மனித வரலாறு:-
உலகிலேயே மிக நீண்டகாலமாக மக்கள் தொடர்ந்து வசித்து வருமிடமாக
சாக்கடலுக்கு அண்மையிலுள்ள ஜெரிக்கோ ( எரிக்கோ) நகரம் நம்பப்படுகிறது.
விவிலியத்தில்குறிப்பிடப்படும் சோதோம், கொமொரா
நகரங்கள் சாக்கடலின் தென்கீழ்க்கரைக்கண்மையில் அமைந்துள்ளன என
ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். வேதாகமம் விவிலியத்தில் பழைய ஏற்பாட்டின்படி
சோதோம், கொமோரா ஆகிய இந்நகரங்கள்
ஆபிரகாம்காலத்திலே கடவுளால் அழிக்கப்பட்டது ஆதி 19:1-9). சவுல் அரசன்
தாவீதைகொலை செய்யத் தேடியபோது தாவீது மறைந்திருந்த குகை
சாக்கடலுக்கண்மையில் உள்ள எய்ன் கெடியில்
அமைந்துள்ளது.
எகிப்திய அரசி கிளியோபட்ரா சாக்கடலின் கரையோரத்தில் கிடைத்த கனிமங்களைக்
கொண்டு அழகுசாதனப் பொருட்கள், மற்றும் மருந்து வகைகள் தயாரிக்கும்
தொழிற்சாலை நிறுவ, உரிமனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அடைவதற்குக்
கடினமான இடமாக இருந்தமையால் கிரேக்க மரபுவழி திருச்சபை சாதுக்களை
பைசன்டைன் காலம் முதல் இவ்விடம் ஈர்த்தது. 'வாடி கெல்ட்'ல் உள்ள 'புனித
ஜோர்ஜ்' மற்றும் யூதேயப் பாலைவனத்திலுள்ள 'மர் சாபா' ஆகிய தங்குமிடங்கள்
இப்போது யாத்திரைத் தலங்களாக விளங்குகின்றன.
சாக்கடல் பற்றிய வேதாகம குறிப்புகள்:-
கலிலேயக் கடல்போன்று சாக்கடல் பற்றிய குறிப்புகள் விவிலியத்தில் அதிகம்
இல்லை. பாலஸ்தீன நாட்டின்தென்கிழக்கு எல்லையில் அமைந்த இந்த ஏரிக்கு
விவிலியத்தில் பல பெயர்கள் உள்ளன. ஆனால் ஒரேயொரு தடவை மட்டுமே இன்றைய
பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கேபாலைநிலக்கடல் என்னும் சாக்கடல்
என்னும் சொற்றொடர் உள்ளது (காண்க: யோசுவா 3:14-16):
"மக்கள் தங்கள்
கூடாரங்களிலிருந்து யோர்தானைக் கடக்கப் புறப்படும்போது குருக்கள்
உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள் முன்னே சென்றனர்.
உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர்.
அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன்,
மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர்
வெகுதொலையில் நின்றது. அறுவடை நாள்களில் இந்நதி கரைபுரண்டு ஓடும்.
மேற்பகுதியிலிருந்து வந்த நீர், சாரத்தானின் அருகில் இருந்து ஆதாம்
நகருக்கு எதிரில் வெகு தொலையில் மேலெழும்பி நின்றது. கீழே ஓடிய நீர்
பாலைநிலக் கடலாகிய சாக்கடல் வரை ஓடிமறைந்தது. மக்களும் எரிகோவுக்கு
நேர்எதிராகக் கடந்து சென்றனர்."
செப்துவசிந்தா என்னும் விவிலியக் கிரேக்க மொழிபெயர்ப்பில்சமவெளிக் கடல்
என்னும் உப்புக் கடல்என்னும் விளக்கம் உள்ளது. யோவேல் நூல் 2:20)
சாக்கடலை
"கீழைக் கடல்" என்றும் கலிலேயக் கடலை"மேலைக் கடல் என்றும் குறிப்பிடுகிறது:
"அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது
கருணை காட்டினார். ஆண்டவர் தம் மக்களுக்கு மறுமொழியாகக் கூறியது இதுவே:
"நான் உங்களுக்குக் கோதுமையும், திராட்சை இரசமும், எண்ணெயும் தருவேன்;
நீங்களும் நிறைவு பெறுவீர்கள்; இனிமேல் வேற்றினத்தார் நடுவில் உங்களை
நிந்தைக்கு ஆளாக்கமாட்டேன். வடக்கிலிருந்து வந்த படையை உங்களிடமிருந்து
வெகு தொலைவிற்கு
விரட்டியடிப்பேன்; அதனை வறட்சியுற்றதும் பாழடைந்ததுமான நிலத்திற்குத்
துரத்திவிடுவேன். அதன் முற்பகுதியைக் கீழைக் கடலுக்குள்ளும், பிற்பகுதியை
மேலைக் கடலுக்குள்ளும் ஆழ்த்துவேன். பிண நாற்றமும் தீய வாடையும் அங்கே
எழும்பும்; ஏனெனில் அது பெரும் தீச்செயல்களைப் புரிந்தது. நிலமே நீ
அஞ்சாதே; மகிழ்ந்து களிகூரு; ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச்
செய்தார்"."
சாக்கடல் "உப்புக் கடல்" என்று தொடக்க நூல் 19:1-3பிரிவில் உள்ளது:
"அம்ராபல் சினயார் அரசனாகவும் அரியோக்கு எல்லாசரின் அரசனாகவும்
கெதர்லகோமர் ஏலாமின் அரசனாகவும் திதால் கோயிமின் அரசனாகவும்
இருந்தபொழுது, அவர்கள் சோதோம் அரசன் பெரா, கொமோரா அரசன் பிர்சா, அதிமா
அரசன் சினாபு, செபோயிம் அரசன் செமேபர், பேலா அரசன் சோவார் ஆகியோருக்கு
எதிராகப் போர் தொடுத்தனர். அவர்கள் அனைவரும் இப்பொழுது உப்புக்கடலாக
இருக்கும் சித்திம் பள்ளத்தாக்கில் ஒன்று திரண்டனர்."
எசேக்கியேல் நூல்எருசலேம் கோவிலின் தூயகத்திலிருந்து தண்ணீர் பாய்ந்தோடி,
பாலைநிலத்தைச் சோலைவனமாக மாற்றி, உப்புக் கடலினை நன்னீரால் நிரப்பி வளமை
கொணர்ந்ததைக் காட்சியாக விவரிக்கிறது:
"அவர் என்னிடம் "மானிடா! இதைப் பார்த்தாயா?" என்றார். பின்னர் அவர் என்னை
ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார்.
நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக்
கண்டேன். அவர் என்னிடம் உரைத்தது: "இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை
நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது
கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு
பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள்
இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய்
மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும்"."
இசுலாமியநம்பிக்கையில் சாக்கடற் பகுதி "லூத்" (கிறிஸ்தவ விவிலியத்திலும்
காணப்படும் லோத்து), இவர் நபியுடனும் சம்பந்தப் படுத்தப்படுகிறார்.
பெடுயின்இஸ்லாமிய குழுவினரும் நீண்டகாலமாக இப்பகுதியில் வசித்து
வருகின்றனர். கடந்த நூற்றாண்டில் அண்மித்த குகையொன்றிலிருந்து ஓலைச்
சுருள்கள் பல கண்டெடுக்கப்பட்டன. இவை சாக்கடல் ஓலைச் சுருள்கள் (Dead Sea
Scrolls) என அறியப்படுகின்றன. அண்மையிலிருந்து அறிவியலாளரும்
சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்லுமிடமாக மாறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக