தூதர்களைத் தேவன் சிருஷ்டித்தபோது, அவர்களுடைய தலைவனாகவே லூசிபரை
நியமித்தார். இந்த லூசிபரை ஞானத்திலும், அழகிலும் பூரணம் உள்ளவனாகவே
சிருஷ்டித்தார்! தேவனுடைய பரிசுத்தத்தை பூமிக்குப் பிரதிபலிக்க வேண்டிய
உத்திரவாதத்தையே இந்த லூசிபர் பெற்றிருந்தான். ஆனால் அவன் இருதயமோ தன்
அழகு, ஞானம், வரங்கள் போன்ற தகுதியினிமித்தம்பெருமையினால்மேட்டிமை
கொண்டது! எனவே, தேவன் தன்னுடைய உள்ளத்தில் துயரம் அடைந்து, அவனைத்
தன்னுடைய சமூகத்திலிருந்து கீழே தள்ளினார் (எசே .28:12-15).ஆம்,
கோடானுகோடி தூதர்கள் திரளாய் இருந்த போதும், தேவனோ "பரிசுத்தத்திலேயே"
(PURITY) அக்கறை உள்ளவராய் இருந்தார்.
பின்பு, தேவன் மறுபடியும் இதே 'தூய்மை' (Purity) நோக்கத்தோடுதான்
ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்தார். அவர்கள் தன் சாயலையும், ரூபத்தையும்
பிரதிபலிக்க விருப்பம் கொண்டாரே அல்லாமல், அவர்கள் பலுகிப் பெருகுவது
அவரின் பிரதான நோக்கம் அல்லவே அல்ல! (ஆதி 1:26-28).அவர்கள் தங்களின்
பரிசுத்தத்தை இழந்தபின்பு, மாபெரும் ஓர் மனுக்குலமாகப் (Human race)
பெருகியது தேவனை சிறிதும் கவர்ச்சிக்கவேயில்லை!
பார்த்தீர்களா, "தேவன் தூய்மையையே அல்லாமல் எண்ணிக்கையை
விரும்புவதேயில்லை." பிரசங்கி சொல்லுவதுபோல்,"பிரயோஜனமற்ற 'திரளான'
பிள்ளைகளில்விருப்பம் கொள்ளாதே! அவபக்தியான புத்திரர்கள்மேலும் விருப்பம்
வேண்டாம்!! அவர்களிடம் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம்
காணப்பட்டாலேயன்றி, அவர்கள் பலுகிப் பெருகுவதினிமித்தம் ஒருபோதும்
மகிழ்ச்சி அடையாதே!! உன் பிள்ளைகளின் எண்ணிக்கை உனக்கு ஒரு பொருட்டாக
இருக்க வேண்டாம். ஏனெனில்,நீதிமானாகிய ஒரு பிள்ளைஆயிரம் அசுத்தமான
பிள்ளைகளிலும் மேலானவன்" என ஆணி அறைந்ததுபோல் கூறும் வார்த்தைகளைப்
பாருங்கள்.
பின்பு, தேவன் தன் கிரியையை ஆபேலின் ஜீவியத்தில் தொடர்ந்தார். அவன்
தேவனுக்குப்பரிசுத்தமான உகந்த பலியைக்கொண்டுவந்தான்! ஆனால் அதையும்,
பிசாசானவன், அவன் சொந்த சகோதரன் காயீன் மூலமாகவே ஆபேலைக் கொலை செய்து
அழித்துப்போட்டான்!! பின்பு தேவன், ஆதாம் ஏவாளுக்கு "சேத்" என்ற இன்னொரு
மகனைத் தந்தார். இவனுடைய நாட்களில்தான் ஜனங்கள் தங்களை "தேவ ஜனம்" என்று
அழைக்கப்பட்டு, "கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளவும்" தொடங்கினர்!
ஆனால், சீக்கிரமே இந்த தேவத்துவம் நிறைந்த தேவ சந்ததியும் கறைப்பட்டு,
"மனுஷர்களுடைய இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும்
பொல்லாததாய்" மாறியது (ஆதி 6:5-6)என தேவன் அங்கலாய்க்கும்படி மாறியது.
இன்றோ, தேவன் தமது சபையை கட்டுகிறார்! தன் சபையில் 'தூய சாட்சியை' அவர்
விரும்புகிறார்! ஆனால், இன்றோ ஜனங்களை திரளாய் கூட்டிச் சேர்ப்பதில்
ஆர்வம் கொண்ட சபைகள் தான் எங்கும் நிறைந்திருக்கிறது. சிலராய்
இருந்தாலும் "தேவனுக்கு தூய சாட்சியுடைய" சபை வேண்டும் என்ற பேரார்வம்,
இன்றைய திரளான சபைகளில் காணப்படவில்லையே என்பதுதான், தேவனுடைய
அங்கலாய்ப்பாய் தொடருகிறது. உத்தம சபை வேண்டும்! அது தேவனுடைய மனதை
மகிழ்விக்க வேண்டும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக