வெள்ளி, 4 நவம்பர், 2016

முற்பிதாக்களின் காலம் - ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு - ஒரு ஆய்வு - பாகம் (5)

முற்பிதாக்களின் காலம் - ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு - ஒரு ஆய்வு (4)

முற்பிதாக்களின் காலம் - ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு - ஒரு ஆய்வு (2)

முற்பிதாக்களின் காலம் - ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு - ஒரு ஆய்வு (1)

புதன், 2 நவம்பர், 2016

மாற்கு அதிகாரம் 4

1. அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். திரளான
ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி
உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கடற்கரையில் நின்றார்கள்.
2. அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்;
போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது:
3. கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
4. அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள்
வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
5. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான
மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது.
6. வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.
7. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன்
கொடாதபடி அதை நெருக்கிப்போட்டது.
8. சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று
முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.
9. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார்.
10. அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச்
சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்.
11. அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு
அருளப்பட்டது. புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச்
சொல்லப்படுகிறது.
12. அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு
மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும்
உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
13. பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா?
அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?
14. விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.
15. வசனத்தைக் கேட்டவுடனே, சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில்
விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான். இவர்களே வசனம்
விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.
16. அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும்,
17. தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம்
நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும்
உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில்
விதைக்கப்பட்டவர்கள்.
18. வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும்,
மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை
நெருக்கிப் போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்;
19. இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.
20. வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும்,
ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில்
விதைக்கப்பட்டவர்கள் என்றார்.
21. பின்னும் அவர் அவர்களை நோக்கி: விளக்கைத் தண்டின்மேல்
வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீழாகிலும், கட்டிலின் கீழாகிலும்,
வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?
22. வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை.
23. கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
24. பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள்,
எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்;
கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.
25. உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில்
உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
26. பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன்
நிலத்தில் விதையை விதைத்து;
27. இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய்,
விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.
28. எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும்,
கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும்.
29. பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை
அனுப்புகிறான் என்றார்.
30. பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு
ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?
31. அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில்
விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது;
32. விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி,
ஆகாயத்துப்பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை
விடும் என்றார்.
33. அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக
உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.
34. உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய
சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும்
விவரித்துச்சொன்னார்.
35. அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம்
வாருங்கள் என்றார்.
36. அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக்
கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது.
37. அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள்
அதின்மேல் மோதிற்று.
38. கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார்.
அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக்
கவலையில்லையா என்றார்கள்.
39. அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு
என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று.
40. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு
விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.
41. அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக்
கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

மாற்கு அதிகாரம் 3

1. மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையுடைய
ஒரு மனுஷன் இருந்தான்.
2. அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில்
குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
3. அப்பொழுது அவர் சூம்பினகையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில்
என்று சொல்லி;
4. அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ,
ஜீவனைக்காப்பதோ அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள்
பேசாமலிருந்தார்கள்.
5. அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே
சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை
நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.
6. உடனே பரிசேயர் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யும்படி, அவருக்கு
விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள்.
7. இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம் விட்டு, கடலோரத்துக்குப் போனார்.
8. கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும்,
யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப்
பின்சென்றார்கள். அல்லாமலும் தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளிலுமிருந்து
திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களைக்குறித்துக் கேள்விப்பட்டு,
அவரிடத்தில் வந்தார்கள்.
9. அவர் அநேகரைச் சொஸ்தமாக்கினார். நோயாளிகளெல்லாரும் அதை அறிந்து அவரைத்
தொடவேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கிவந்தார்கள்.
10. ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு,
தமக்காக ஒரு படவை ஆயத்தம்பண்ண வேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச்
சொன்னார்.
11. அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர்
தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.
12. தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
13. பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத்
தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
14. அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள்
தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை
அனுப்பவும்,
15. வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள்
அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.
16. அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார்.
17. செபதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான்,
இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ்
என்கிற பெயரிட்டார்.
18. அந்திரேயா, பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின்
குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன்,
19. அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
20. பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும்
சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள்.
21. அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று
சொல்லி அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.
22. எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன்
பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான். பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத்
துரத்துகிறான் என்றார்கள்.
23. அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது:
சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?
24. ஒரு ராஜ்யம் தனக்குதானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம்
நிலைநிற்கமாட்டாதே.
25. ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு
நிலைநிற்கமாட்டாதே.
26. சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன்
நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே.
27. பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள்
புகுந்து, அவன் உடமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன்
வீட்டைக் கொள்ளையிடுவான்.
28. மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும்
எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு
மன்னிக்கப்படும்;
29. ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன்
என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான்
என்றார்.
30. அசுத்த ஆவியைக்கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர்
இப்படிச் சொன்னார்.
31. அப்பொழுது அவருடைய சகோதரரும், தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை
அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.
32. அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ,
உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத்
தேடுகிறார்கள் என்றார்கள்.
33. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர்
யார்? என்று சொல்லி,
34. தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என்
தாயும் என் சகோதரரும் இவர்களே!
35. தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும்,
எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

மாற்கு அதிகாரம் 2

1.
சிலநாட்களுக்குப்பின்பு
அவர் மறுபடியும்
கப்பர்நகூமுக்குப்
போனார்; அவர்
வீட்டிலிருக்கிறார்
என்று ஜனங்கள்
கேள்விப்பட்டு;
2. உடனே வாசலுக்கு
முன்னும் நிற்க
இடம்போதாதபடிக்கு
அநேகர் கூடிவந்தார்கள்;
அவர்களுக்கு வசனத்தைப்
போதித்தார்.
3. அப்பொழுது
நாலுபேர் ஒரு
திமிர்வாதக்காரனைச்
சுமந்துகொண்டு
அவரிடத்தில் வந்தார்கள்;
4. ஜனக்கூட்டத்தினிமித்தம்
அவருக்குச் சமீபமாய்ச்
சேரக்கூடாமல், அவர்
இருந்த வீட்டின்
மேற்கூரையைப்
பிரித்துத் திறப்பாக்கி,
திமிர்வாதக்காரன்
கிடக்கிற படுக்கையை
இறக்கினார்கள்.
5. இயேசு அவர்கள்
விசுவாசத்தைக் கண்டு,
திமிர்வாதக்காரனை
நோக்கி: மகனே, உன்
பாவங்கள் உனக்கு
மன்னிக்கப்பட்டது என்றார்.
6. அங்கே உட்கார்ந்திருந்த
வேதபாரகரில் சிலர்:
7. இவன் இப்படி
தேவதூஷணம்
சொல்லுகிறதென்ன?
தேவன் ஒருவரேயன்றிப்
பாவங்களை
மன்னிக்கத்தக்கவர் யார்
என்று தங்கள் இருதயங்களில்
சிந்தித்துக்கொண்டிருந்த
ார்கள்.
8. அவர்கள் தங்களுக்குள்ளே
இப்படிச்
சிந்திக்கிறார்களென்று
இயேசு உடனே
தம்முடைய ஆவியில்
அறிந்து, அவர்களை
நோக்கி: நீங்கள் உங்கள்
இருதயங்களில் இப்படி
சிந்திக்கிறதென்ன?
9. உன் பாவங்கள் உனக்கு
மன்னிக்கப்பட்டதென்று
சொல்வதோ, எழுந்து உன்
படுக்கையை
எடுத்துக்கொண்டு
நடவென்று சொல்வதோ,
எது எளிது?
10. பூமியிலே
பாவங்களை மன்னிக்க
மனுஷகுமாரனுக்கு
அதிகாரம் உண்டென்பதை
நீங்கள் அறியவேண்டும்
என்று சொல்லி
திமிர்வாதக்காரனை
நோக்கி:
11. நீ எழுந்து, உன்
படுக்கையை
எடுத்துக்கொண்டு, உன்
வீட்டுக்குப் போ என்று
உனக்குச் சொல்லுகிறேன்
என்றார்.
12. உடனே, அவன் எழுந்து,
தன் படுக்கையை
எடுத்துக்கொண்டு
எல்லாருக்குமுன்பாகப்
போனான். அப்பொழுது
எல்லாரும் ஆச்சரியப்பட்டு:
நாம் ஒருக்காலும்
இப்படிக்
கண்டதில்லையென்று
சொல்லி, தேவனை
மகிமைப்படுத்தினார்கள்.
13. அவர் மறுபடியும்
புறப்பட்டுக் கடலருகே
போனார்; அப்பொழுது
ஜனங்களெல்லாரும்
அவரிடத்தில் வந்தார்கள்;
அவர்களுக்குப்
போதகம்பண்ணினார்.
14. அவர்
நடந்துபோகையில்,
அல்பேயுவின்
குமாரனாகிய லேவி
ஆயத்துறையில்
உட்கார்ந்திருக்கிறதைக்
கண்டு; எனக்குப்
பின்சென்றுவா என்றார்;
அவன் எழுந்து
அவருக்குப்
பின்சென்றான்.
15. அப்பொழுது,
அவனுடைய வீட்டிலே
அவர்
போஜனபந்தியிருக்கையி
ல், அநேக ஆயக்காரரும்
பாவிகளும்
அவரோடுகூட
வந்திருந்தபடியால்,
அவர்களும்
இயேசுவோடும் அவர்
சீஷரோடுங்கூடப்
பந்தியிருந்தார்கள்.
16. அவர் ஆயக்காரரோடும்
பாவிகளோடும்
போஜனம்பண்ணுகிறதை
வேதபாரகரும்
பரிசேயரும் கண்டு,
அவருடைய சீஷரை
நோக்கி: அவர்
ஆயக்காரரோடும்
பாவிகளோடும்
போஜனபானம்
பண்ணுகிறதென்னவென்ற
ு கேட்டார்கள்.
17. இயேசு அதை கேட்டு:
பிணியாளிகளுக்கு
வைத்தியன்
வேண்டியதேயல்லாமல்
சுகமுள்ளவர்களுக்கு
வேண்டியதில்லை;
நீதிமான்களையல்ல,
பாவிகளையே
மனந்திரும்புகிறதற்கு
அழைக்கவந்தேன் என்றார்.
18. யோவானுடைய
சீஷரும் பரிசேயருடைய
சீஷரும் உபவாசம்
பண்ணிவந்தார்கள். அவர்கள்
அவரிடத்தில் வந்து:
யோவானுடைய சீஷரும்
பரிசேயருடைய சீஷரும்
உபவாசிக்கிறார்களே,
உம்முடைய சீஷர்
உபவாசியாமலிருப்பதெ
ன்னவென்று கேட்டார்கள்.
19. அதற்கு இயேசு:
மணவாளன்
தங்களோடிருக்கையில்
மணவாளனுடைய தோழர்
உபவாசிப்பார்களா?
மணவாளன் தங்களுடனே
இருக்கும்வரைக்கும்
உபவாசிக்கமாட்டார்களே.
20. மணவாளன் அவர்களை
விட்டு எடுபடும் நாட்கள்
வரும், அந்த நாட்களிலே
உபவாசிப்பார்கள்.
21. ஒருவனும்
கோடித்துண்டைப் பழைய
வஸ்திரத்தோடு
இணைக்கமாட்டான்,
இணைத்தால், அதினோடே
இணைத்த புதியதுண்டு
பழையதை அதிகமாய்க்
கிழிக்கும், பீறலும்
அதிகமாகும்.
22. ஒருவனும் புது
திராட்சரசத்தைப்
பழந்துருத்திகளில்
வார்த்துவைக்கமாட்டான்;
வார்த்துவைத்தால்,
புதுரசம் துருத்திகளைக்
கிழித்துப்போடும்,
இரசமும் சிந்திப்போம்;
துருத்திகளும்
கெட்டுப்போம்;
புதுரசத்தைப் புது
துருத்திகளில்
வார்த்துவைக்கவேண்டும்
என்றார்.
23. பின்பு, அவர்
ஓய்வுநாளில் பயிர்
வழியே போனார்;
அவருடைய சீஷர்கள் கூட
நடந்துபோகையில்,
கதிர்களைக் கொய்யத்
தொடங்கினார்கள்.
24. பரிசேயர் அவரை
நோக்கி: இதோ,
ஓய்வுநாளில்
செய்யத்தகாததை இவர்கள் ஏன்
செய்கிறார்கள் என்றார்கள்.
25. அதற்கு அவர்:
தாவீதுக்கு உண்டான
ஆபத்தில், தானும்
தன்னோடிருந்தவர்களும்
பசியாயிருந்தபோது,
26. அவன் அபியத்தார்
என்னும் பிரதான
ஆசாரியன் காலத்தில்
செய்ததை நீங்கள்
ஒருக்காலும்
வாசிக்கவில்லையா?
அவன் தேவனுடைய
வீட்டில் பிரவேசித்து,
ஆசாரியர்தவிர
வேறொருவரும்
புசிக்கத்தகாத
தெய்வசமுகத்து
அப்பங்களைத் தானும்
புசித்துத்
தன்னோடிருந்தவர்களுக்கு
ம் கொடுத்தானே என்றார்.
27. பின்பு அவர்களை
நோக்கி: மனுஷன்
ஓய்வுநாளுக்காக
உண்டாக்கப்படவில்லை,
ஓய்வுநாள்
மனுஷனுக்காக
உண்டாக்கப்பட்டது;
28. ஆகையால்
மனுஷகுமாரன் ஓய்வு
நாளுக்கும் ஆண்டவராய்
இருக்கிறார் என்றார்.