செவ்வாய், 25 அக்டோபர், 2016

காலக்கிரமமாகத்தொகுக்கப் பட்ட நிகழ்ச்சிக் குறிப்புகள் | CHRONICLE (15)

Mondex Smart Card:

இந்த Bio Chips(உலோக மாத்திரை) என்ற சிறிய எலக்ட்ரானிக்கருவியை Mondex
Smart Card என்ற நிறுவனத்திற்காக மோட்டரோலா(Motorola) என்ற கம்பெனி
தயாரிக்கிறது.
Mondex என்ற இந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளாக 20 நாடுகளில் 250க்கும்
அதிகமான கம்பெனிகள் உலகமெங்கும் இதை விற்பனை செய்து வருகின்றன.
பிரிட்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல்,
ஹாங்காய், சீனா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்,
தாய்லாந்து, இந்தியா, தைவான், இலங்கை, கோஸ்டரிக்கா, குவாட்டமாலா,
நிகரகுவா, பனாமா, ஹோண்டுராஸ், எல்சால்வடார், பிரேசில் ஆகிய நாடுகள் இந்த
கம்பெனிகளின் பொருட்களை பயன்படுத்துகின்றன.

இந்த Mondex கம்பெனியின் பங்குகளில் 51 சதவிகித பங்குகளை மாஸ்டர்கார்ட்
நிறுவனம் பெற்று Bio-Chipsஐ விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.Mondex
நிறுவனம் வருடத்திற்கு 100 கோடி Bio Chips உற்பத்தி செய்கிறது.Mondex
என்றால் பணம் உன் கையில் என்று பொருள்.

Mon=Monetary
Dex=Dexter=Righthand side
இந்த எலக்ட்ரானிக் அடையாளத்தை தன் உடலில் தரித்தவன் மிருகம் என்று
கூறப்பட்டுள்ள அந்திக்கிறிஸ்துவின் அடையாளத்தை தன் உடலில் பெற்றவன் என்று
பொருள்.இந்த அடையாளத்தை உடலில் பெற்ற ஒருவரும் பரலோகம் செல்லமாட்டார்கள்.

எது எப்படியோ அந்தி கிறிஸ்துவின் நாமத்திற்குரிய 666 என்ற எண் உலகத்தின்
ஒவ்வொரு குடிமகனும் நெற்றியில் அல்லது வலது கையில் தரித்திருக்க வேண்டும்
என்பது அந்தி கிறிஸ்துவின் கட்டளையாக இருக்கும் என்றும், அந்த எண் அல்லது
அந்தி கிறிஸ்துவின் முத்திரை பெறாதவர் ஒரு பொருளை விற்கவோ, வாங்கவோ
முடியாது என்றும் வெளி 13:17ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை
வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு
ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவம்
கொடுக்கப்பட்டது.(வெளிப்படுத்தின விசேஷம் 14:15)

மேற்கண்ட வசனத்தை உற்றுநோக்கும்போதுசொரூபம்என்பதுஅந்திக் கிறிஸ்துவின்
டூப்ளிகேஷன்என்பது புலனாகிறது. பொதுவான முறையில்
குழந்தை'குரோமோசோமை'தந்தையிடம் பாதி, தாயிடம் பாதி பெற்றுக்கொள்கிறது.
ஆனால்'குளோனிங்'முறையில் ஓர் செல்லின் உட்கருவின் ஓர் திசுவிலிருந்து
குரோமோசோம் வருகிறது. குளோனிங்-கில் உருவாக்கப்பட்ட சேயும் அதன் தாயை
ஒத்திருக்குமா என்றால் 'ஜெனிடிக்கலி(மரபுப்படி) ஒத்திருக்கும். குளோனிங்
முறையில் மனிதர்களை உருவாக்க முடியும்.'ரிச்சார்ட்'என்பவர் அமெரிக்காவில்
மனித குளோனிங் க்ளினிக்கை முதன்முதலில் திறந்தவராவார். ஆனால் தற்சமயம்
மனித குளோனிங் முறைக்கு அமெரிக்க அரசாங்கம் தடைவிதித்துள்ளது. தடை
விலகும் பட்சத்தில் குளோனிங் முறை மூலம் மனிதர்கள் உருவாக்கப்படலாம்.
அந்திகிறிஸ்துவின் குளோனிங்தான் அந்தி கிறிஸ்துவின் சொரூபம் என்று
கூறப்படுகிறது. அதாவது குளோனிங் முறை மூலம் அந்திக் கிறிஸ்துவின்
டூப்ளிகேஷன் உருவாக்கப்படும்.

எனவே குளோனிங் முறை மூலம் உருவாக்கப்படும் அந்திக் கிறிஸ்துவின்
டூப்ளிகேஷனே சொரூபம் என்று சில பிரசங்கியாளர்கள் கூறுகிறார்கள்.ஆனால்
என்னதான் குளோனிங் மூலம் மனிதனை உருவாக்கினாலும் உருவாக்கப்பட்ட மனிதன்
ஆவி, ஆத்துமா, சரீரம் உள்ள முழு மனிதனாகி விடுகிறான். ஆவி, ஆத்துமா,
சரீரம் உள்ள முழு மனிதனை 'சொரூபம்' சிலை என்று சொல்ல முடியாது. வேதமோ
பேசத்தக்க சொரூபம் என்று கூறுகிறது.இன்று எல்லா
நிலைமைகளிலும்'ரோபோ'பயன்படுகிறது.

ரோபட்டுகள் எனப்படும் எந்திர மனிதனின் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து
வருகிறது. இயந்திர மனிதர்களாகிய இந்த ரோபோக்கள் பேசும், நடக்கும், மனிதன்
போல எல்லாமே செய்யும். இராணுவத்தில் ஆயுதங்கள் தயாரிப்பில் முதற்கொண்டு
வீடுகளில் சகல வீட்டுவேலைகள் செய்வதுவரை சிறுகுழந்தைகளை பள்ளிக்கு
பத்திரமாக கூட்டிச்சென்று கூட்டிவருதல் உட்பட எல்லாவற்றையும் ரோபோக்கள்
சிறப்பாக செய்கின்றன. நிலத்தில் பதிக்கப்பட்டிருக்கிற கன்னி வெடிகளை
அகற்றுதல் ஆகியவற்றில் ரோபோக்களின் பங்கு முக்கியமாகும். ரோபோக்களின்
கால்பந்து போட்டி ஜப்பானில் புகழ் பெற்றதாகும் ரோபோக்கள் தயாரிப்பில்
ஜப்பான் நாடு முன்னிலையில் இருக்கிறது.
இந்த ரோபோக்கள் செயல்படுவதில் 'பேட்டரிகள்' முக்கிய பங்கு வகிக்கின்றன.
குறிப்பிட்ட நேரம்வரை மட்டுமே இயங்கும் சக்தி கொண்ட பேட்டரிகள்
இருப்பதால் ரோபோட்டுகளை நாள்கணக்கில் தொடர்ந்து இயங்க வைக்க முடியாது.
இந்த பிரச்சனைக்கு இங்கிலாந்து விஞ்ஞானிகள் தீர்வு கண்டுள்ளனர். அதாவது
பூச்சிகள் மற்றும் சிறு பறக்கும் உயிரினங்களை தின்று அதன் மூலம்
மின்சக்தி பெற்று இயங்கும் வகையில் புதிய ரோபோட் ஒன்றை
உருவாக்கியுள்ளனர். இதற்குஇகோபாட் 2 (EcoBot 2)என்று
பெயரிட்டுள்ளனர்.இத்தகைய ரோபோட்டுகள் மூலம் மனித இனத்திற்கு
அச்சுறுத்தலாக இருக்கும் பூச்சிகளை அழிக்க முடியும்.அதே நேரத்தில் நீண்ட
நேரம் இயங்கும் வகையில் ரோபோட்டுகளை தயாரிக்கவும் முடியும் என்று
விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அந்திக் கிறிஸ்துவின் உருவ அமைப்பிற்கேற்ப ரோபோக்கள் செய்யப்பட்டு,
ஆங்காங்கே உலகின் பல பகுதிகளில் வைக்கப்பட்டு, மக்கள் அந்த சொரூபத்தை
தெய்வமாக வணங்க கட்டாயப்படுத்தப்படுவார்கள். அப்படி வணங்காத மக்களை அந்த
ரோபோக்களே கொலை செய்யும் என்று கருதப்படுகிறது. வேதம் அந்தி கிறிஸ்துவின்
உருவமுள்ள சிலை பேசும், வணங்காதவர்களை கொலை செய்யும்படியான ஓர் உயிருள்ள
சிலை போன்றிருக்கும் என்று கூறுகிறது. இது ரோபோக்கலாகத்தான் இருக்கக்
கூடும் என்று அனேக வேத பண்டிதர்கள் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக