வியாழன், 1 செப்டம்பர், 2016

செம்மையான பாதையில் நடத்தும் ‘தேவ சமாதானம்’! - சகரியா பூணன்

அநேக சமயங்களில் நம் இருதயத்தின் சத்தத்தையும், ஆவியானவரின் சத்தத்தையும்
வேறுபடுத்திக் காண்பது நமக்கு அவ்வளவு எளிதாய் இருப்பதில்லை. ஆம், நம்
இருதயம் அத்தனை வஞ்சனை நிறைந்ததாகும்! உதாரணமாக, நமக்குப் பிடித்தமான ஒரு
வாழ்க்கைத் துணையை மனதிற்கொண்டு ஜெபிக்கும்போது, நமக்குள் தோன்றும் மன
எழுச்சியையும், நம்மில் பொங்கிவரும் மகிழ்ச்சியின் உணர்வுகளையும்...
அதுவே பரிசுத்தாவியினுடைய அங்கீகாரமென நாம் தவறாய் எடுத்துக் கொள்ள
முடியும்! ஆனால் நாமோநம் நோக்கங்களையும், தேவனுடைய மகிமை ஒன்றையே
தேடவேண்டியநம் விருப்பத்தையும்சோதித்தறிந்து, ஆண்டவர் நமக்கென
தெரிந்தெடுக்கிற எதையும் ஏற்றுக் கொள்ள ஆயத்தமுள்ளவர்களாயிருந்தால், மேற்
கண்ட வஞ்சகம் நமக்கு ஏற்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியும்.

பூரண அர்ப்பணமில்லாத வாழ்வும் அல்லது சுயநல நோக்கங்களும் எங்கு
காணப்படுகிறதோ, அங்குதான் நாம் வழிதவறி சென்றுவிடுகிறோம்!

சில சமயங்களில் தேவசித்தமானது நாம் விரும்புகிறபடியே இருந்திடமுடியும்!
அதுபோலவே, நாம் விரும்பாதபடியும் தேவ சித்தம் இருந்திட முடியும்! தேவ
சித்தத்தை செயல்படுத்துவது நமக்கு முன்னால் இருக்கும் "ஒரு கடினமான
பணியாக" நாம் எண்ணிவிடக் கூடாது. அதே சமயம் தேவ சித்தம் செய்வது மிக
எளிதானதெனவும் நாம் எண்ணிவிடக் கூடாது!! ஒரு கடினமான சூழ்நிலையில் அல்லது
ஒரு கஷ்டமான வேலையில் நாம் இருக்கும்போது, அந்த இடத்தை விட்டே ஓடிவிடலாமா
என்றுகூட நாம் சோதிக்கப்பட முடியும். இத்தருணத்தில், சூழ்நிலையைவிட்டு
ஓடும்படி ஆவியானவரே நடத்துகிறார் என மிக எளிதில் நாம் தவறு செய்திட
முடியும்! இதுபோன்ற சமயங்களில் நம் மனதில் சந்தேகம் எழுந்தால், நாம்
இருக்கும் அந்த வேலையிலேயே தங்கியிருந்து, தேவனை நம்பி, அந்த
சூழ்நிலையிலும் "கிறி°துவுக்கு ஜெயம்" உண்டாகிட ஏற்ற கிருபையைத் தருவார்
என காத்திருக்க வேண்டும்!

ஒன்றை செயல்படுத்த தீர்மானிக்கும்போது, நடைமுறைக்கு ஏதுவான "முயற்சி
ஒன்றை" நாம் செய்வது நல்லது. உதாரணமாக ஒரு பேப்பரை எடுத்து அதின் நடுவில்
கோடுபோட்டு"சூழ்நிலையின் சமநிலை"காண முயற்சித்துப் பாருங்கள். கோடு போட்ட
ஒரு பக்கத்தில் நீங்கள் மனதில் கொண்ட செயலை நீங்கள் ஏன் செய்ய
விரும்புகிறீர்கள் என்பதையும், கோட்டின் அடுத்த எதிர்புறத்தில் அந்த
செயலுக்கு எதிராக நீங்கள் கொண்ட காரணங்களையும் எழுதுங்கள்! ஒவ்வொரு
நாளும் இந்த இருபக்கத்தின் காரணங்களையும் முன்வைத்து ஜெபியுங்கள்.
நீங்கள் எழுதி வைத்த காரணங்களை மீண்டும் மறு பரிசீலனை செய்ய விரும்பினால்
அப்படியே செய்யுங்கள். இரண்டு வித்தியாசமான தீர்மானங்களில்எதுவானாலும்
அதை ஏற்றுக்கொள்ளஉண்மையான திறந்த மனதுடன் இருங்கள்! இவ்வாறு நீங்கள்
தொடர்ந்து ஜெபிக்கையில், நீங்கள் என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்து
பரிசுத்தாவியானவர் உங்கள் ஆவியில் சாட்சி கொடுப்பார்! ஒரு குறிப்பிட்ட
செயலுக்காக உங்கள் ஆவியில் சமாதானம் பெருகிக் கொண்டே சென்றால், நீங்கள்
அந்த செயலை தேவன் செய்ய விரும்புகிறார் என்பதற்கு ஓர் தெளிவான அடையாளமாய்
நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம்.! இதைக் குறித்து வேதாகமம் கூறும்போது, "தேவ
சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது. . . அதுவே உங்கள் மனதில் எழும்
கேள்விகள் அனைத்திற்கும் உறுதியான தீர்மானத்தை வழங்கக்கடவது" (கொலோசெயர்
3:15- விரிவாக்கம்) என கூறுகிறது.

இருதயத்தில் ஆளும் சமாதானமே, ஒரு கால்பந்து பந்தயத்திலுள்ள
'நடுவரைப்போல்' நமக்கு செயல்பட வேண்டும்! ஒரு கால்பந்து பந்தயத்தில்தவறு
நடக்கும்போது அங்குள்ள நடுவர் உடனே'விசில் ஊதுவார்!'உடனே விளையாட்டு
முழுவதும் நின்றுவிடும்.

அதுபோலவே சமாதானமில்லாத 'விசில்' நம் இருதயத்தில் ஊதியவுடன், உடனடியாக
நம்மை நாமே சோதித்தும் பார்க்க வேண்டும். நம்முடைய ஆவியில் மீண்டும் பூரண
சமாதானத்தை அடைந்த பிறகுதான் நம் ஜீவியத்தின் அடுத்த பகுதிக்கு
முன்னேறிச் செல்ல வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக