இயேசு,யோவான் 5:28,29- வசனங்களில், "இதைக்குறித்து நீங்கள்
ஆச்சரியப்படவேண்டாம். ஏனென்றால் பிரேதக்குழிகளில் உள்ள அனைவரும் அவருடைய
சத்தத்தைக் கேட்குங் காலம் வரும். அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை
அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை
அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்" என்றார்.
மரித்தோரின் உயிர்த்தெழுதல் எனபொதுவான உயிர்த்தெழுதல்இருந்திடாது. இயேசு
கூறிய வார்த்தையின்படி இரண்டு உயிர்த்தெழுதல் சம்பவிக்கும். 1) ஜீவன்
அடையும்படியான உயிர்த்தெழுதல் 2) நியாயத்தீர்ப்பு அடையும்படியான
உயிர்த்தெழுதல். இந்த இரண்டு உயிர்த்தெழுதலும் 1000 வருட இடைவெளி
கொண்டதென வெளிப்படுத்தின விசேஷ புத்தகம் தெரிவிக்கிறது.
"உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்தவர்களுக்குப் பலனளிக்கும் காலம்
வந்தது" எனவெளி 11:18-ம் வசனம் கூறுகிறது. மல்கியா புத்தகத்தின்படி,
தேவன் தனக்கென "ஓர்ஞாபகப்புத்தகத்தை" வைத்திருக்கிறார். அப்புத்தகத்தை
அவர் உற்று கவனித்துத் தன்னுடைய நாமத்திற்கு யார் உண்மையாகவே
பயப்படுகிறார்கள் என்பதை அறிகிறார். குறிப்பாக, ஒருவருக் கொருவரான
சம்பாஷணையில் யார் தனக்குப் பயப்படுகிறார்கள் என்பதை தேவன்
கண்காணிக்கிறார். எப்படியெனில்மல்கியா 4:16-ம் வசனத்தில், "...
ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள் . . . " என்றே வாசிக்கிறோம். இன்றைய
மறுபடியும் பிறந்த விசுவாசிகளில் 1ரூ க்கும் குறைவானவர்களே தங்களுடைய
தனிப்பட்ட சம்பாஷணைகளில் தெய்வபயம் கொண்டிருக்கிறார்கள். எனவே தேவனுடைய
ஞாபகப்புஸ்தகத்தில் மிகமிகக் கொஞ்சம் பேர்களே இருப்பார்கள் என்பதே உறுதி.
இந்த ஞாபகப்புஸ்தகம் பிரமண்டமானதோர் புஸ்தகமாக இருக்குமென
எண்ணிவிடாதீர்கள். அப்புத்தகம் மிகச் சிறியதாகவே இருக்கும். ஆகிலும்
அக்கொஞ்சம் பேர்களை தேவன்"என் சம்பத்து"என பாராட்டி மகிழ்கிறார்"தேவன்
பலனளிக்கிற காலம் வந்தது" என்ற இந்த வசனத்தின் தொடர்பாக, லூக்கா 14-ம்
அதிகாரத்தில் இயேசு கொடுத்த கட்டளையைப் பார்க்கிறோம். லூக்கா 14:12 -ல்
"நீ பகல் விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன்
சிநேகிதரையாகிலும், உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும்,
ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்க வேண்டாம். அழைத்தால் அவர்களும்
அழைப்பார்கள். அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்."
என்றார். இந்த வசனத்தின்படியான இயேசுவின் கட்டளைக்கு கீழ்ப்படிய 1ரூ
விசுவாசிகளாவது ஆர்வம் காட்டுகிறார்களா? என்பது சந்தேகமே. இயேசு மேலும்
கூறும்பொழுது, 13-ம் வசனத்தில், "நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும்
ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக" என்றார்.
இவ்வசனத்தின்படியான சத்தியம், நாம் குருடர்களையும் சப்பாணிகளையும்
விருந்துண்ண அழைக்க தேடிச்செல்ல வேண்டும் என்பதில்லை. மாறாக 14-ம்
வசனத்தின்படி, "நமக்கு பதில் செய்யமுடியாதவர்களை" விருந்திற்கு அழைக்க
வேண்டும் என்பதுதான் இயேசு நமக்குக் கூறிய சத்தியமாகும்.
அப்படிச் செய்வோமென்றால், "நீ பாக்கியவானாயிருப்பாய்" (லூக்கா 14:14)என
இயேசு கூறினார். ஏனெனில் அவர்களிடமிருந்து பதிலுக்கு திரும்பிப் பெறாத
உங்களுக்கு தேவாதி தேவனால், "நீதிமான்களின் உயிர்த்தெழுதலில்
உங்களுக்குப் பதில் செய்யப்படும்" என இயேசு கூறினார். இந்நிகழ்ச்சி,
கடைசிநாளில்தேவன் பலனளிக்கிற காலத்தில்நிறைவேறும். தங்களுக்கு எந்த
சுயலாபமும் கருதாமல் பிறருக்கு நன்மை செய்தவர்கள் கடைசிநாளில் தேவனால்
பலனளிக்கப்படுவார்கள்! இங்கேயும் முந்தினோர் பிந்தினரோயும் பிந்தினோர்
முந்தினோராயும் அநேகருக்குச் சம்பவிக்கும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக