ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

எது ஹிந்து மதம்...? இந்து மதம் என்றால் என்ன? எப்போது உருவானது? (பாகம் - 1)

இந்து மதம் என்ற வார்த்தையாவது நம் தமிழ் நூல்களில் எங்கேயாவது, எதிலாவது உண்டா?

இந்து மதம் என்றால் என்ன?எப்போது உருவானது?
அதன் பிராமணம், தத்துவம், ஆதாரம் என்னவென்று யாரையும் கேட்டுத் தெரிந்து
கொள்ள முடியாது. இந்து மதத்தின் பெயரால் மதம் என்று சொல்லிக்கொண்டு
ஒருவருக்கொருவர் சண்டை போடுகிறோம்
உட்பிரிவுகளாகிய சைவ, வைணவ சமயங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட
பழக்கப்பட்டு இருக்கிறோம்.

இதில் ஒரு கடவுள் பெரியது, ஒரு கடவுள் சிறியது என்றும்,
ஒரு கடவுள்காரர் மற்ற கடவுளை வணங்குதல் பாவம் என்றும்,
ஒரு மதத்தவனை மற்றொரு மதத்தவன் பார்ப்பது பாவம் என்றும்
சண்டையிடுகிறோமே
யல்லாமல் இந்து மதம் என்றால் அது என்ன என்பதை நம்மில் ஒருவரும் அறிவதில்லை.

இந்து மதம் எப்பொழுது உருவானது என்றால், அது அனாதி மதம், வேத காலம்
தொட்டு இருக்கிறது என்கிறார்கள். வேதம் எப்பொழுது யாரால் உருவானது
என்றால், அதுவும் அனாதியானது, கடவுளால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள் .

" அய்யா வேதம் என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறீரே!
கடவுள் எல்லோருக்கும் சமமானவர்தானே, அதை (வேதத்தை) நான் பார்க்கலாமா?
என்றால், ஆகா, மோசம் வந்துவிடும்; நீ பார்க்கக் கூடாது;
நீ சூத்திரன்; அதைப் பார்த்தால் கண்ணைப் பிடுங்கிவிட வேண்டும்; படித்தால்
நாக்கை அறுத்துவிட வேண்டும்;
யாராவது படிக்கும் போது கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்"
என்கிறார்கள்.

அது போகட்டும்; இந்த இந்து மதம் என்ற வார்த்தையாவது நம் தமிழ் நூல்களில்
எங்கேயாவது, எதிலாவது உண்டா? இல்லை.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் நம்மிடையே பல
உள்ளனவே! அதில் எதாவது இடத்தில் பெயருக்காகவாவது இருக்கிறதா என்று
பார்த்தால் அதுவும் இல்லை.இந்து மதப்பெயரின் ரகசியமே நமக்குத்
தெரியவில்லை, இது எவ்வளவு மானக்கேடான நிலைமையாக இருக்கிறது?

இந்து என்ற வார்த்தை 'பெர்ஷியன்' பாஷையில்தான் வழங்கப்படுகிறது. அதற்கு
அர்த்தம் என்னவென்றால், 'திருடன்' என்பது பொருள்.

இந்து என்ற வார்த்தை, சிந்து நதிக்கரை வழியே ஆரியர்கள் வந்ததால்,
'சிந்து' 'இந்து' வாகி பின் இந்தியனாகிவிட்டதாக ஆங்கில ஆராய்ச்சியாளர்கள்
சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமும் உள்ளது,

அதே மாதிரி, இந்து சமயம் பார்ப்பனர் சமயம் என்றும் ஆங்கில ஏடுகள்
ஆதாரத்தோடு கூறுகிறது. அவ்வாறே ஆங்கில ஏடுகளை நம்பாமல் ஆரியர்களால்
ஒப்புக் கொள்ளப்பட்ட வேதம் சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம் இவைகளின் பாஷியம்,
புராணம் என்பன போன்ற ஆதாரங்களில் ஒரு இடத்தில் கூட இந்து என்ற பெயர் இடம்
பெறவில்லை.:- தந்தை பெரியார் 1923. --நன்றி:>> thamilachi
http://thamilachi.blogspot.com/
--------------------------------

எது ஹிந்து மதம்...?

ஆனால்... நமது புஸ்தகங்களில் வேதங்களில் ஆயிரம் இடங்களில் 'சிந்து' என்ற
வார்த்தைதான் உள்ளதே தவிர... ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட
இல்லவே இல்லை. கிடையவே கிடையாது.

பிறகு...'ஹிந்து...' என்ற பெயர் வந்தது எப்படி?

நான் மேலே சொன்ன விஷயங்களெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு!
இப்போது சொல்லப்போவது சிற்சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு.

ஆமாம்... எண்ணி சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னால்தான்
அய்ரோப்பியர், அதாவது வெள்ளைக்காரர்கள் நமது தேசத்தில் அடியெடுத்து
வைத்தனர். அப்போது நமது தேஸத்தில் ஆங்காங்கே மொகலாய சாம்ராஜ்யம்
ராஜாங்கம் செய்து கொண்டிருந்தது. அதாவது முகம்மதிய சுல்தான்கள் ஆட்சி
செய்து வந்தனர். அப்போது வெறும் வியாபார நோக்கத்தில் இங்கே வந்தார்கள்
வெள்ளைக்காரர்கள்.

அப்போது நமது பூமியில் எல்லா வளங்களும் கொழித்துக் கிடந்தன. ஆனால்
'ஒற்றுமை' என்னும் வளம் மட்டும் வறண்டு கிடந்தது.அதாவது...
மொகலாயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள்...
தங்களுக்குள்ளும் அடித்துக் கொண்டனர். சிற்றரசர்கள் என்ற ரீதியில்
ராஜாக்கள் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டனர். மக்களோ... ப்ராம்மண,
சூத்ர, பஞ்சமர் பிளவுகளில் ஈடுபாட்டோடு இருந்தனர்.

பார்த்தான் வெள்ளைக்காரன், 'என்னடா இது?' என கேட்டான். 'இதுதான் எங்கள்
ஜாதி தத்வம்; இதை கேட்க நீ யார்?' என குரல் எழுந்தது.சரி...
இவர்களிடையே இவ்வளவு பிளவுகள் இருக்கிறது. இந்த தேஸத்தில் இவ்வளவு
வளங்கள் இருக்கிறது... என யோசித்த வெள்ளைக்காரன் தன் குடும்பம்,
குட்டிகளோடு இங்கே வந்தான்.

அங்கிருந்து பாதிரிகளும் இங்கே வந்தனர். நமது தேஸத்தில் புரையோடிப்
போயிருந்த 'ஜாதிதத்வ' நடைமுறை... அதாவது 'ப்ராம்மணனே தெய்வம்' நசூத்ரா
மதிந்தத்யாது... (சூத்திரனை அடி உதை. அவனுக்கு எந்த உபதேசமும் கிடையாது)
என்ற நிலைமைகளைப் பார்த்து...
ஒரு அணா, ரெண்டு அணாவுக்கு புஸ்தகங்களைப் போட்டான். அவற்றை
சூத்ரர்களிடையே விநியோகித்தான். உங்கள் நிலைமை எப்படியிருக்கிறது
பாருங்கள்... என அந்த புஸ்தகங்களைக் காட்டினான்.

'Don't follow, religion of brhamin, we give you alternative'
என்பதுதான் அவர்களின் முழக்கமாக இருந்தது.

இப்படியாக சில பல வருடங்கள் ஓடிக் கொண்டிருக்க... இந்த ஒட்டுமொத்த மக்களை
எப்படி அழைப்பது? என யோசித்தான்
வெள்ளைக்காரன். அப்போதுதான் இவர்கள் சிந்துநதிக்கரை மக்கள்,
அப்படியென்றால் இவர்களை 'சிந்தூ' எனக் கூப்பிடுவோம் என முடிவுக்கு
வந்தான். அதாவது... பிரிட்டிஷ் டாக்குமெண்ட்களில் நம்மை அவன் முதன்
முதலில் எப்படிக் குறிப்பிட்டான் என்றால் 'Zindoo...'

நமது மதத்துக்குப் பெயராக வேதக்காரர் சொன்னது முதல் வெள்ளைக்காரன் சொல்ல
வந்தது வரை பார்த்தோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக