ஆவிக்குரிய ராஜ்ஜியம்:-
பாகம் 1ல் நாம் பார்த்த இரண்டும் ஆவிக்குரிய ராஜ்ஜியத்தை குறிக்கிறது.
யூதர்கள் உலகுக்குரிய தேவனுடைய ராஜ்ஜியத்தை உடனடியாக எதிர்பார்த்தனர்.
எனவே அது அப்போது காணும்படியாக (பிரத்தியச்சமாக) வராது என கர்த்தர்
கூறினார் (லூக் 17:20). மேலும் என்னுடைய ராஜ்ஜியம் இவ்வுலகத்துகு உரியது
அலல என பிலாத்துவிடம் இயேசு கூறிய பொழுது (யோவா 18:36) தமது ஆவிக்குரிய
ராஜ்ஜியத்தை குறிப்பிட்டார். ஆனால் தமது இரண்டாம் வருகையை அடுத்து இயேசு
உலகத்தில் அரசாளுவார் என வேதம் கூறுவது (மத் 25:31) நாம் அறிந்ததே. இதை
வரவிருக்கும் தேவனுடைய ராஜ்ஜியம் என்று கான்கிறோம்.
3). தேவனுடைய நேரடி அரசாட்சி (வருங்கால தேவனுடைய ராஜ்ஜியம்):-
இயேசு மீண்டும் வந்து முழு உலகத்தையே அரசாளுவார் என்று பழைய மற்றும்
புதிய ஏற்பாடுகளில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. மேற்கிலும்
கிழக்கிலும் இருந்து வருவார்கள், ஆயகாரரும், வேசிகளும் ஆபிரகாம் ஈசாக்கு
யாக்கோபு என்பவர்களும் பரலோக ராஜ்ஜியத்தில்
பந்தியிருப்பார்கள் என்பது வருங்கால ராஜ்ஜியத்தை குறிக்கிறது (மத்
8:11-12; 21:31; லூக் 13:28-29). நீதிமான்..... பிதாவின்
ராஜ்ஜியத்திலே... (மத் 13:43) என்பதும், பிதாவின் ராஜ்ஜியத்திலே.... (மத்
26:29; மாற் 14:25; லூக் 22:16,18) என இயேசு கூறியதும் வருங்கால
ராஜ்ஜியத்தையே குறிக்கிறது. பிதாவின் ராஜ்ஜியத்தை
சுதந்தரிக்கும்படி இயேசு கூறிய போதும் (மத் 25:31-34), உங்களுக்கு
ராஜ்ஜியத்தை கொடுக்க......, (லூக் 12:32) என இயேசு கூறியதும் வருங்கால
ராஜ்ஜியத்தையே குறிக்கிறது.
மேலும் மாற் 9:47ல் தேவனுடைய ராஜ்ஜியத்தில் நுழைவது..., என்பதும்
வருங்கால ராஜ்ஜியமே. இயேசுவின் ஆயிர வருட ஆட்சி தொடங்கும் இதில்
பரிசுத்தவான்கள் இருப்பார்கள் (வெளி 20:4,6). பிறகு புதிய பூமியில்
பிதாவும் குமாரனும் அரசாளுவார்கள் (வெளி 22:1). இந்த ஆட்சி என்றென்றும்
இருக்கும். பரிசுத்தவான் தொடர்ந்து என்றென்றும் இயேசுவுடன் அரசாளுவார்கள்
(தானி 7:18,21,27; 1கொரி 15:25-28). இவையெல்லாம் தேவனுடைய நேரடி ஆட்சியை
குறிக்கிறது. இந்த ராஜ்ஜியத்தில் நுழைவதற்காக சொல்லப்பட்ட உவமைகளை (மத்
25:1-13; 14-30; லூக் 19:11-27; மத் 13:47-50) விவரிக்கிறது.
இந்த அரசில் பெரியவன் சிறியவன் உண்டு என இயேசு கூறியுள்ளார் (மத் 5:19;
11:11; லூக் 7:28). இந்த ராஜ்ஜியத்தை குறிக்கும் பல குறிப்புகளை
ஏசாயா 11;
தானி 2:44;
மத்தேயு 7:21-23;
லூக்கா 1:33; 21:31; 22:29-30; 23:42
அப் 1:6;
1கொரி 6:9-10; 15:24,50;
கலா 5:19-21;
எபே 5:5;
2தீமோ 4:18;
எபி 1:8; 12:28;
2பேதுரு 1:11;
வெளி 12:10
போன்ற பகுதிகளை தியானித்து அறிந்து கொள்ளுங்கள்.
மறுபடியும் பிறவாதவர், ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாதவர் தேவனுடைய
ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது (யோவா 3:3, 5). பாவத்தில் ஜீவிப்பவர்
பிரவேசிப்பதில்லை (கலா 5:19-21; எபே 5:5). பின்மாற்றதில் வாழ்கிறவர்கள்
அதற்குள் செல்ல தகுதி இழக்கின்றனர் (லூக் 9:62). இதற்குள் வர
ஈவிரும்புகிறவர்கள் அநேக உபத்திரவங்களை கடக்க வேண்டும் என வேதம்
கூறுகிறது (அப் 14:22;
2தெச 1:5).
மூன்று வகை
ராஜ்ஜியத்திற்கும்
பொருந்தும் பகுதிகள்:-
ஆவிக்குரிய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்போர்களே இறுதி ராஜ்ஜியத்திலும்
பங்கேற்க முடியும். மத் 5:3இன் படி ஆவியில் எளிமை உள்ளவர்களே தங்களை
தாழ்த்தி இயேசுவை ஏற்றுக்கொள்ள முடியும். இப்படிபட்டவர்களே இறுதியில்
இயேசுவுடன் அரசாள முடியும்.
மத் 6:33; லூக் 21:36; வெளி 22:11 இந்த பகுதிகளின் படி தேவனுடைய
ராஜ்ஜியம், நீதியை தேடு என்பது தனி மனிதன் தன் இரட்சிப்பையும், இயேசுவின்
சரீரமாகிய சபையின் நன்மைகளையும் நாடுவதோடு, வர போகும் ராஜ்ஜியத்திற்கு
ஆயத்தமாவதையும் அதற்காக ஜெபிப்பதையும் அதன் விரிவாக்கத்திற்காக ஆத்தும
ஆதாயம் செய்வதையும் குறிக்கிறது.
இத்தகைய கருத்துகளை மத் 5:3, 10, 20; 6:10; 18:1-4; 19:23-24; லூக் 6:20;
11:2; 12:31; 18:16-17; ரோம 14:17 போன்றவற்றிலும் அறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக