வியாழன், 1 செப்டம்பர், 2016

எண்ணிக்கை அல்ல, “தூய சாட்சியே” தேவனுக்கு வேண்டும்! - சகரியா பூணன்

மல்கியாவின் நாட்களில் தேவன் இஸ்ரவேலின்மேல் குறைவுபட்டதெல்லாம்,
அவர்களின் எண்ணிக்கை அதிகமாய் இல்லை என்பதற்காய் அல்ல! அல்லது அவர்களின்
காணிக்கை குறைவாயிருக்கிறது என்பதற்காகவும் அல்ல! அவர்களுடைய"காணிக்கை
அசுத்தமாய்"இருந்தது என்பதற்காகவே ஆகும் (மல் 1:6-11).நம் தேசத்தில்,
இன்றுள்ள கிறிஸ்தவர்களின் ஜனத்தொகை சதவீதம் குறைவாயுள்ளதே என்று,
இன்றுள்ள சுவிசேஷம் அறிவிக்கும் கிறிஸ்தவர்கள் வருந்தவோ அல்லது
வருந்துவது போன்ற பாவனையோ செய்கின்றனர்.

"ஆனால்" தேவனோ, தங்களை விசுவாசி என்று அழைத்துக் கொள்பவர்களின் அசுத்த
ஜீவியத்தைக் குறித்த மனப்பாரமே அல்லாமல், அதில் லட்சத்தில் ஒரு பகுதிகூட
கிறிஸ்தவ ஜனத்தொகையின் எண்ணிக்கைக்காக வருந்துவது இல்லை! ஆம், "எல்லா
இடங்களிலும்" தேவன் விரும்புவதெல்லாம் "சுத்தமான காணிக்கையே" - Pure
Offering (மல் 1:11) ஆகும்.

தேவனுடைய சத்தியவசனத்தை "இஸ்ரவேலின் ஆசாரியர்கள்"தரம்
குறையப்பண்ணியதினிமித்தம், கர்த்தருடைய உடன்படிக்கையைக் கெடுத்துப்
போட்டார்கள்(மல்கியா 2:1-9).யூதா தன் சகோதரர்களோடு மோசமாய் நடந்தும்,
தங்கள் மனைவிகளுக்குத் துரோகம் செய்தும், கர்த்தருடைய மேன்மையான வழியைப்
பரிசுத்தக்
குலைச்சலாக்கினார்கள் (மல் 2:10-17). இவ்வாறாகவே, கிட்டத்தட்ட நாம்
கேள்விப்படுகிற எல்லா விசுவாசிகளின் குழுக்களுமே, ஒருவருக்கொருவர்
புறங்கூறுவதும், கோள்சொல்வதும்.... அவர்களிடம் சர்வ சாதாரணமாகிவிட்டது.
சிந்தை வாழ்வில், தங்கள் மனைவிக்கு உண்மையாய் இருக்கிறோம் என்று சாட்சி
சொல்லக் கூடியவர்கள் எத்தனைக் கொஞ்சம் பேர்!! இப்படிப்பட்ட அருவருப்புகள்
இன்னமும் இருதயத்தில் இருக்குமென்றால், நம் சுவிசேஷ ஊழியத்தினாலோ,
'முழுநேர ஊழியத்தினாலோ' என்ன பிரயோஜனம்? "உங்கள் பலிகளின் திரள் எனக்கு
என்னத்துக்கு?" என்றல்லவா கர்த்தர் சொல்லுகிறார் (ஏசாயா 1:11).

மேலும்,"உங்களின் வழக்கமான தொடர்ந்து நடத்தும் பக்திக் கூட்டங்களும் நல்ல
ஏமாற்றுவேலை! (ஏசாயா .1:15).இவைகளை நான் வெறுக்கிறேன்....உங்களைக்
கழுவிச் சுத்திகரியுங்கள். தீமை செய்தலை விட்டு ஓயுங்கள்!" (வச.16)
என்பதுதான் இன்றும் ஆண்டவருடைய அறை கூவலாய் இருக்கிறது!!

சுவிசேஷ ஊழியத்திற்கோ, வேறு சமூகப்பணிக்கோ ஆவியானவர் விரோதமானவர் இல்லை
என்பதை நாம் அறியவேண்டும்! அதேசமயம், எண்ணிக்கைக்காக தரத்தை பலி
செலுத்தும்"அசுத்தமான சாட்சியில்"தேவன் ஒருக்காலும் பிரியம்
கொள்ளமாட்டார் என்ற உண்மையையும் நாம் அறிந்திருக்க வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக