வியாழன், 1 செப்டம்பர், 2016

புதிய உடன்படிக்கை ஊழியன், தன்னை சார்ந்துகொள்ள மாட்டான்! - சகரியா பூணன்

யோவான் 5:44 -ல், "மனுஷரால் வரும் மகிமையை அதாவதுபெருமையைத்தேடும்
நீங்கள் எப்படிவிசுவாசிப்பீர்கள்?" என இயேசு மிகத் தெளிவாய் கேட்டார்.
விசுவாசம் கொள்வதற்கு பெருமையே நம்மைத் தடை செய்கிறது. இதிலிருந்து,
அவிசுவாசம் பெருமையிலிருந்தே தோன்றுகிறது என்பதை நாம் தெளிவாய்க்
காண்கிறோம். பெருமையான ஜனங்கள், தேவனைச் சார்ந்துகொள்ள வேண்டிய
தேவையற்றவர்களாய் இருக்கிறார்கள். ஆகவேதான் அவர்களிடத்தில் விசுவாசம்
இருப்பதில்லை!

இதைப்போலவேதாழ்மைக்கும், விசுவாசத்திற்கும்நெருங்கிய தொடர்பு இருப்பதை
நாம் காண்கிறோம். தன்னைத்தானே சார்ந்துகொள்ளாத ஒருவனே தாழ்மையுள்ள
மனிதனாவான். இந்தத் தாழ்மையான மனிதன்,தேவனை மாத்திரமே
சார்ந்துஜீவிப்பான்.

பழைய உடன்படிக்கையின்கீழ், ஒரு இஸ்ரவேலனின் பிரதான அடையாளமாய் இருப்பது
"விருத்தசேதனமேயாகும்". விருத்தசேதனம் பெறாத யாராய் இருந்தாலும், அவர்கள்
தேவஜனத்தோடு இராதபடிக்கு அறுப்புண்டு போவார்கள் (ஆதி 17:4).

புதிய உடன்படிக்கையிலோ, விருத்தசேதனத்தைக் குறித்த ஆவிக்குரிய விளக்கம்,
"தன் மாம்சத்தின் மீது நம்பிக்கை வைக்காதிருப்பதேயாகும்" (பிலிப்பியர்
3:3).

தன்மீது எவ்வித நம்பிக்கையும் வைக்காத ஒருவனையே தேவன் தன் வல்ல
கரத்தினால் ஆதரித்து தாங்கி, தன்னுடைய ஆவியினால் இடைவிடாது
அபிஷேகிக்கிறார். இயேசு கிறிஸ்துவைக் குறித்து, "இதோ, நான் ஆதரிக்கிற
(தாங்குகிற) என் தாசன் அல்லது அடிமை..... என் ஆவியை அவர் மேல் அமரப்
பண்ணினேன்" (ஏசா 4:21;மத் 12:18)என தீர்க்கதரிசனமாய் உரைக்கப்பட்ட
வசனத்தைக் கவனித்து பாருங்கள்.

ஓர்புதிய உடன்படிக்கையின் ஊழியனாய்இருப்பதற்கு, பரிசுத்தாவியின் நிறைவு
பிரதான தேவையாய் இருக்கிறது. நாம் மேற்கண்ட வசனத்தின்படி 'தேவன் யாரைத்
தாங்குகிறாரோ' அவர்களுக்கே தன்னுடைய அபிஷேகத்தைத் தருகிறார்!
ஆம், தேவன் யாரைத் தாங்குவார்? யாதொரு உதவியற்ற நிலையில் தன்னைச்
சார்ந்து கொள்பவர்களையே அவர் தாங்குகிறார்!

நம்மிலே நாம் பலவீனர்களாகாத பட்சத்தில், தேவன் மீது கொண்டிருக்கும்
விசுவாசத்தை நாம் ஒருக்காலும் அப்பியாசப்படுத்தவே முடியாது.
இல்லாவிட்டால், நம்முடைய விசுவாசம் மாம்சபுயத்தை சார்ந்ததாய் மாறிவிடும்.
இந்த "மாம்சபுயம்" நம் சொந்த புத்திசாலித்தனமோ, திறமையோ, பணமோ அல்லது
நாம் மிகுந்த நம்பிக்கையோடு காத்திருக்கும் சிலருடைய உதவியாகவோ
இருக்கக்கூடும்!

ஐசுவரியம் உள்ள ஒரு சகோதரனுக்கும், இன்னொரு ஏழை சகோதரனுக்கும் திடீரென்று
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால், யார் தேவனை அதிகமாய் நம்பி சார்ந்து
கொள்வார்கள்? அந்த ஏழை சகோதரனே தேவனை அதிகமாய் சார்ந்து கொள்வான்! ஆனால்
ஐசுவரியவனுக்கோ, போதுமான பணம் இன்னும் அவனிடத்தில் இருக்கிறது. ஆகவே,
ஜெபிப்பதுகூட அவனுக்குத் தேவையாய் தோன்றுவதில்லை. ஆனால் இந்த ஏழை,
விசுவாசம் நிறைந்த சகோதரனாய் இருந்தால், அவ்வேளையில் தேவனை நோக்கி
முறையிட்டு ஜெபிப்பான். இவ்வித பாக்கியம் கண்டடைந்த ஏழை, தேவனிடம் ஓரு
போதும் ஏமாந்து போகவே மாட்டான்! நாம் சார்ந்து கொள்வதற்கென மனுஷீக
மூலதனங்கள் இல்லாதிருக்கும் நிலையில் தான், நாம் விசுவாசத்தில்
ஜீவிப்பதற்கு துரிதமாய் கற்றுக் கொள்ள முடியும்!

தன் சொந்த பெலனை சார்ந்துகொள்ளாத ஒருவன் மாத்திரமே, பரிசுத்தாவியின்
பெலனை சார்ந்துவாழ்வான்! இந்த பாக்கியமான ஸ்தானத்தை கண்டடைந்த ஒருவனையே,
கிறிஸ்து தன்னுடைய புதிய உடன்படிக்கையின் சபைக்கு ஊழியனாய்
தெரிந்துகொள்கிறார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக