைத்தான்.
இப்போது Zindoo என்பது Hindu ஆகிவிட்டது. ஆக... இப்போது நாம் நம்மை
அழைத்துக் கொள்ளும்நமது மதத்தின் பெயரான 'ஹிந்து' என்ற பெயர் நாம்
சூட்டிக் கொண்டதல்ல. நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம்
இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம்.
இன்னும் சொல்லப்போனால்... இது Christian சூட்டிய பெயர். நம்மையெல்லாம்
என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் வெள்ளைக்கார Christian
கண்டுபிடித்த... கண்டுகூட பிடிக்கவில்லை. தன் வாய்க்கு வசதியாக வந்ததை
உச்சரித்ததைத் தான் நாம் இன்று நமக்கான அடையாளமாக சுமந்து
கொண்டிருக்கிறோம்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வேதம், மநு, ஸ்மிருதி,
சாஸ்திரம், புராணம், சுண்டைக்காய்... எல்லாவற்றையும் பின்பற்றுவதாக
சொல்லிக் கொண்டு நாம்
அவற்றிலிருந்து ஒரு பொதுப் பெயரை எடுத்து சூட்டிக் கொள்ளவில்லை.
சூட்டிக் கொள்ள முடியாது. ஏனென்றால்...நம் தேசத்தில் எக்கச்சக்க மதங்கள்.
நான் சொன்னேனே.... ஆரியர்களான பிராமணர்கள் இங்கு வரும்போதே! நம்
தேசத்தில் சுமார் 450 மதங்கள் இருந்தன. இதில் எது ஹிந்து மதம் என்று
கேட்டிருந்தேன் அல்லவா?
இப்போது நீங்களே சொல்லுங்கள்.
எது ஹிந்து மதம்...?வேத மதம், ஆரிய மதம், ப்ராமண மதம் இங்கே வந்தது. அதை
எதிர்த்து புத்த மதம் உண்டானது. மத்வ மதம் பிறந்தது. த்வைதம் கிளைத்தது.
விசிஷ்டாத்வைதம் வளர்ந்தது. சைவம், வைஷ்ணவம் பெரிதாகப் பேசப்பட்டது.
இடையிலே சமணம் தோன்றியது.
வைணவத்தில் கூட தென் கலை, வடகலை, என கோர்ட் வரை கூட பிளவு படியேறியது.
இவையெல்லாம் தவிர்த்து...நம் தேசத்தின் அகண்ட நிலப்பரப்பில் ஆங்காங்கே
சிறுதெய்வ வழிபாடுகள் எக்கச்சக்கம், காளியம்மன், மாரியம்மன்,
துர்க்கையம்மன், அய்யனார், முனியப்பன், கருப்பசாமி, தூண்டிக்காரன் சாமி
என.. சொல்லிக் கொண்டே போகலாம்.
அதாவது இவ்வளவு... வழிபாடுகளையும் பார்த்து திக்குமுக்காடிய
வெள்ளைக்காரன் தான் எல்லாவற்றுக்கும் மொத்தமாகச் சேர்த்து இந்த தேசத்தில்
வாழ்பவர்களை யெல்லாம் மொத்தமாக 'இந்து' என்று அழைத்தான்.
நம் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. என்ன செய்வோம்? பையனாக இருந்தால்
தாத்தா பேர் வைப்போம். பெண்ணாக இருந்தால் பாட்டி பேர் வைப்போம். அல்லது
குல தெய்வத்தின் பேரை சூட்டுவோம்.
ஆனால்... நமக்கு முன்பின் தெரியாத இதுவரை நம்மைப்பற்றி எதுவுமே அறியாத...
எவனோ ஒருத்தன்... நம் பாஷையும் தெரியாத அவன் தன் வாயில் நுழையும் பெயரை
வைத்துக் கூப்பிட்டதால்.... அந்த 'சத்தத்தையே' உங்கள் குழந்தைக்குப்
பெயராக வைப்பீர்களா?... அப்படித்தான்
வைத்திருக்கிறோம். நம் மதம் என்னும் குழந்தைக்கு!சரி... 'ஹிந்து' என்ற
சொல்லின் வரலாற்றைப்
பார்த்துவிட்டோம்.
இதுதான் உங்கள் பள்ளி சர்டிபிகேட்களிலும்.... வாழ்க்கையிலும்
உங்களைப்பற்றிநீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளும் 'ஹிந்து' என்ற பெயரின்
வரலாறு. வெள்ளைக்காரன் நமக்குக் கொடுத்த இந்த அடையாளத்தை அப்படியே நாம்
பின்பற்றி வருகிறோம்.
பெயர் கூட வைக்க துப்பு இல்லாத மதம் உங்க மதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக