பரலோக ராஜ்ஜியம், தேவனுடைய ராஜ்ஜியம். (பாகம் - 1)
பரலோகம்:-
பரலோகம் அல்லது மோட்சம் என்பது தேவனாகிய கர்த்தர் சிங்காசனத்தில்
வீற்றிருக்கும் இடமாகும். சிங்காசன காட்சியை அறிய வெளி 4 மற்றும் 5 ஆம்
அதிகாரங்களை படித்து பாருங்கள். பரலோகத்தை மூன்றாம் வானம் என்றும் வேதம்
கூறுகிறது (2கொரி 12:2-3).
மூன்றாம் வானம்:-
மேக மண்டலம் வரையுள்ள ஆகாய மண்டலம் முதலாம் வானம் என்றும் எல்லா
வின்மீன்களையும் உள்ளடக்கிய பேரண்டம் இரண்டாம் வானம் என்றும் பிதாவாகிய
தேவன் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் தொழுகை (ஆராதனை) இடம் மூன்றாம்
வானம் என்றும் கூறப்படுகிறது. மூன்றாம் வானம் வடதிசையில் துருவ
விண்மீனுக்கு அருகிலுள்ள ஒரு கோள் (உலகை போன்ற இடம்) என்று
கருதப்படுகிறது.
பரலோக ராஜ்ஜியம்:-
பரலோக ராஜ்ஜியம் என்பது பரலோகத்தை குறிப்பிடாமல் பரலோகத்தின் அரசாட்சியை
குறிக்கிறது. வேதத்தில் பரலோக ராஜ்ஜியம் என வரும் சொற்றொடர் இடமெல்லாம்
ஆராய்ந்தால் இதை நன்குணரலாம். "நான் தேவனுடைய ஆவியால் பிசாசுகளை
துரத்துகிறபடியால் தேவனுடைய ராஜ்ஜியம் உங்களிடத்தில்
வந்திருக்கிறதே" என இயேசு கூறினார் (மத் 12:28). பிசாசுகளின் மேல்
தேவனுடைய வல்லமை செயல்படுவது தேவனுடைய ஆட்சி அவர்களிடத்தில்
(அவர்களுக்குள் அல்ல) வந்திருப்பதை காட்டுகிறது. எனவே தேவனுடைய ராஜ்ஜியம்
என்பது பரலோகத்தை குறிக்காமல் தேவனுடைய ஆட்சி செயல்படுவதை குறிக்கிறது.
பரலோக ராஜ்ஜியம், தேவனுடைய ராஜ்ஜியம் இரண்டும் ஒன்று தானா? :-
பரலோக ராஜ்ஜியம் என்ற சொல்லை மத்தேயு மட்டுமே குறிப்பிடுகிறார். மத்தேயு
கூறியதை மாற்கு, லூக்கா கூறும் போது தேவனுடைய ராஜ்ஜியம் என்றே ஒவ்வொரு
முறையும்
பயன்படுத்துகின்றனர். திறந்த மனதுடன் ஆதாய்ந்தால் இரண்டும் ஒன்று தான்
என்ற உண்மை புலப்படும். அதாவது தேவனுடைய ராஜ்ஜியம் என்பதை மத்தேயு தமது
பானியில் பரலோக ராஜ்ஜியம் என கூறியுள்ளார் என்பது தெளிவு.
மூன்று வித விளக்கங்கள்:-
வேதத்தில் தேவனுடைய ராஜ்ஜியத்தை பற்றிய எல்லா பகுதிகளையும் ஆராய்ந்து
பார்த்தால் தேவனுடைய ராஜ்ஜியத்தின் மூன்று அம்சங்கள் தெரிகின்றன.
1). தனி மனிதனுக்குள் தேவனுடைய ராஜ்ஜியம்:-
தேவனுடைய ராஜ்ஜியம் உங்களுக்குள் இருக்கிறதே என கர்த்தர் கூறினார் (லூக்
17:21). ஒரு மனிதன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு மறுபடியும் பிறக்கும் போது
அவனுடைய வாழ்க்கை ஆவியானவரால் நடத்தப்பட ஒப்புக் கொடுக்கப்படுகிறது.
இயேசுவும் பிதாவும் அவனுக்குள் வாசம் செயகின்றனர் (யோவா 14:23).
மேலும், அம்மனிதன் ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறான் (ரோமர் 8:14).
இவ்விதமாக நாம் இருளின் அதிகாரத்தில் இருந்து தேவனால் விடுவிக்கப்பட்டு
கிறிஸ்துவின் ராஜ்ஜியத்திற்குள் வருகிறோம் (கொலோ 1:13). எனவே இயேசுவை
இரட்ச்சகராக
ஏற்றுக்கொள்ளும் பொழுது தேவனுடைய ராஜ்ஜியம் அவனுக்குள் நிறுவப்படுகிறது.
அவன் தேவனுடைய ராஜ்ஜியத்தின் குடிமகன் ஆகிறான்.
ஒரு மனிதன் விலையுயர்ந்த முத்து ஒன்றை கண்டு, தான் சேகரித்துள்ள யாவையும்
விற்று அதை வாங்கி கொள்கிறான் என்ற இயேசுவின் உவமை இதை விளக்குகிறது (மத்
13:45-46). அவ்வாறே ஒரு நிலத்தில் இருந்த புதையலை (பொக்கிஷத்தை) அறிந்த
மனிதர் தனக்குள்ள யாவையும் விற்று அந்த நிலத்தை வாங்கினான் என்ற
இயேசுவின் உவமையும் இதை தெளிவுபடுத்துகிறது (மத் 13:44). இரட்சிப்பு
எவ்வளவு முக்கியம், அது எவ்வளவு விலையேறப் பெற்றது, அதை எப்படியாவது
பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தான் இந்த உவமைகள் விளக்குகிறது. தேவனுடைய
ராஜ்ஜியம் (நற்செய்தி வாயிலாக, பல வகையிலும்) பலவந்தம் பன்னபடுகிறது;
பலவந்தம் பன்னுகிறவர்கள் அதை பிடீத்துக்கொள்கிறார்கள் என்றும் கர்த்தர்
கூறியுள்ளார் (மத் 11:12; லூக் 16:16), பலவந்தம் பன்னுகிறவன்
(பெற்றுக்கொள்வதற்காக விடா முயற்ச்சி செய்கிறான்) இரட்சிப்படைவதை
குறிக்கிறது.
2). சபையாகிய தேவனுடைய ராஜ்ஜியம்:-
தமது சரீரமாகிய சபையை ஆட்சி செய்யும் தலையாக இயேசு செயல்படுகிறார் (எபே
1:23; 5:23). விதை முளைத்து பயிராவதற்கு தேவனுடைய ராஜ்ஜியத்தை இயேசு
ஒப்பிட்டார்
(மாற் 4:26-29). வசனத்தை விதைக்கும் பொழுது அநேகர் இரட்சிக்கபடுவதை இது
குறிக்கிறது. இரட்சிக்க படுகிறவர்கள் இயேசுவின் சரீரமாகிய சபையில்
சேர்க்கபடுகின்றனர். தேவனுடைய ராஜ்ஜியத்தை குறிக்கும் கடுகு விதை உவமை
(மத் 13:31-32) சிறிதாக துவங்கி, பெரிதாக வளரும் சபையை குறிக்கிறது.
நல்ல விதை விதைக்கப்பட்ட நிலத்தில் சத்துரு கலைகளை விதைத்து நற்செடிகளும்
கலைகளும் வளர்ந்துள்ள நிலமும் இக்கால சபையை குறிக்கும் உவமையாகும்
(மத் 13:24-30). பேதுரு தனக்கு அளிக்கப்பட்ட
திறவுகோள்களை பயன்படுத்தி (மத் 16:19), யூதரின் நடுவிலும் புறஜாதியினர்
நடுவிலும் சபையின் விரிவாக்கத்தை தொடங்கினான். எனவே மத்தேயு 16:19 இல்
பரலோக ரசஜ்ஜியம் என்பது சபையை குறிக்கிறது. புளித்த மாவு உவமையும் சபையை
குறிக்கிறது (மத் 13:33; லுக்கா 13:20-21). திராட்ச்சை தோட்டத்தில் வேலை
செய்யும்படி பல நேரங்களில் ஆட்களை அனுப்பிய உவமையில் திராட்ச்சை தோட்டம்
என்பது சபையை குறிக்கிறது (மத் 20:1-16). இவை யாவும் தேவனுடைய
ராஜ்ஜியத்தை பற்றி இயேசு கூறிய உவமைகள் ஆகும்.
தேவனுடைய ராஜ்ஜியம் உங்களில் இருந்து நீக்கபட்டு அதற்கேற்ற கனிகளை தருவோருக்கு
கொடுக்கப்படும் என இயேசு கூறியது (மத் 21:43) அதுவரை தேவன் தம்
தீர்கதரிசிகளாலும், வாக்குதத்தங்களினாலும் ஆட்சி செய்து வந்த யூதரை
விட்டு, புறஜாதியாரை தம் ஜனங்களாக (சபையாக) ஏற்றுக் கொள்வதை குரிக்கிறது.
தேவனுடைய ராஜ்ஜியம் பேச்சில் அல்ல பெலத்திலே இருக்கிறது (1கொரி 4:20).
ஆவியானவரின் வல்லமையினால் செயல்படாதவர்கள் கிறிஸ்துவின் சரீரமாகிய
சபையில் இல்லை என்பதை இது சுட்டி காட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக