புதன், 31 ஆகஸ்ட், 2016

<h1 style="color:blue;.>சாக்கடல் (உப்புக் கடல்) பாகம் - 1</h1>

ஆள்கூறுகள்: 31°20′N 35°30′E

வகை : உவர்ப்புத் தன்மை மிகுதி

முதன்மை நீர் வரத்து: யோர்தான் ஆறு

முதன்மை நீர் வெளிப்போக்கு: ஒன்றும் இல்லை

வடிநிலம் : 41,650 km2(16,080 sq mi)

யோர்தான், இசுரயேல், மேற்குக் கரை வடிநில நாடுகள் ஆகும்.

நீளம் : Max. length
67 km (42 mi)

அகலம் : Max. width
67 km (42 mi)

மேற்பரப்பு:
810 km2(310 sq mi)

சராசரி ஆழம்:
118 m (387 ft)

அதிகபட்ச ஆழம்:
377 m (1,237 ft)

நீர் அளவு:
147 km3(35 cu mi)

கரை நீளம்:
1135 km (84 mi)

சாக்கடல் அல்லது இறந்த கடல்(Dead Sea, எபிரேயம்: ים המלח‎ (உப்புக்
கடல்); அரபு: البحر الميت‎) என்னும் நீர்நிலையானது மேற்குக் கரை,
இசுரேல், யோர்தான் ஆகியவற்றின் எல்லையில், பெரும்பிளவுப் பள்ளத்தாக்கின்
யோர்தானியப் பகுதியில் அமைந்துள்ளது. இக் கடலில் உயிரினங்கள்வாழ
முடியாமையினாலேயே இதுசாக்கடல் அல்லது இறந்தகடல் என அழைக்கப்படுகிறது.

முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்ட இக்கடல் ஓர் உவர் நீரேரி ஆகும். 377
மீட்டர்(1237 அடி) ஆழமுடைய சாக்கடல், பொதுவான கடல்நீரிலுள்ள
உப்புத்தன்மையை விட 8.6 மடங்கு அதிகளவு உவர்ப்புடைய நீரைக் கொண்டது. கடல்
மட்டத்திலிருந்து தற்போது 423 மீட்டர் (1388 அடி) கீழே அமைந்திருக்கிற
சாக்கடல் தொடர்ந்தும் கீழிறங்குகிறது. இவ்விறக்கம் பூமியின் மேல்
ஓடுகளின் விரிசலினால் ஏற்படுகிறது.

உப்புத் தன்மை மிகுந்திருப்பதால் இந்த ஏரியில் உயிரினங்கள் வாழ்வது
அரிது. எனவே சாக்கடல் என்னும் பெயர் எழுந்தது. சாக்கடலின் நீளம் 67 கி.மீ
(42 மைல்); மிகுதியான அகலம் 18 கி.மீ (11 மைல்). இதற்கு யோர்தான்
ஆற்றிலிருந்தே பெருமளவில் நீர் கிடைக்கிறது. சாக்கடலுக்கு அடியிலும்
அதைச் சுற்றியும் உள்ள நீரூற்றுகளிலிருந்தும் நீர் கிடைக்கிறது. இதனால்
இந்த ஏரியைச் சுற்றி சிறிய நீர்த்தேக்கங்களும் புதைமணல் பகுதிகளும்
உருவாகியுள்ளன.

வேதியியற் தகவல்:-

1960 வரை சாக்கடலின் மேற்பகுதியில் உப்புத்தன்மை குறைவாயும், ஆழப்
பகுதிகளுக்குச் செல்லச் செல்ல உப்புத்தன்மை அதிகமாயும் காணப்பட்டது.
நீர்ப் பாசனத்துக்குக்காக ஜோர்டான் ஆறு திசைதிருப்பட்டதாலும் மழை
குறைந்ததாலும் சாக்கடல் பெறும் நீரின் அளவு குறைந்தது. 1975ம்
ஆண்டளவிலிருந்து சாக்கடலின் மேற்பகுதி உவர்ப்புத்தன்மை அதிகமுள்ளதாக
மாறியது. ஆனால் மேற்பகுதி நீரின் வெப்பநிலை ஒப்பீட்டளவில் கீழ்ப்பகுதியை
விட வெதுவெதுப்பாய் இருப்பதால் அடர்த்தி் குறைவாக இருக்கிறது. அடர்த்தி
குறைந்த நீர் மேல்பகுதியில் இருக்கிறது. மேல் பகுதியின் நீர்
குளிர்ந்ததும் இதுவரை இரு வேறு வெப்பநிலைகளைக் கொண்டிருந்த மேல் கீழ்
பகுதிகளின் நீர் கலந்தன. இதனால் முன்னெப்போதும் இல்லாதவாறு முழுக்கடலுமே
ஒரே வெப்பநிலையுடையதாக மாறியுள்ளது.

சாக்கடலின் உவர்ப்புத் தன்மையால் நீருள் மூழ்காமல் மிதக்கும்.

இதன் நீர் அதிகளவு உப்புத்தன்மை கொண்டதாக இருப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன:

1. சுற்றியுள்ள பகுதியின் ஆறுகள் இக்கடலில் கலத்தல் (ஆற்று நீரிலுள்ள
கனிம உப்புக்கள்)

2. ஆவியாதல் மூலம் மட்டுமே இக்கடலிலிருந்து நீர் வெளியேறுதல்

சாக்கடல் நீரிலுள்ள கனிமங்கள்:-

*மக்னீசியம்
குளோரைட் 53%,
*பொட்டாசியம்
குளோரைட் 37%,
*சோடியம்
குளோரைட்
(சாதாரண உப்பு) 8%,
*பல்வேறு
உப்புக்கள் 2%.

இதன் உவர்தன்மை மாறிக்கொண்டிருந்தாலும் அண்ணளவாக 31.5%. அதிகளவு
உப்பிருப்பதால் நீரின் அடர்த்தி அதிகமாகக் காணப்படுகிறது. இந்நீரை விட
அடர்த்தி குறைவாயுள்ள எதுவும் சாக்கடல் நீரில் மிதக்கும். மனிதர்கள் கூட
நன்னீர்/கடல்நீரில் போன்று அமிழ்ந்து விடாது மிதப்பர். பல கனிமங்களின்
படிவுகள் சாக்கடலின் கரையில் காணப்படல், மாசுபடாத வளி, வளியமுக்கம்
அதிகமாயிருத்தல், அதி ஊதாக் கதிர்களின் வீச்சுக் குறைவாயிருத்தல் என்பன
உடல்நலத்தை ஊக்குவிக்கும் காரணிகளாக அமைவதால் உடல் மற்றும் அழகுச்
சிகிச்சைக்குப் புகழ் பெற்ற இடமாகவும் சாக்கடல் விளங்குகிறது.

உயிரினங்கள்
அதிகளவு
உவர்ப்புத்தன்மையுடைய நீரில் மீன்களோ தாவரங்களோ வாழ முடியா விட்டாலும்
மிகச் சிறியளவில் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. மழைக்காலத்தில் உப்புத்தன்மை
சற்றுக் குறைவதால் குறுகிய காலத்திற்கு சாக்கடலில் உயிரிகள் வாழும்.
1980ம் ஆண்டில் மழைக்காலத்தின் பின் (வழமையாக கடும்நீல நிறத்தில்
காணப்படும்) சாக்கடல் செந்நிறமாக மாறியது குறிப்பிடத்தக்கது. பெருமளவில்
காணப்பட்ட டுனலியெல்லா என்கிற ஒரு வகைப்பாசியை உண்ட சிவப்பு நிறமிகளைக்
கொண்ட நுண்ணுயிரிகளே செந்நிறத்திற்குக் காரணம் என அறிவியலாளர்
கண்டறிந்தனர்.

சாக்கடல் பகுதியில் பல்லினப் பறவைகளும் ஒட்டகம், முயல், நரி,
சிறுத்தைபோன்ற விலங்குகளும் வாழ்கின்றன. இசுரேல், ஜோர்டான் நாடுகள்
இயற்கைப் புகலிடங்களை (சரணாலயங்களை) இப்பகுதியில் அமைத்துள்ளன.

ஒரு காலத்தில் பப்பைரஸ் மற்றும் தென்னை மர இனத் தாவரங்கள் பெருமளவில் காணப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக