வியாழன், 1 செப்டம்பர், 2016

தன் தன் சிலுவையை எடுக்காமல், ஐக்கியம் இல்லை! - சகரியா பூணன்

நம் "சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக
ஒப்புக்கொடுக்க வேண்டு மென்று" புத்தி சொல்லப்பட்டிருக்கிறோம் (ரோமர்
12:1). இப்படிச் செய்வதால் அடையும் ஒப்பற்ற விளைவுதான் "அநேகராகிய நாம்
கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாய்" மாறுகின்றோம் (வசனம் 5).
அப்படியில்லாமல், அதாவது... நம் சரீரங்களை தேவனுக்கு ஜீவபலியாய்
ஒப்புக்கொடாமலே, கிறிஸ்து வுக்குள் ஒரே சரீரமாய் மாறிவிடுவோம் என்று
எண்ணுவது சுத்த அபத்தம்! நாம் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி 'அவர்
பிதாவின் சித்தம் மட்டுமே செய்வதற்கு, தன் சரீரத்தை எவ்வாறு பலியாய்
ஒப்புக்கொடுத்தாரோ' அதுபோலவே நாமும் ஒப்புக் கொடுக்கும்போது மாத்திரமே,
நாம் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாய் ஒன்றாயிருக்க முடியும். இவ்விதமாய்
இயேசுவின் மரணத்தை நம் சரீரத்தில் ஏற்று சுமக்கும் போதுதான், இயேசுவின்
ஜீவியமும் நம்மில் வெளிப்படும்! (2கொரி 4:10).

மெய்யாகவே, தீவிரமாய் இயேசுவின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் சீஷர்களிடையே
வெளிப்படும் "இந்த ஜீவியமே" அவர்களை ஒன்றாக்குகிறது! மாறாக, ஆதாமின்
'சுயம் கொழுத்த' ஜீவியத்தை வைத்துக் கொண்டு, எண்ணற்ற பிரசங்கங்கள்
செய்தாலும், அல்லது ஐக்கியம் ஏற்படுத்த பல கருத்தரங்குகள் நடத்தினாலும்
அல்லது "உபதேச ஒற்றுமை" வாக்குமூலமே செய்தாலும், இவைகளெல்லாம் நம்மை
ஒருபோதும், ஒருக்காலும் ஒன்றாக்கவே முடியாது!
இயேசுவின் சரீரத்தில் 'சுயசித்தம் வெட்டுண்டு' அழிக்கப்பட்டதால் நிகழ்ந்த
"இயேசுவின் மரணத்தைக்" குறித்த வெளிப்பாடே இன்று நம் யாவருக்கும்
அவசியமாயிருக்கிறது! (ஏசா 63:1-6).அவ்வாறு வெளிப்பாடு பெற்றுவிட்டால்,
நாமும் நம் சரீரத்தை, அவரில் நடந்ததுபோலவே, நம்மில் அனுதினமும்
நடப்பதற்கு நம்மை பலியாய் ஒப்புக் கொடுத்துவிடுவோம்! இப்போது நம்
வாழ்வில் என்ன சம்பவிக்கும்? ஒவ்வொரு சூழ்நிலைகளில், நமக்குள்ளிருந்து
எழும்பும் சுய கௌரவம், சுய அந்தஸ்து, சுய அனுதாபம் போன்ற சுயசித்தங்கள்
வெட்டுண்டு போகும் சம்பவமே நாள்தோறும் நடைபெறும்! இந்த மகிமையான
வாழ்விற்குள் பிரவேசித்த இருவர், நிச்சயமாய் ஒன்றான ஐக்கியம் பெறுவர்.
ஏனெனில், அவர்கள் இருவரின் சரீரத்திற்குள்ளும் கிறிஸ்துவின் சரீரத்தில்
நடந்தேறிய "இயேசுவின் மரணம்" நிகழத் தொடங்கி விட்டது!

எந்த ஸ்தலமானாலும், அவர்கள் எப்பேர்ப்பட்ட தேர்ந்த விசுவாசிகள் குழு
ஆனாலும், சிலுவையில்லா விட்டால் அவர்கள், பிதாவும் இயேசுவும்
ஒன்றாயிருந்ததுபோல ஒருக்காலும் ஒன்றாயிருக்க முடியாது! கூட்டங்கள் பல
நடத்தி கூடிவருவதாலோ அல்லது ஞானஸ்நானத்திலோ அல்லது ஆவியின் வரங்களினாலோ
அல்லது ஓர் சிறந்த ஆவிக்குரிய தலைவனுக்கு உண்மையாய் இருப்பதாலோ நாம்
ஒன்றாயிருக்கவே முடியாது, முடியவே முடியாது!! சிலுவையினால் மாத்திரமே,
பிரிவினையை கொண்டுவரும் சுயத்தை அழித்திட முடியும்!

இவ்வாறாக, அவரவர் தன் தன் சிலுவையை எடுத்து, அந்த சிலுவையில் சுயம்
அறையப்பட்ட ஜீவியத்தில்தான் கிறிஸ்துவின் சரீரமான ஐக்கியம் உருவாகும்.
இதுபோன்ற சரீரமான சபையில் உள்ள ஒவ்வொருவரும், இயேசுவின் ஜீவியத்தை
நிச்சயமாய் பெற்றிருப்பார்கள்! ஒளி ஒளியுடன் ஐக்கியமாய் இருப்பதைப்
போலவே, இயேசுவின் ஜீவியத்தை கண்டடைந்தவர்களும் கிறிஸ்துவின் சரீரமாய்
இணைந்திருப்பார்கள். அதுபோன்ற சபையை பாதாளத்தின் வாசல்களும்
மேற்கொள்வதில்லை!!

சிலுவையில் ஊற்றெடுக்கும் உன்னத ஆசீர்வாதம்! - சகரியா பூணன்

சிலுவையினிமித்தம் ஏற்படும் நிந்தை, இழிவாய் எண்ணப்படுதல் போன்ற
துன்பங்களை நாம் மனமுவந்து ஏற்றிடவேண்டும் (கலா 6:12)."நாங்களோ
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு
இடறலாயும்...." என கூறும் வசனத்தைப் பாருங்கள்! (1கொரி 1:23).

கிறிஸ்து நமக்காக சிலுவையிலறையப்பட்டாரே அதுவா இன்றைய கிறிஸ்தவ
மார்க்கத்தாருக்கு இடறல்? இல்லை! "நாம் சிலுவையிலறையப்படுகிறோமே" அதுதான்
இவர்களுக்கு இடறல்!!

ஏனென்றால், இங்குதான் நம் எல்லா சுயமும், அது எவ்வளவு
அருமையாயிருந்தாலும் அல்லது எவ்வளவு லாபமாயிருந்தாலும் அவைகள் கொஞ்சமும்
இரக்கமில்லாமல் புறக்கணித்துத் தள்ளப்படுகிறது! அதன் சுயமரியாதைக்கோ
கிஞ்சித்தும் இடமே இல்லை!! ஆ, இங்குதான் இவர்கள் கோபம் கொள்ளுகிறார் கள்.
தங்கள் பார்வையில் இவர்கள் எவ்வளவு திறமையாய்க் காணப்பட்டு, சுயத்தில்
மகிழ்கிறார்களோ அவ்வளவு அதிகம் கோபக்கனலாகிறார்கள்! ஆனால் உண்மை என்ன
தெரியுமா? நமக்கு அருமையான இந்தஎல்லா சுயமும் மரணத்திற்கே உரியது!அது
கிறிஸ்து இயேசுவின் மூலமாய் சிலுவையில் அறையப்பட்டு விட்டது! அது இருக்க
வேண்டிய இடம் அதுதான்!!

1 கொரிந்தியர் 1:17-ம் வசனத்தில், "கிறிஸ்துவின் சிலுவை வீணாய் (அல்லது
வல்லமையற்றுப்) போகாதபடிக்கு..."என்றும் 18-ம் வசனத்தில் "சிலுவையைப்
பற்றிய உபதேசம்.... நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது" என்றும்
வாசிக்கிறோம்.

சிலுவையின் உபதேசத்தில் அல்லது சிலுவையில் அப்படியென்ன வல்லமையிருக்கிறது
என்று கேட்கிறீர்களா? கேளுங்கள், அது பழைய மனிதனுக்கும் அவன்
கிரியைகளுக்கும் சாவு மணி அடிக்கிறது! அவ்வல்லமை பாவத்திலிருந்து
தொடர்ச்சியான விடுதலை அளிக்கிறது! மாம்சத்தின் கிரியைகளை ஒழிக்கிறது!

ஆம், நாம் பாவம் என்று அறிந்துகொண்ட யாவற்றிலிருந்தும் விடுதலை
அளிக்கிறது மட்டுமல்ல! நாட்கள் செல்லச் செல்ல, இனி நாம் பாவம் என அறிந்து
கொள்ளப்போகும் எல்லாப் பாவத்திலிருந்தும் விடுதலை! விடுதலை!! முழு
விசுவாசத்துடன் ஆக்ரோஷமாய் சிலுவையில் அறைகிறோமே, அதுவே இச்சிலுவையின்
வல்லமையான கிரியைகள். ஆம், அந்த ஆணிகள் சிலுவையிலறைப்பட்டவனை, அவன்
விரும்பும் இடத்திற்கு போக முடியாமல் வலிமையாய் சிலுவையின் மேல் இருத்தி
வைக்கிறது.... பின்பு .... கொஞ்சம் கொஞ்சமாய் சீக்கிரத்தில் 'அவன்'
செத்துப் போகிறான். இவ்வாறுமாம்சத்தின்படியான என்னை சாகடிக்கிறதேஅதுதான்
இச்சிலுவையின் வல்லமையான கிரியைகள்!

"தன் சிலுவையைச் சுமந்து கொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்குச்
சீஷனாயிருக்கமாட்டான்" (லூக் 14:27)என இயேசு கூறினார். "அப்பொழுது அவரைச்
சிலுவையில் அறையும்படிக்கு பிலாத்து அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான்.
அவர்கள் இயேசுவைப் பிடித்துக் கொண்டு போனார்கள். அவர் தம்முடைய
சிலுவையைச் சுமந்து கொண்டு.... கொல்கொதா என்ற இடத்திற்குப் புறப்பட்டுப்
போனார்" (யோ 19:16-17).... தன் சிலுவையை சுமக்க வேண்டும் என்பதற்கு இதை
விட வேறு என்ன விளக்கம் வேண்டும்? அதாவது, நாம் சிலுவையிலறையப்படுவதற்கு
எதிர்பில்லாமல் வாய்ப்பு அளிக்கிறோமே, அதுதான் அதன் சரியான பொருள்!

சிலுவையில் அறையப்படுவதன் அவசியத்தை உணர்ந்து கொண்டவர்கள் எவர்களோ,
அவர்களே அதை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவார்கள்!

எண்ணிக்கை அல்ல, “தூய சாட்சியே” தேவனுக்கு வேண்டும்! - சகரியா பூணன்

மல்கியாவின் நாட்களில் தேவன் இஸ்ரவேலின்மேல் குறைவுபட்டதெல்லாம்,
அவர்களின் எண்ணிக்கை அதிகமாய் இல்லை என்பதற்காய் அல்ல! அல்லது அவர்களின்
காணிக்கை குறைவாயிருக்கிறது என்பதற்காகவும் அல்ல! அவர்களுடைய"காணிக்கை
அசுத்தமாய்"இருந்தது என்பதற்காகவே ஆகும் (மல் 1:6-11).நம் தேசத்தில்,
இன்றுள்ள கிறிஸ்தவர்களின் ஜனத்தொகை சதவீதம் குறைவாயுள்ளதே என்று,
இன்றுள்ள சுவிசேஷம் அறிவிக்கும் கிறிஸ்தவர்கள் வருந்தவோ அல்லது
வருந்துவது போன்ற பாவனையோ செய்கின்றனர்.

"ஆனால்" தேவனோ, தங்களை விசுவாசி என்று அழைத்துக் கொள்பவர்களின் அசுத்த
ஜீவியத்தைக் குறித்த மனப்பாரமே அல்லாமல், அதில் லட்சத்தில் ஒரு பகுதிகூட
கிறிஸ்தவ ஜனத்தொகையின் எண்ணிக்கைக்காக வருந்துவது இல்லை! ஆம், "எல்லா
இடங்களிலும்" தேவன் விரும்புவதெல்லாம் "சுத்தமான காணிக்கையே" - Pure
Offering (மல் 1:11) ஆகும்.

தேவனுடைய சத்தியவசனத்தை "இஸ்ரவேலின் ஆசாரியர்கள்"தரம்
குறையப்பண்ணியதினிமித்தம், கர்த்தருடைய உடன்படிக்கையைக் கெடுத்துப்
போட்டார்கள்(மல்கியா 2:1-9).யூதா தன் சகோதரர்களோடு மோசமாய் நடந்தும்,
தங்கள் மனைவிகளுக்குத் துரோகம் செய்தும், கர்த்தருடைய மேன்மையான வழியைப்
பரிசுத்தக்
குலைச்சலாக்கினார்கள் (மல் 2:10-17). இவ்வாறாகவே, கிட்டத்தட்ட நாம்
கேள்விப்படுகிற எல்லா விசுவாசிகளின் குழுக்களுமே, ஒருவருக்கொருவர்
புறங்கூறுவதும், கோள்சொல்வதும்.... அவர்களிடம் சர்வ சாதாரணமாகிவிட்டது.
சிந்தை வாழ்வில், தங்கள் மனைவிக்கு உண்மையாய் இருக்கிறோம் என்று சாட்சி
சொல்லக் கூடியவர்கள் எத்தனைக் கொஞ்சம் பேர்!! இப்படிப்பட்ட அருவருப்புகள்
இன்னமும் இருதயத்தில் இருக்குமென்றால், நம் சுவிசேஷ ஊழியத்தினாலோ,
'முழுநேர ஊழியத்தினாலோ' என்ன பிரயோஜனம்? "உங்கள் பலிகளின் திரள் எனக்கு
என்னத்துக்கு?" என்றல்லவா கர்த்தர் சொல்லுகிறார் (ஏசாயா 1:11).

மேலும்,"உங்களின் வழக்கமான தொடர்ந்து நடத்தும் பக்திக் கூட்டங்களும் நல்ல
ஏமாற்றுவேலை! (ஏசாயா .1:15).இவைகளை நான் வெறுக்கிறேன்....உங்களைக்
கழுவிச் சுத்திகரியுங்கள். தீமை செய்தலை விட்டு ஓயுங்கள்!" (வச.16)
என்பதுதான் இன்றும் ஆண்டவருடைய அறை கூவலாய் இருக்கிறது!!

சுவிசேஷ ஊழியத்திற்கோ, வேறு சமூகப்பணிக்கோ ஆவியானவர் விரோதமானவர் இல்லை
என்பதை நாம் அறியவேண்டும்! அதேசமயம், எண்ணிக்கைக்காக தரத்தை பலி
செலுத்தும்"அசுத்தமான சாட்சியில்"தேவன் ஒருக்காலும் பிரியம்
கொள்ளமாட்டார் என்ற உண்மையையும் நாம் அறிந்திருக்க வேண்டும்!

சிலுவையின் பாதையல்லாமல், ஜீவன் பெற வேறு வழியில்லை! - சகரியா பூணன்

இயேசு காண்பிக்கும் புதிய சகாப்தம் "நாளுக்கு நாள் புதிதாகும், இயேசுவின்
ஜீவியமே ஆகும்." இன்றைய கிறிஸ்தவ உலகில் உபதேசங்களுக்குப் பஞ்சம் இல்லை!
இவர்களுக்கு அன்னியமாய் போய் விட்டதெல்லாம், இயேசுவின் ஜீவன் அல்லது
அவரது ஜீவியம்! அந்த ஜீவனுக்குப் போகிறவழி இடுக்கமானது என விளம்பிய
ஜீவநாதரை இவர்கள் புறக்கணித்து விட்டார்கள். இவ்வாறு புறக்கணித்தவர் கள்,
இயேசுவோடு ஒட்டிக் கொண்ட பேதுருவிடம் சென்று "பேதுருவே, உன் குருவானவர்
கூறும் இடுக்கமான வழி உனக்கு விளங்கிவிட்டதா? இவர் கூறும், 'என்
மாம்சத்தையும் என் இரத்தத்தையும் புசியுங்கள்' எனக் கூறிய தாற்பரியம்
உனக்குப் புரிந்து விட்டதா?" என கேட்டிருந்தால், அதற்கு பேதுரு கூறிய
பதில் "எனக்கு தெரியாது, எனக்குப் புரியவில்லை!" என்பதாகவே
இருந்திருக்கும். "பின்பு ஏன் நீ அவரை பின்பற்றுகிறாய்?" என அவர்கள்
கேட்டிருந்தால், அதற்கு பேதுரு "இயேசு கூறும் மாம்சம், இரத்தம் ஆகிய
உபதேசம் எனக்குப் புரியவில்லை! ஆனால் இயேசுவை அறிவேன்! அவரது ஜீவியமும்
அறிவேன்! அவரது ஜீவியத்தின் உத்தமத்தை அறிவேன்!" என்றே ஆணித்தரமாக பதில்
கூறியிருப்பான். இன்று, நம் யாவரையும் அண்டிவரும் கேள்வி இதுதான்....
"உங்களுக்கு உபதேசம் வேண்டுமா அல்லது ஜீவியம் வேண்டுமா?" உபதேசத்தோடு
அல்ல உத்தம ஜீவியத்தோடு கரம் கோர்த்திடவே தீவிரம் கொள்ளுங்கள்!

ஜீவனுக்குள் நடத்தும் இடுக்கமான வழி அல்லது பாதை,சிலுவையின் பாதையேஆகும்!
நம் போன்ற சரீரத்தில் வந்த இயேசு, இந்த சிலுவையின் வழியாகவே "தன் சொந்த
ஜீவனுக்கு மரித்து பிதாவின் நித்திய ஜீவியத்தை" நிறைவாய் பெற்று
கொண்டார். இயேசுவிடம் தென்பட்டது, வெறும் உபதேசம் அல்ல! அவரிடமிருந்த
தெய்வீக தாழ்மை, அவரிடமிருந்த கற்பு நிறைந்த தூய வாழ்க்கை, பதட்டமில்லாத
விசுவாச வாழ்க்கை, சாந்தம், பொறுமை.... போன்ற தெய்வீகத்தின் முழுமையான
வெளிச்சமும் அவரிடம் காணப் பட்டது. இன்றைய கிறிஸ்தவர்களில் பெரும்பலோர்,
வரங்களில் பிரியப்படுகிறார்களே அல்லாமல், கனி கொடுக்கும்
ஜீவியத்திற்குரிய தங்கள் நாட்டத்தை இழந்தே காணப்படுகிறார்கள். "அன்னிய
பாஷையை" பேசுவதில் பிரியப்படுகிற இவர்கள், தங்கள்சொந்த தாய்
பாஷையில்தாறுமாறு கொண்டு வாழ்கிறார்கள்! அன்னிய பாஷையை பேசும்
இவர்களிடம், தாய் பாஷையில் கிருபை பொருந்திய வார்த்தைகளோ அல்லது
நாவடக்கமோ காணப்படுவது இல்லை. இன்று நமக்குத் தேவை, நல்ல பிரசங்கியோ
அல்லது நல்ல சபை கட்டிடமோ அல்ல! மாறாக "அவரோடு மரித்து, அவரோடு
பிழைத்திருக்கும்" ஜீவிய வெளிச்சத்தை பெற்ற மக்களும், அவர்கள் கூடி வரும்
சபையே நமக்குத் தேவை! இவ்வாறு இயேசுவின் வெளிப்பாட்டையும், அவரது
உறவையும் பெற்றவர்களே, இயேசு விரும்பும் "கற்பாறையாய்"
இருக்கிறார்கள்.இவர்களைக் கொண்டே இயேசு தன் சபையை கட்டுகிறார்
(மத்.16:18). அவரோடு மரித்து அவருக்குள் பிழைத்திருக்கும் (2தீமோ
.2:11)இயேசுவின் ஜீவியம், இடுக்கமான சிலுவையின் பாதையில் நடப்போருக்கே
கிட்டும்!

இந்த சிலுவையின் பாடுகளே இல்லாமல், உலக ராஜ்ஜியத்தை சுதந்தரிக்கலாம் எனக்
கூறிய சாத்தானையும், சிலுவையின் பாதையை தவிர்க்கும்படி கூறிய அவரது
அன்பான சீஷனையும்.... இயேசு ஒரே விதமாய் கண்டு "அப்பாலே போ சாத்தானே"
எனக் கூறினார். இன்றும், சிலுவையின் பாதையை புறக்கணிக்கிறவர்களுக்கு,
ஜீவனை அல்லது இயேசுவின் மகிமையான ஜீவியத்தை தேவன் ஒருபோதும்
அவர்களுக்குத் தருவதில்லை.
அவரோடு சேர்ந்து, தன் சொந்த ஜீவனுக்கு மரிப்பதும், கிறிஸ்துவின்
ஜீவனுக்குள் பிழைத்திருப்பதுமாகிய இந்த சுவிசேஷத்தைக் கேட்கிற
ஜனங்களில்....யார் இதை விசுவாசிப்பார்கள்?என்றே ஏசாயா தீர்க்கதரிசி 53:1
வசனத்தில் கூறினார்.இன்றும், இந்த மகிமையான ஜீவனுக்குள் பிரவேசிக்கும்,
சுவிசேஷத்தைக் கேட்கும் நீங்கள், இதை ஏற்று விசுவாசித்திட நெஞ்சத்தில்
தைரியம் உண்டோ?இந்த விசுவாசமே, இயேசு கொண்டு வந்த ஜீவனுக்குள்....
பரிபூரண ஜீவனுக்குள் உங்களை நடத்தும்! ஆமென்.

உங்கள் பொக்கிஷம் எங்கே? அங்கே உங்கள் இருதயம்! - சகரியா பூணன்

"பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம்;...
பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்" என இயேசு
கூறினார். பொக்கிஷம் என இயேசு எதைக் குறிப்பிட்டார்? 5,000 ரூபாய்கள்
பொக்கிஷமா? அல்லது 50,000 ரூபாய்கள் பொக்கிஷமா? அல்லது இவ்வசனத்திற்கு
நம்முடைய வங்கிக் கணக்கில் எவ்வித சேமிப்பும் இருக்கக்கூடாது என்பது
பொருளா? பாருங்கள், இதுபோன்ற காரியங்களில் புதியஏற்பாடு எவ்வித
வரையறையும் குறிப்பிடாமல் இருப்பது நமக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது! இந்த
வரையறையை அவரவர்கள்தான் கணக்கிட்டு தீர்மானிக்க வேண்டும். என்னுடைய தேவை
எவ்வளவு? தேவைக்கு மேலான என்னுடைய பொக்கிஷம் எவ்வளவு?
என்பதைஅவரவர்கள்தான்கண்டுபிடித்து தீர்மானிக்க வேண்டும். என்னுடைய அவசரத்
தேவைகளுக்கென என்னுடைய வங்கிக் கணக்கில் நான் சேமித்து வைப்பதும் எனக்கு
அவசியமாயிருக்கக்கூடும். எவ்வித வங்கி சேமிப்பும் இல்லாமலே தேவனை
சார்ந்திருக்கும் விசுவாசம் எல்லோருக்கும் நிச்சயமாய் இருக்காது!
இப்படிப்பட்டவர்கள் தங்கள் விசுவாச அளவின்படி தங்களின் திடீர் தேவைக்கென
வங்கிக் கணக்கில் சேமித்து வைப்பதில் எவ்வித தவறும் இல்லை. அவ்வாறு
சேமிப்பதில் எவ்வளவு சேமிக்க வேண்டும் என தீர்மானிக்கும் விஷயம்
அவரவர்களைச் சார்ந்ததேயாகும். இவ்விஷயத்தில் ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனை
நியாயந்தீர்ப்பதற்கு இடமே இல்லை!

இருப்பினும் எல்லா விசுவாசிகளுக்கும் சமமாக இயேசு அளித்த புத்திமதி
யாதெனில், "பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க
வேண்டாம்" என்பதேயாகும். ஏனெனில், நம் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
அங்கேதான் நம் இருதயமும் இருக்கும் என இயேசு எச்சரித்தார் (வசனம் 21).
உங்கள் இருதயம் எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியுமா?
"என்னுடைய சிந்தைகள் எங்கே அதிகமாய்ப் போகிறதோ" அதை வைத்து என் இருதயம்
எங்கே இருக்கிறது என்பதை நான் கண்டுகொள்ள முடியும். ஒரு காதலன் தான்
நேசிக்கும் காதலியை எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பது போல, நீங்கள்
பணத்தையும்-இன்னும் அதிகமாய் எவ்வளவு பணம் சேர்க்கலாம் என்பதையுமே
எப்போதும் சிந்திப்பவர் களாய் இருந்தால் உங்கள் இருதயம் பணத்தின்மீது
இருக்கிறது என்பதை தெள்ளத்தெளிவாகக் கண்டு கொள்ளலாம். இந்தப் பணமே,
உங்கள் தேவைக்கு அப்பாற்பட்டு நிற்கும் உங்கள் பொக்கிஷமாய் இருக்கிறது!
இவ்வாறு பூமியில் உங்கள் பொக்கிஷத்தை வைத்திருக்கும் நீங்கள்,
ஒருக்காலும் பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்த்து வைக்கவே முடியாது!

உண்மையான ஓர் இயேசுவின் சீஷனுக்கு பூமியில் பொக்கிஷம் இருக்கவே கூடாது.
நாம் இப்பூமியில் வாழ்வதற்கென உலகப்பொருட்களை வாங்கி உபயோகிக்கலாம்.
இருப்பினும் நம்முடைய இருதயமோ இவ்வுலகப்பொருட்களின் மீது நிச்சயமாய்
பற்றுதல் கொண்டிருக்கக் கூடாது.

நாம் எவைகளின்மீதுபற்றுதல்கொண்டிருக்கிறோமோ, அவைகளே நம்முடைய பொக்கிஷமாய்
மாறுகிறது! இதை எவ்வாறு சோதித் தறியலாம் என்றால், நமக்குச் சொந்தமான
உலகப் பொருட்கள் உடைந்தோ, தொலைந்தோ அல்லது அழிந்தோ போகும்போது.... நாம்
நம்முடைய மகிழ்ச்சியையெல்லாம் இழந்து துக்கத்தில் மூழ்கிவிட்டால்
"நம்முடைய பொக்கிஷம் இவ்வுலகத்தில் இருக்கிறது" என்பதையே
தெரியப்படுத்துகிறோம்!

நம்முடைய இருதயம் எப்போதுமே பரலோகத்தில் இருக்கவேண்டுமென்றே தேவன்
விரும்புகிறார்! நம்முடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே நம்முடைய
இருதயமும் இருக்கும். நாமோ நம்முடைய இருதயத்தை பூமியின்மீது வைத்திடக்
கூடாது என்பதிலேயே தேவன் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்!

தேவகிருபைக்கு களங்கம் கற்பிக்கும் வேதப் புரட்டர்கள்! - சகரியா பூணன்

இன்று அநேகர் புதிய உடன்படிக்கையின் கிருபைக்குக் கீழ் நாம்
இருக்கிறபடியால் 'இனியும்' பிரமாணங்களைக் கைக்கொள்ள வேண்டியதில்லை என்று
எண்ணுகிறார்கள். இதுபோன்றவர் களுக்காகவே இயேசு, "நியாயப்பிரமாணத்தை
அழிக்கிறதற்கு அல்ல,நிறைவேற்றுகிறதற்கேவந்தேன்" எனக் கூறினார். இவ்வாறு
புதிய ஏற்பாட்டின் கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டுவார்கள் என
யூதா தன்னுடைய நிருபத்தில் முன்கூட்டியே எச்சரித்தார் (யூதா 4). ஆங்கில
வேதாகமத்தில் 'காமவிகாரத்திற் கேதுவாய்' என்ற வார்த்தை பாவம் செய்வதற்கு
'லைசென்ஸாகப்'புரட்டுவார்கள் என்றே கூறப்பட்டுள்ளது. தேவனுடைய
பிரமாணங்களை 'மிக எளிதாய்' எடுத்துக் கொள்ளும்படி கிருபை உதவிசெய்கிறது
என்றே இவர்கள் துணிந்து கூறுகிறார்கள் !

இவ்வாறு, ஓர் தரம் குறைந்த வாழ்க்கைக்காக தேவகிருபை தரப்படவேயில்லை.
புதிய ஏற்பாட்டில் ஒருவன் பெற்றுக் கொள்ளும் தேவ கிருபை அவனைப் பாவத்தின்
வல்லமையிலிருந்து விடுதலையாக்கும் என்றேரோமர் 6:14கூறுகிறது. அதாவது
நாம்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படியேஇக்கிருபை உதவி செய்கிறது. பழைய
உடன்படிக்கையில் தன் சொந்த பெலனால் கைக்கொள்ள முயற்சித்துத் தோற்றுப்போன
ஒருவன், புதிய உடன்படிக்கையின் கீழ் பரிசுத்தாவியின் பெலனாகிய கிருபையைப்
பெற்று, தான் முன்பு தோற்றுப்போன பிரமாணங்களையெல்லாம் ஜெயமாய் கைக்
கொண்டிட முடியும்! இவ்விதமாகவே நாம் நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலை
பெற்றிருக்கிறோம்.
எப்படியெனில், கிருபையின் மூலமாய்பிரமாணங்களை என்
இருதயத்திலேயேகீழ்ப்படிகிறபடியால், வெளியரங்கமான பிரமாணத்திற்கு நான்
கட்டுப்பட அவசியமில்லாமல், விடுதலை பெற்றிருக்கிறேன். இதைத்
தெளிவுபடுத்தும்படியே இயேசு தன் சீஷர்களிடம் நியாயப்பிரமாணத்தை அழிக்க
அல்ல, அதை நிறைவேற்றுகிறதற்கே வந்தேன் எனக் கூறினார். வெறும் மோசேயின்
எழுத்தின் பிரமாணமான "விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை
செய்யாதிருப்பாயாக....." என்ற வெளியரங்கமான கற்பனையை இயேசு நிறைவேற்றாமல்
இப்பிரமாணங்களைத் "தனக்குள்" தன் சிந்தை வாழ்க்கையில் நிறைவேற்றினார்.
அதாவது, வெறும் எழுத்தின் பிரமாணத்தையல்ல,முழு ஆவியின்
பிரமாணத்தையும்அவர் நிறைவேற்றி முடித்தார்!

இவ்வாறு, அவர் நிறைவேற்றி முடித்ததுபோலவேநாமும் நிறைவேற்றும்படிஇயேசு
இப்போது நம்மை அழைக்கிறார்.

அதேசமயம் நாம் ஒரு காரியத்தினிமித்தம் இரண்டு அல்லது மூன்று தடவை
தேவனிடம் ஜெபிக்கக்கூடாது என்பதும் பொருளாகாது! ஏனென்றால், கெத்செமனே
தோட்டத்தில் ஒரே காரியத் திற்காக இயேசு மூன்று முறை ஜெபித்தார் என
மத்தேயு 26-ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். 39-ம் வசனத்தில் முதல்
தடவை ஜெபித்தார். 42-ம் வசனத்தில் இரண்டாம் தடவை ஜெபித்தார். 44-ம்
வசனத்தில் மூன்றாம் தடவை ஜெபித்தார் என்றும், "அந்த வார்த்தைகளையே
சொல்லிஜெபம் பண்ணினார்" என்றும் வாசிக்கிறோம். எனவே ஒரு விஷயத்திற்காக
நாம் தேவனிடம் பதில் பெறும்வரை மறுபடியும் மறுபடியும் ஜெபிப்பதில்
தவறில்லை. ஆனால், நாமோ வீணான அல்லது அர்த்த மற்ற வார்த்தைகளைத் திரும்பத்
திரும்ப உபயோகிப்பதையே வேண்டா மென இயேசு கூறினார்.

பிரமாணங்களின் முக்கியத்துவத்தை இயேசு போதிக்கையில்,
"நியாயப்பிரமாணத்தையானாலும், தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு
வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல,
நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும்,
நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதின் ஒரு சிறு
எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத்தேயு 5:17,18)என்றார்.
அதுவும், கற்பனைகளைக் கைக்கொண்டு ஜீவிப்பதிலும் இரு சாராரை இயேசு
குறிப்பிட்டார்! இவைகளில்சிறிதானதொன்றையும் மீறாமல் கைக்கொண்டு
போதிக்கிறவன்பரலோக இராஜ்ஜியத்தில் பெரியவன் என்னப்படுவான் என்றும்,
இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய்
மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன்
என்னப்படுவான் என்றும், அழுத்தம் திருத்தமாக கூறினார்! (மத்தேயு 5:19).
இவ்வசனத்தில், வானத்தையும் பூமியையும் காட்டிலும் தேவனுடைய பிரமாணங்களே
மேலானது என இயேசு வலியுறுத்திக் கூறியதை கவனித்துப்பாருங்கள்.
பரலோகத்திலும் தேவனுடைய பிரமாணங்களே மேன்மையாகக்
கருதப்படுவதால்,ஒவ்வொருதேவப்பிரமாணங்களையும் கைக்கொள்ளவேண்டுமென்றே இயேசு
வலியுறுத்தினார். ஆம், இதை மறுப்பவர்களை "வேதப் புரட்டர்கள்" என நாம்
அடையாளம் காண்போமாக!

தேவனிடமிருந்து பதில் பெறும் ஜெபமே நமது தேவை! - சகரியா பூணன்

நாம் சத்தத்தை உயர்த்தி ஜெபிப்பதைச் சுற்றியுள்ள ஜனங்கள் கேட்டாலும்,
நாமோ ஜனங்களை நம் மனதிலிருந்து அனுப்பிவிட்டுதேவனுக்கு முன்பாகமாத்திரமே
ஜெபிப்பவர்களாய் நின்றுவிடமுடியும்.

இன்று நமக்குத் தேவையாய் இருப்பதெல்லாம் அதிகமான ஜெபங்களல்ல . . .பதில்
கிடைக்கும் ஜெபமேஇன்றைய நம்முடைய தேவையாகும்! இந்த இரண்டு
ஜெபத்திற்குமிடையில் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. இன்று அநேக ஜெபங்கள்
தேவனுடைய இராஜ்யத்தில் வலிமையற்றதாகவே இருக்கிறது. ஓர்சுத்த
இருதயத்திலிருந்துஅந்தரங்கமாய் அவருடைய சமூகத்தில் ஏறெடுக்கப்படும்
ஜெபங்களை மாத்திரமே தேவன் ஏற்றுக் கொண்டு, அந்த ஜெபங்களுக்குப் பதிலும்
தருகிறார்!!

நாம் எவ்வாறு ஜெபிக்கக்கூடாது என்பதைத் தொடர்ந்து இயேசு
வலியுறுத்தியபோது, "அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்"
என எச்சரித்தார். அஞ்ஞானிகள் தங்கள் பிரார்த்தனையில் அநேக வார்த்தைகளைச்
சொல்லி ஜெபித்துவிட்டால் அதை கடவுள் கேட்டு விடுவார் என எண்ணுகிறார்கள்.
இதுவும் ஒரு கொடிய வஞ்சகமாகும். இவர்களைப்போலவே இன்றைய கிறி°தவர்களின்
நிலையும் பரிதாபமாகவே இருக்கிறது. தொடர்ந்து மூன்று மணிநேரங்கள்
ஜெபித்தால் தேவன் உடனடியாகக் கேட்பார் என்றும், ஒருநிமிடம் மாத்திரமே
ஜெபிக்கும் ஜெபத்தை அவர் கேட்க மாட்டார் என்றும் இவர்கள்
எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால், இயேசு இவ்விஷயத்தைக் குறித்து என்ன
எண்ணுகிறார் என்பதைக் கவனியுங்கள். நீங்கள் நீண்ட நேரம் ஜெபிக்கிறீர்களா
என்பதைவிட உங்கள் ஜெபத்தில்விசுவாசம்இருந்தால், "எல்லாம் உங்களால்
கூடும்" என்றே கூறுகிறார். மேலும், விடாமுயற்சியான உறுதியும்
ஜெபத்திற்குத் தேவையானதாகும்.

ஆம்,
1) சுத்த இருதயம்
2) விசுவாசம்
3) விடாமுயற்சி
ஆகிய இவைகளே தேவனுடைய மகிமைக்காக ஜெபிக்கும் ஜெபத்திற்குத்
தேவையானதாகும். மாறாக, அநேக வசனிப்புகளான வார்த்தைகள் அல்ல!

அதேசமயம் நாம் ஒரு காரியத்தினிமித்தம் இரண்டு அல்லது மூன்று தடவை
தேவனிடம் ஜெபிக்கக்கூடாது என்பதும் பொருளாகாது! ஏனென்றால், கெத்செமனே
தோட்டத்தில் ஒரே காரியத் திற்காக இயேசு மூன்று முறை ஜெபித்தார் என
மத்தேயு 26-ம் அதிகாரத்தில் þநாம் வாசிக்கிறோம். 39-ம் வசனத்தில் முதல்
தடவை ஜெபித்தார். 42-ம் வசனத்தில் இரண்டாம் தடவை ஜெபித்தார். 44-ம்
வசனத்தில் மூன்றாம் தடவை ஜெபித்தார் என்றும், "அந்த வார்த்தைகளையே
சொல்லிஜெபம் பண்ணினார்" என்றும் வாசிக்கிறோம். எனவே ஒரு விஷயத்திற்காக
நாம் தேவனிடம் பதில் பெறும்வரை மறுபடியும் மறுபடியும் ஜெபிப்பதில்
தவறில்லை. ஆனால், நாமோ வீணான அல்லது அர்த்த மற்ற வார்த்தைகளைத் திரும்பத்
திரும்ப உபயோகிப்பதையே வேண்டா மென இயேசு கூறினார்.